Welcome to My Website


சோம்பு:
இதில், உப்புச் சத்து உள்ளது; குடல் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை பெருக் கும் தன்மை கொண்டது. எனவே, ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சீரகம்: விட்டமின் ஏ, சி சத்துகள் கொண்டவை. எல்லாருக்குமே நல்லது என்றாலும், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பித்தத்தை தணித்து, பிரஷரை குறைக்கும். உடல் உஷ்ணத்தை சீராக வைத்திருக்க உதவும்.

வெந்தயம்:
இரும்பு, கால்சியம் சத்துகள் கொண்டது. வளரும் குழந்தைகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது. உடலை இளைக்கச் செய்யும் குணம் கொண்டது. நீரிழிவை தடுக்கும். தாய்ப்பாலை பெருக்கும்.

மிளகு:
காப்சைன் எனும் சத்து உள்ளது. இதய நோய், ரத்த கொதிப்பு, மூச்சுத் தொந்தரவு, ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள், உணவில், மிளகாய்க்கு பதில் மிளகை சேர்க்க, நோயின் கடுமை குறையும். நஞ்சை முறிக்கும். கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. கொழுப்பு அடைப்பையும் விலக்கிடும்.

ஏலக்காய்:
விட்டமின் சி, பி12 சத்து கொண்டது. நீரிழிவு நோய் மற்றும் கண் பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு மிகவும் நல்லது. கண் பார்வைக்கு நல்லது. செரிமானத்தை தூண்டும்.

முந்திரிப் பருப்பு:
புரதம், கொழுப்பு, விட்டமின் இ சத்து கொண்டது. பித்தம் அதிகம் உள்ளவர்களும், இதய நோயாளிகளும் இதை சாப்பிடக் கூடாது. மிளகுடன் முந்திரியை வறுத்து சாப்பிட உடல் பெருகும்.

கிராம்பு:
இரும்பு மற்றும் கால்சிய சத்து நிறைந்தது. தொண்டை வலி, ரணம், வறட்டு இருமல் உள்ளவர் களுக்கு மிகவும் நல்லது. பல்வலியை போக்கும் குணம் கொண்டது. உடல் உஷ்ணத்தை சீர்படுத்தும். கிருமி நாசினியாக பயன்படும். வாய் துர்நாற்றத்தை போக்கக் கூடியது.

மஞ்சள்:
‘டானின்’ எனப்படும் “ஆன்டி ஆக்ஸிடெண்ட்’ உள்ளது. வறட்டு இருமல் உள்ளவர்களுக்கும், அடிக்கடி நோய்வாய்படுபவர்களுக் கும் மிகவும் நல்லது. வாழ்நாளை நீடிக்கச் செய்யும் தன்மை கொண்டது. நோய் தடுப்பாற்றலை பெருக்கும். கிருமிகளை கொல்லும். பித்தத்தை தணிக்கும். காசநோய் கிருமிகளை அழிக்கும். திசுக்களின் ஆயுளை நீடிக்கச் செய்யும்.

இஞ்சி:
கால்சியம், கார்போ ஹைட்ரேட், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட், விட்டமின் ஏ சத்து நிறைந்தது. அஜீரணக் கோளாறு, மூச்சுத் தொல்லை, மூட்டுவலி உள்ளவர்க ளுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப் புண் உள்ளவர்கள் தவிர்க்கவும், பித்தத்தை தணிக்கும் குணம் கொண்டது. வாயுத் தொல்லையை நீக்கும். ஆயுளை நீடிக்க செய்யும். கொழுப்பை கரைக்கும்.

பூண்டு:
விட்டமின் சி, ஏ உள்ளது. பாலில் பூண்டு மற்றும் தேன் கலந்து, தினமும் பருகிவர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும். மூட்டுவலியை போக்கும். வாயுப்பிடிப்பை நீக்கும்.

ஓமம்:
விட்டமின் பி, இரும்பு சத்து கொண்டது. வயிற்று உப்புசம் தொல்லை உள்ளவர்களுக்கு நல்லது. தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் டாக்டர்களின் ஆலோசனை இன்றி சாப்பிடக் கூடாது. பித்தம், வாயுவை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது. துரித செரிமானத்துக்கு உதவும்.

பெருங்காயம்:
கால்சியம் சத்து கொண்டது. தடிப்பு, அரிப்பு போன்ற “சரும நோய்’ உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வெள்ளைபடுதல் உள்ளவர்கள் இதை சாப்பிடக் கூடாது. வெள்ளைப்படுதலை அதிகரிக்க செய்யும்.

மைக்ரோ அவனில் சேமியா உப்புமா செய்வது எப்படின்னு
பார்க்கலாம் வாங்க.


INGREDIENTS பட்டியல் வறுத்த சேமியா - 2 கப், நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1, பச்சை மிளகாய்- 1 நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்,
கறிவேப்பிலை கொஞ்சம், தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, எண்ணெய். சுடு தண்ணீர் - 2 கப், உப்பு தேவைக்கேற்ப
1. மைக்ரோ வேவ் பாத்திரத்தில் தாளிக்க கொடுத்திருக்கும்
சாமான்களை சேர்த்து மூடி 3 நிமிடம் வைக்கவும்.
(மூடாமல் வைத்தால் கடுகு, எண்ணெய் ஆகியவை தெளித்து
அவனை சுத்தமாக துடைக்க வேண்டியது ஆகும்)

2. எடுத்து வெங்காயம் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள்
வைக்கவும்.

3.வறுத்த சேமியா, சுடு தண்ணீர், உப்பு சேர்த்து
நன்கு கலக்கி 5 நிமிடங்கள் மைக்ரோ ஹையில்
வைக்கவும்.

4. எடுத்து ஒரு முறை நன்கு கிளறி தேவையெனில்
மேலும் 2 நிமிடங்கள் வைக்கவும்.

சேமியா உப்புமா ரெடி.

அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள் இன்ன உணவு இன்ன தன்மையுடையது என்பதை உணர்ந்து உடல்நலனில் கவனமாக இருந்திருக்கின்றனர். இப்போது பலருக்கு என்ன உணவுப்பொருள் என்ன கலோரி என்று கவனமிருக்கிறது உடல் பருமனாகிவிடும் என்ற பயத்தின் காரணமாக , ஆனால் அதில் என்ன
சத்து இருக்கிறது அதை எப்போது சேர்ப்பது எப்போது சேர்க்காமல் இருப்பது என்பது தெரிவதில்லை. அவசரயுகத்தில் எளிதாக சமைப்பதையும் , உடலுக்கு ஒன்று என்றால் மருத்துவர் மட்டுமே கதி என்று இருப்பதையும் இளந்தலைமுறை பழகிக்கொண்டிருந்தால் நம் பாரம்பரிய பெருமைகள் பழம்பெருமைகளாகி அழிந்து விடும்.

இங்கே சில பொருட்களின் தன்மைகள்

உடற்சூட்டை தணிப்பவை
பச்சைப்பயிறு , மோர் , உளுந்தவடை , பனங்கற்கண்டு , வெங்காயம் , சுரைக்காய் , நெல்லிக்காய் , வெந்தயக்கீரை , மாதுளம் பழம் நாவற்பழம் , கோவைக்காய் , இளநீர்

ருசியின்மையைப் போக்குபவை

புதினா , மல்லி , கறிவேப்பிலை , நெல்லிக்காய் , எலுமிச்சை , மாவடு , திராட்சை , வெல்லம் , கருப்பட்டி , மிளகு , நெற்பொறி

சிவப்பணு உற்பத்திக்கு

புடலைங்காய் , பீட்ரூட் , முருங்கைக்கீரை , அவரை , பச்சைநிறக் காய்கள் , உளுந்து , துவரை , கம்பு , சோளம் கேழ்வரகு ,பசலைக்கீரை

மருந்தை முறிக்கும் உணவுகள்

அகத்தி , பாகற்காய், வேப்பிலை , நெய் , கடலைப்பருப்பு , கொத்தவரை , எருமைப்பால் . சோம்பு , வெள்ளரிக்காய்

விஷத்தை நீக்கும் உணவுகள்

வெங்காயம் , பூண்டு , சிறுகீரை , வேப்பிலை , மிளகு , மஞ்சள் , காயம்

பித்தம் தணிப்பவை

சீரகம் , கருப்பட்டி , வெல்லம் , சுண்டைவற்றல் செவ்விளநீர் , அரைக்கீரை , எலுமிச்சை

இன்னும் எத்தனையெத்தனையோ இருக்கும் நான் எழுதியவை சில மட்டுமே. அவரவர் வீட்டில் இருக்கும் வயதானவர்களிடம் கேட்டு மேலும் தெரிந்து கொள்ளுங்கள் . அனுபவத்தில் சிறந்த வயதானவர்களின் பொக்கிஷத்தை மூடி சாவியைத் தொலைத்து விடாதீர்கள் .

தேவையானப் பொருட்கள்
மைதா மாவு – 100 கிராம்
தேன் - 60 மிலி
முட்டை – 5
கேஸ்டர் சுகர் – 150 கிராம்
பேக்கிங் பவுடர் - 3/4 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி
மைதா மாவை சலித்து வைத்துக் கொள்ளவும். மற்ற மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
முட்டையுடன் கேஸ்டர் சுகரை சேர்த்து அடிக்கவும்.
அதன் பின்னர் இந்த கலவையில் தேனை சேர்த்து நன்கு அடிக்கவும். கலவை ரிப்பன் பதத்திற்கு வரும்வரை(சுமார் 10 நிமிடங்கள்) அடிக்கவும்.
பிறகு எசன்ஸ் ஊற்றி கலந்து அதில் மாவை சிறிது சிறிதாக தூவி கலக்கவும். மாவை கலக்க மட்டும், பீட்டரை பயன்படுத்தாமல் கரண்டியை போட்டு மென்மையாக கலக்கவும்.
ஓவனை 350 F முற்சூடு செய்யவும். எல்லாம் ஒன்றாக சேரும்படி நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
பேக்கிங் ட்ரேயில் பார்ச்மெண்ட் பேப்பர் /ஃபாயில் பேப்பரை போட்டு பின் கலவையை அதில் ஊற்றவும்.
பின் கலவையை 30 நிமிடங்கள் ஓவனில் வைத்து பேக் செய்து எடுக்கவும்.
தித்திக்கும் தேன் கேக் தயார். இதில் தேனின் சுவை தூக்கலாக தெரியும். தேன் சுவை பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்
மைதா - 100 கிராம்
ரவை - 100 கிராம்
டால்டா - 200 கிராம்
ஏலக்காய் - 2
சீனி - 150 கிராம்
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
உப்பு - சிறிதளவு
பொரிப்பதற்கு எண்ணெய் - கால் கிலோ
செய்முறை
மைதாவை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். ரவாவை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மைதா, ரவா, சீனி, தேங்காய், ஏலக்காய், டால்டா, உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு அதனை எடுத்து ஒரு ட்ரேயில் பரப்பி, பிஸ்கட் அளவு வெட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

நம்மில் பல பேர் சிறு தலைவலி, சளி, காய்ச்சல் போன்றவற்றிக்கு கூட உடனே மருந்து சாப்பிட்டு விடுவார்கள். இதில் என்ன தவறு இருக்கு! தலைவலி காய்ச்சல் என்றால் மருந்து எடுத்துக்கொண்டால் தானே சரி ஆகும்! என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

நான் கூறுவது சிறு தலைவலி மற்றும் தொடக்க காய்ச்சலுக்கு மட்டுமே! தீவிர பிரச்சனைக்கு அல்ல.

நமக்கு அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததே. அதனால தான் இது ஒரு சிலருக்கு அடிக்கடி ஏற்படுகிறது. கொஞ்சம் தண்ணீர் மாறினாலோ, தட்பவெட்ப நிலை மாறினாலோ இதன் தாக்கம் அதிகமாக இருக்கும், இதற்க்கு முக்கிய காரணம் நம் உடல் அந்த மாற்றத்தை ஏற்று கொள்ளக்கூடிய அளவிற்கு திராணி இல்லாததே காரணம்.

கொஞ்சம் (நிறைய) பேருக்கு, இப்படின்னா காய்ச்சல் தலைவலி சளி வந்து விடும் அவர்களை கவனித்தீர்கள் என்றால் அவர்கள் அதிகம் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களா இருப்பார்கள்.

ஒரு சிலருக்கு இவைகள் அவர்கள் பக்கமே வராது அப்படியே வந்தாலும் விரைவில் சரியாகி விடும், காரணம் இதை போல நேர்ந்தால் உடனடியாக மருந்து உட்கொள்ள மாட்டார்கள். ஏதாவது சூடா காஃபி, தூக்கம் அல்லது ரசம் சாதமோடு முடித்து கொள்வார்கள்.

நம் உடலுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையே ஏதாவது நம் உடலுக்கு நேர்ந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனபது தான். நமக்கு ஏற்படும் பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நம் உடல் இருக்கும். எனவே அது செய்து முடிக்கும் முன்பே நாம் மருந்து எடுத்துகொண்டால் நம் உடல் அதற்க்கு பழகி விடும். எனவே வரும் தலைவலி காய்ச்சல் போன்றவற்றை தடுக்க முயற்சிகள் எடுக்காது, அப்படி வந்தவற்றையும் எளிதில் குணப்படுத்தாது, எனவே நீங்கள் மருந்து சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் என்ற நிலைக்கு உங்கள் உடல்நிலை வந்து விடும்.

முதலில் தலைவலிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டவர்கள், போக போக இரண்டு மூன்று சாப்பிட்டால் தான் சரி ஆகும் என்ற நிலைமை வந்து விடும் அல்லது ஸ்ட்ராங்கானா மருந்து உட்கொண்டால் மட்டுமே கேட்கும் படி நம் உடல் பழகி விடும், அதோடில்லாமல் நமது உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைந்து அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் போன்றவைகள் ஆக்கிரமித்து கொள்ளும், உடனே குணமும் ஆகாது ஒரு வாரத்திற்கு மூக்கை உறிஞ்சுகிட்டு இருக்க வேண்டியது தான்.

இதை போன்ற நிலையை தவிர்க்க மருத்துவரிடம் செல்லாமல் நீங்களே தலைவலிக்கும் சளிக்கும் காய்ச்சலுக்கும் (Saridon, Crosin, Vicks action 500, Metacin, Anacin(temporarily relieves minor aches and pains due to headache) போன்றவை) மருந்து உட்கொள்வீர்கள் தானே, அந்த சமயங்களில் அதற்க்கு பதிலாக ஒரு தூக்கமோ, சூடாக ஒரு காஃபியோ அல்லது ரசம் சாதம் மட்டுமோ சாப்பிட்டு நன்கு ஓய்வு எடுத்தாலே போதுமானது. இரவில் படுக்கும் போது வயிற்று வலி வந்தால் உடலின் உஷ்ணமாக கூட இருக்கலாம், இதற்க்கு சிறிது வெந்தயத்தை மோரில் கலந்து சாப்பிட்ட பிறகு தூங்கினால் சரி ஆகி விடும்.

இதை போல செய்ய முடியாத நிலைமையில் இருந்தால் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

மருந்து மாத்திரைகளை தவிர்த்தால் மட்டுமே (அவசியமான நேரங்களில் அல்ல) நமது உடல் நலம் சிறப்பாக இருக்கும், இதை போல தொந்தரவுகள் நம்மை நெருங்காது.

டிஸ்கி

மேற்கூறிய அனைத்தும் தொடக்க நிலைக்கு மட்டுமே, இதற்காக நாமே மருத்துவராக கருதி கொண்டு அலட்சியமாக இருந்து விடக்கூடாது, குணமாகவில்லை என்றால் மருத்துவரை அணுகி சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்
இடியாப்ப மாவு - 2 கப்
துவரம்பருப்பு - அரை கப்
துருவிய தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 4
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் இடியாப்பங்கள் தயார் செய்து எடுத்து, அவற்றை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
போதுமான நீரில் துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, மிளகாய்வற்றல் சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் வேக வைத்த பருப்பு, தேங்காய்த்துருவல், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சுமார் கால் மணி நேரம் கொதிக்க விடவும்.
அதன் பின்னர் இந்த கரைசலை உதிர்த்த இடியாப்பத்தின் மேல் ஊற்றி, கிளறி பரிமாறவும்.

விளம்பரங்கள்