மன இறுக்கம், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இசை கேட்பதாலோ, அல்லது நூல்களைப் படிப்பதாலோ அதிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இசைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அனைவரையும் ஆட்டுவிப்பது இசை. இதேபோல் நம்மில் பலர் புத்தக ஆர்வலராக இருப்போம்.
இத்தகைய பழக்க வழக்கங்களால் நமக்கு ஏற்படும் மன அழுத்தம் குறைவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மன அழுத்தம், டென்ஷனாக இருக்கும்போது புத்தகத்தைப் படித்து பலர் அதிலிருந்து விடுபட முயல்கின்றனர். நூல்களைப் படிக்கும் போது அதிலேயே மனம் ஆழ்ந்து விடுவதால் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பில்லை.
தொடர்ந்து 6 நிமிடங்கள் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் மன அழுத்தம் படிப்படியாகக் குறைகிறது. படிக்கும்போது இதயம், தசைகளில் ஏற்படும் படபடப்பு படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலை ஏற்படுவதாக, இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டேவிட் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
புத்தகம் படிப்பதால் 68 சதவீதம் மன அழுத்தம் குறைகிறது. இசையைக் கேட்பதன் மூலம் 61 சதவீதமும், தேநீர் அருந்துவதால் 54 சதவீதமும் மன அழுத்தம் குறைவதாக, அவர் மேலும் கூறியுள்ளார்.
எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் அருகம்புல், இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்குள்ளது.
முழுமுதற்கடவுளான விநாயகருக்கு உகந்த வழிபாட்டுப் பொருளாக அருகம்புல் கருதப்படுகிறது. ஆனால், இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. அருகம்புல்லில் சாறு எடுத்து உட்கொண்டால் உடல் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.
தயாரிப்பது எப்படி?
கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைபடுத்த வேண்டும்.
பின்னர் அருகம்புல்லுடன் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்து, (தேவைப்பட்டால்) துளசி, வில்வம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுக்க வேண்டும். வீட்டில் மிக்ஸி இருப்பின், அதைப் பயன்படுத்தியும் சாறு தயாரிக்கலாம்.
காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவில் இதை பருகலாம்.
மருத்துவ குணங்கள்:
* அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.
* உடல் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக உள்ளது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அது சீராக்குகிறது.
* வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.
* நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.
* நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.
எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்கு கிடைக்கிறது. காலை நேரங்களில் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வோர் இதை பெருமளவில் வாங்கி பருகுகின்றனர்.
சேலம் ஜங்சன், உழவர் சந்தை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் கூட அதிகாலை நேரங்களில் அருகம்புல்சாறு கன ஜோரில் விற்பனையாவதைப் பார்க்கலாம்.
தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.தோற்றம் :அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும்.அடங்கியுள்ள பொருட்கள் :ஈரப்பதம் _ 73 சதம், புரதச்சத்து _ 83 சதம். தாதுஉப்புக்கள் _ 3.1 சதம், நார்ச்சத்து _ 2.2 சதம், மாவுச்சத்து _ 12 சதம், கொழுப்புச்சத்து _ 1.4 சதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன. தாதுஉப்புக்களில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. வைட்டமின் _ ஏ, தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் _ சி போன்றவை அடங்கியுள்ளன.மேலும் மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.குணங்கள் :இதற்கு நச்சை நீக்கும் குணமுள்ளதாகையால், பொதுவாக மருந்துண்ணும் காலங்களில் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.எப்படிப் பயன்படுத்தலாம்?இலையை கீரையாக நறுக்கி வதக்கி உண்ணலாம், குழம்பிலிட்டு பயன்படுத்தலாம். பூக்களையும் வறுத்து உண்ணலாம், பூக்களை கஷாயமாக்கி அருந்தலாம். இலைச்சாறை தேனில் கலந்து அருந்தலாம்.மருத்துவப் பயன்கள்
பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் மாறும்அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும்.இலைச்சாறை உறிய, தலைநீர் இறங்கும்.அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும்.அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும்.அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.இக்கீரையை உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் தீரும்.பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும்.அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி தீரும்.அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் தீரும்.அகத்திப்பூ சாறு இரு துளி மூக்கில் விட தலைநீர், ஜலதோஷம் தீரும்.அகத்தி மரப்பட்டை கஷாயம், காய்ச்சலின்போது உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது.வேர்ப்பட்டையை அரைத்து வாதவலி மேல் பூசிவர வலி மாறும்.அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும்.இக்கீரை பித்த நோயை நீக்கும்.இக்கீரை, உடல் சூட்டைத் தணிக்கும்
வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும். aகஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.வெந்தய லேகியம்: வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்
ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவலி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வற்றை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.காரணம்:குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுணர்வு ஆனந்தம்.அறிகுறிகள்:இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள்தீர்வுகள்:பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.
1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.3.கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.5.அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.6. 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம். இதுமிகவும் விலைமதிப்பானது.7. (அ)200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு(ஆ)100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300 மிலி கேரட் சாறுஇந்த இரண்டு கல்வைகளில் ஒன்றை தினமும் பருக வேண்டும்.8.வாசனை எண்ணெயால் தலைக்கு ஒத்தட்ம் தரலாம். தேய்த்து விடலாம்.செய்ய வேண்டியவை:
1. விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சைஇலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.2. 2-3 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறி சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்)மட்டும் உண்ணலாம். நீர் அதிகமாக பருக வேண்டும்.3. தூங்குவதற்கு முன் சூடான நீரால் வற்றிற்கு ஒத்தடம் தரலாம்.4. தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது பட்டையையோ கட்டிக் கொள்ள வேண்டும்.தவிர்க்க வேண்டியவை:1. புகை மற்றும் மது. இவை தலைவலியை தூண்டக் கூடியவை.2. வெயிலில் அலைவது.3. காரமான உணவு வகைகள்.4. வயிறு முட்ட சாப்பிடுதல்.5. தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை
பொதுவாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்... வெள்ளைப்படுதல் என்பது பரம்பரை நோயல்ல... தாய்க்கு வந்தால் மகளுக்கும் வருவதற்கு. அது உஷ்ணம் என்னும் வெட்டைச் சூட்டால் ஏற்படுவது. உங்களுக்கு இருப்பது போலவே உங்கள் மகளுக்கும் சூட்டாு உடம்பாக இயற்கையிலேயே இருந்தால், அவருக்கும் வெள்ளைப்படுதல் வருவதற்கு வாய்ப்புண்டு. மற்றபடி அம்மாவுக்கு, பாட்டிக்கு இருப்பதாலேயே மகளுக்கு வரும் என்பதெல்லாம் இல்லை’’ என்று நான் கூறிக்கொண்டிருக்கும்போதே அந்தப் பெண்மணியின் மகள் என்னிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். ‘‘அப்போ வெள்ளைப்படுறது எப்படித்தான் தோன்றுகிறது டாக்டர்?’’‘‘பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பி அதிகரித்து விடுவதால் உஷ்ணம் ஏற்பட்டு, கருப்பையின் வாய்ப் பகுதியில் பெண்களுக்குக் கட்டிகள், புண்கள் மற்றும் சதைகள் தோன்றுகின்றன. வெள்ளைப்படுதல் ஏற்பட இதுதான் முக்கிய காரணமாகிறது. கருப்பையில் ஏற்படும் பால்வினை நோய்க் கிருமிகளின் தொற்று, கருப்பை இடம் விட்டு இடம் மாறல், இரத்தக் குறைவு, கருப்பை பலவீனம், வீக்கம், முறையற்ற புணர்ச்சி முறையால் கருப்பை தாபிதம், அடிக்கடி பிள்ளைப்பேறு, மனக்கவலை, கடின வேலை, மிகுதியான உடலுறவு போன்றவைகளினால் கூட பெண்களுக்கு இந்த வெள்ளைப்படுதல் நோய் ஏற்பட்டு பெரும் வேதனை தருகிறது.சினைப்பையிலிருந்து சினை முட்டை கருப்பை நோக்கிப் போகும்போதும் உடலுறவின் உச்ச நேரத்திலும்கூட இந்த வெள்ளைப்படுதல் ஏற்படும். சிலருக்கு மாதவிலக்கிற்கு முன்பாக இது கூடுதலாக இருக்கும். மாதவிலக்கு வருவதற்கான அறிகுறியாக இது தென்படும். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இந்த வெள்ளைப்படுதல் நோய் உண்டாகும். மாதவிலக்கு தோன்றி 8 தினங்களுக்குப் பின்புகூட சிலருக்கு இந்நோய் ஏற்படுவதுண்டு.’’ ‘‘டாக்டர், வெள்ளைப்படுதலில் வகைகள் உண்டா? எனக்கு ஏற்பட்டது எந்த மாதிரியான வெள்ளைப்போக்கு?’’ என்றார் அந்தப் பெண்மணி.‘‘வெள்ளைப்படுதலில் பெண்களுக்குப் பெண்கள் வித்தியாசம் இருக்கும். மஞ்சள் நிறத்தில் சிலருக்கும், பச்சை நிறமாக ரத்தத்துடனும் சிலருக்கு வெள்ளைப்படுதல் வெளியேறும். சிலருக்கு நிணநீருடன் ரத்தமும் கலந்து துர்நாற்றத்துடன் வெளிவரும். உங்களுக்கு ஏற்பட்டது முற்றுவதற்கு முந்தைய நிலை வெள்ளைப்படுதல். இன்னும் கொஞ்ச காலம் கவனிக்காது விட்டிருந்தாலும், அது உங்களை பிறப்புறுப்பு புற்றுநோயில் கொண்டு போய் தள்ளியிருக்கும். வெள்ளைப்படுதலின்போதே பெண்கள் உஷாராகிவிட வேண்டும். குறைந்தபட்சம் துர்நாற்றம் ஏற்படும்போதாவது கவனித்தாக வேண்டும். இல்லையெனில் வெள்ளைப்படுதல் மோசமான விளைவுகளை பெண்களிடம் ஏற்படுத்திவிடும். பிறப்புறுப்பின் செல்களை அழிக்கும். கருப்பை உட்பகுதியில் சதை வளர்ச்சியை ஏற்படுத்தும். கருச்சிதைவை உண்டாக்கும். நுண்ணுயிர்த் தாக்குதலை ஏற்படுத்தும். இறுதிக் கட்டத்தில் புற்றுநோயை உண்டாக்கி ஆளையே காலி செய்துவிடும்.’’இருவரின் முகத்திலும் அதிர்ச்சி தென்பட்டது. பயந்துகொண்டே மகள் கேட்டார். ‘‘வெள்ளைப்படுறது ஒருத்தர்கிட்டருந்து இன்னொருத்தருக்குப் பரவுமா டாக்டர்?’’‘‘சாதாரணமாகப் பரவாது. ஆனால், வெள்ளைப்படுதல் உள்ள பெண்களின் பேண்ட்டீஸ், பாவாடை போன்றவற்றை அடுத்த பெண்கள் அணிய நேரும்போது அவர்களுக்கு இது தொற்றக்கூடிய வாய்ப்பிருக்கிறது. அதேபோல், வெள்ளைப்படுதல் உள்ள பெண்ணைப் புணரும் ஆண்களுக்கும் பாதிப்பு ஏற்படும். பிடரி ஜன்னி என்னும் நோயால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.’’பிரமிப்பு விலகாத முகத்தோடு அந்தப் பெண்மணி கேட்டார்... ‘‘வெள்ளைப்படுதலை சித்த வைத்தியத்தின் மூலம் ஆரம்பத்திலேயே எப்படி எளிதாக குணப்படுத்தலாம் டாக்டர்?’’‘‘இந்நோயை விரட்டுவது மிகவும் சுலபமான ஒன்றுதான். ஆரம்ப நிலையிலேயே இதனைக் கண்டறிந்து மருத்துவம் பார்த்தால் குணப்படுத்துவது மிகவும் எளிது. ஆனால், நம் பெண்கள் வெட்கப்பட்டுக்கொண்டு இப்பிரச்னை குறித்து வெளியே சொல்வதில்லை. முற்றிய பிறகுதான் முனகுகிறார்கள். சித்த மருத்துவத்தில் இதற்கென ஏராள மருந்துகள் உள்ளன. உலர்ந்த மணத்தக்காளி சாறெடுத்து பசும்பாலில் கலந்து குடிக்கலாம். வெள்ளை கல்யாணப் பூசணியை சமைத்துச் சாப்பிடலாம். செம்பருத்தி இலைக் கொழுந்தை பாலில் அரைத்துச் சாப்பிட இந்நோய் விலகும். கருவேலம் கொழுந்தையும் அரைத்துச் சாப்பிடலாம். கொன்றைப் பூவை அரைத்து பாலில் கலந்து அருந்தலாம். புளியங்கொட்டை தோலைப் பொடிசெய்து தேன் சேர்த்துப் பருகலாம். இதெல்லாம் வெள்ளைப்படுதலுக்கான எளிய சித்தவைத்திய முறைகள். வெள்ளைப்படுதலின் அளவு, நோயாளியின் தன்மை போன்றவற்றை கருத்தில் கொண்டு வைத்திய முறைகள் மாறும்’’
மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.2)முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.அறிகுறிகள்:மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.காரணம்:முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும்.பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.கைவைத்தியம்:1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.உணவுப்பழக்கம்:* வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.* கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.
வாய்ப் பகுதியில் உண்டாகக் கூடிய நோய்களில் இதுவும் ஒன்றாகும். கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டவர் இதற்கு யா-கோன் என்று தமது மொழியில் பெயரிட்டு அழைத்தார்கள். இதன் அர்த்தம், பற்களைச் சுற்றியிருக்கும் மென்மையான தசைப் பகுதியில் உருவாகும் நோய் என்பதாகும். தற்காலத்தில் விஞ்ஞானமும் மருத்துவமும் மிகவும் முன்னேறியிருக்கும் நிலையிலும் கூட, ஈறுகளிலிருந்து குருதி வடிதல் வாய்ப்பகுதியைப் பாதிக்கின்றது.
ஈறுப் பகுதியில் நோய் உண்டாவதற்கான அறிகுறியே இரத்தம் வடிதலாகும். சரியாக சொல்லப் போனால் ஈறிலிருந்து குருதி வடிதல், பல்லெயிற்று வீக்கம் என்ற நோயிற்கான அறிகுறியாகவே கூடுதலாக தோன்றும். இதைச் சரியாக கவனிக்காவிட்டால்; பின்பு இந் நோய் முற்றி, ஆபத்தான பற்குழி நோயை உண்டாக்கிவிடும். இவற்றிற்கும் சிகிச்சை செய்யாவிடில் பின்பு பற்கள் தானாகவே கழன்று விளத்தொடங்கும்.
கூடுதலானோருக்கு ஈறிலிருந்து குருதி வடிதல் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உருவாவதுண்டு. இது பொதுவாக இனிப்பு கூடிய மேற்கத்திய நாட்டு உணவுகளை கூடுதலாக உட்கொள்ளும் போது அவ் உணவிலுள்ள இனிப்பு, பற்களிலுள்ள பற்றீரியா கிருமிகளின் விருத்திக்குக் காரணமாகி, இக்கிருமிகள் ஈறுப் பகுதியை பாதிக்கத் தொடங்கும்.
இந் நோய் உருவாகாமலிருக்க ஒரு நாளிற்கு இரு முறையாவது பல் துலக்குங்கள். அத்துடன் இனிப்புப் பண்டங்கள் உண்பதை குறைப்பதுடன், ஒழுங்கான இடைவெளியில், பற்சிகிச்சை நிபுணரிடம் சென்று உங்கள்பற்களைப்பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
நோய் உண்டாவதற்கான காரணங்கள்
பற்களின் கழுத்துப் பகுதியை சுற்றியுள்ள மென்மையான தசைப்பகுதியில், பல்லெயிற்று வீக்கம் ஏற்பட்டு இதன் காரணமாக பற்களை தசையுடன் பிடித்து வைத்திருக்கும் வேர்கள் நலிவடைந்து போகும்.
இனிப்பு பண்டங்களையோ அல்லது பானங்களையோ அருந்தியதன் பின்பு பல் துலக்காமல் விடும் போது இந் நேரங்களில் பற்றீரியாக் கிருமிகளின் விருத்தி அதிகரிக்கும். ஆகவே ஒழுங்கான முறையில் பல் துலக்குவதன் மூலமும், உணவை உட்கொண்ட பின்பு நன்றாக வாயை கொப்பளிப்பதன் மூலமும் வாய்ப்பகுதியை சுத்தமாக வைத்திருக்கலாம்.
பெண்கள் கர்ப்பமுற்றிருக்கும் போது ஈறுப்பகுதி கூடுதலாக மென்மையடைவதால், அதன் மூலம் குருதி வடிதல் அதிகரிக்கும். இந் நிலையில் கூடுதலாக பற்சிகிச்சை நிபுணரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.
விற்றமின் ஊ குறைவு, குருதி உறையாக் கேடு, வெண்புற்று நோய் போன்றன ஏற்பட்டாலும் ஈறிலிருந்து குருதி உண்டாக வாய்ப்புண்டு.
நோயின் அறிகுறிகள்.
சில வேளைகளிரல் குருதி வடியும் போது சாதுவான நோவு ஏற்படும்.
பற்களை துலக்கும் போதோ, வாயைக் கொப்புளிக்கும் போதோ, உமிழ் நீரிலோ இரத்தம் காணப்படும்.
மொறுமொறுவான உணவுப் பண்டங்களை உட்கொள்ளும் போது குருதி வடிதல் உண்டாகும்.
ஈறிலிருந்து தான் குருதி வடிகிறதென்பதை எப்படி அறிந்து கொள்ளலாம்?
பற் சிகிச்சை நிபுணர் பற்களிற்கும் அதன் தசைக்கும் இடையில் நீண்ட கூரான இரண சிகிச்சை ஆயுதத்தை செலுத்தி பார்ப்பதன் மூலம் குருதி எங்கிருந்து வடிகிறதென்பதை கண்டு கொள்வார்.
இரத்தப் பரிசோதனை மூலம் குருதி உறையாக் கேடு நோய் உண்டாகியிருக்கிறதா என்பதை கண்டு பிடிக்கலாம்.
இந் நோயிற்கான சிகிச்சை முறைகள் என்ன?
பற்களை சுத்தமாக வைத்திருப்பதுடன் பற்றீரியாக் கிருமிகள் உண்டாதற்கான மூல காரணத்தை கண்டு பிடித்து அகற்றுதல் வேண்டும்.
விற்றமின் குறைவால் உண்டாகியிருந்தால் அதற்கான விற்றமின் மாத்திரைகளை எடுத்தல் வேண்டும்.
சிற்றிரஸ் பானங்கள், மொறுமொறுவான உணவுகள், கார உணவுகள், மதுபானங்கள், சிகரெட்டு போன்றவை குருதி வடிதலை மிகைப்படுத்தும்.
செயற்கையான பற்கள், குருதி வடிதலை மிகைப்படுத்தும். ஆகவே இவற்றை உணவை உட்கொள்ளும் போது மட்டும் போட்டுக் கொள்ளுங்கள்.
நீரில் தோய்ந்த பஞ்சையோ, அல்லது மெல்லிய துணியையோ குருதி வடியும் ஈறில் சிறிது நேரத்திற்கு வைப்பதன் மூலம் குருதி கசிவதை நிற்பாட்டலாம்.
மென்மையான பற் தூரிகை கொண்டு பற்களை துலக்கலாம். உப்புத் தண்ணீர், அல்லது அல்ககோல் சேர்ந்த வாய் கொப்புளிக்கும் திரவம் கொண்டு வாயை கொப்புளிக்குமாறு உங்கள் பற்சிகிச்சை நிபுணர் அறிவுறை வழங்கக் கூடும்.
ஈறிலிருந்து குருதி வடிதலை தடுப்பதற்கு வீட்டில் கையாளக் கூடிய முறைகள்.
காலையும், மாலையும், உப்புக் கலந்த இளஞ் சுட்டு நீர் கொண்டு, வாயை கொப்பளிப்பதன் மூலம் சவ்விலுள்ள வீக்கத்தை குறைத்து சுற்றோட்டத்தை ஒழுங்காக்கலாம்.
பற்களை ஒழுங்காக துலக்குவதன் மூலமும், பற்களிற்கும் மென்சவ்விற்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் அகப்பட்டிருக்கும் உணவை பல்குத்தி கொண்டு துப்பரவு செய்தல் மூலமும் வாய்ப்பகுதியை சுத்தமாக பேணலாம்.
|
குதிவாதம் என்றால் என்ன?
பிளான்ரர் பசிரிஸ் என்பது உள்ளங் காலின் தசை நார்களில் ஏற்படும் அழற்சியாகும். உள்ளங்காலின் தசைநார் இழையங்கள் ஒன்று சேர்ந்த பலமான தசைப்பட்டை குதியிலிருந்து பாதத்தின் நடு எலும்பு வரை நீண்டு செல்லும். இதனை உள்ளங்கால் தசைப்பட்டை என்பர். அது பாதத்தின் வில் போன்ற வளைவினை தாங்கி உறுதியளிக்கிறது. தசைநார் பட்டையில் ஏற்படும் சிறிய காயங்கள் அழற்சியை மற்றும் ஏனைய நோய்க்குறிகளை ஏற்படுத்தவல்லவை. இக்காயங்கள் வழமையில் குதிக்கால் எலும்புக்கு அருகிலேயே ஏற்படுகின்றன.
குதிக்கால் அழற்சியின் அறிகுறிகள் எவை?
பிரதான நோய்க்குறி வலியாகும். இது குதிக்கால் அடியில் எவ்விடத்திலும் வரலாம். பொதுவாக வலிக்குரிய பிரதான காரணமாக ஒரு குறித்த இடம் இனங்காணப்படலாம். இது அநேகமாக குதியிலிருந்து 4 சென்றிமீற்றர் முன்னோக்கி தொட முடியாத அளவுக்கு வலி இருக்கலாம். வழமையில் காலை நிலத்தில் வைக்கும் போது நோவு சிறிது குறையும். இருப்பினும் காலை எழுந்தவுடன் முதன் முதலில் கால் நிலத்தில் ஊன்றி நடக்கும் போது வலி மிக அதிகமாக இருக்கும். தொடர்ந்து நடக்கும் போது வலி அவ்வளவு இருக்காது. ஆனால் நீண்டதூர நடைப்பயணம் வலியை அதிகரித்து நிலைமையை மேலும் மோசமாக்கும். திடீரென காலை கடின அசைவுகளுக்கு உட்படுத்தும் போது உதாரணமாக படிக்கட்டுகளில் நடக்கும் போது அல்லது பெருவிரல் நுனியால் நடக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் வலி அதிகரிக்கும்.
குதிக்கால் அழற்சி எவர் எவர்க்கு ஏற்படலாம்?
இது மிகவும் பொதுவானது. பிரதானமாக 40வயதிற்கு மேற்பட்டவர்களை அதிலும் பெண்களை அதிகம் பீடிக்கிறது. விளையாட்டு வீரர்களிடையேயும் இது பொதுவாக காணப்படுகிறது. அத்துடன் பின்வரும் நிலைமைகள் இந்நோயை ஏற்படுத்தவல்லவை.
1) வழமையை விட அதிகமான நடத்தல், ஓடுதல், நீண்ட நேரம் நிற்றல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல். 2) மிருதுத்தன்மை அதிகமற்ற காலணிகளை அணிதல்.
3) திடீர் நிறை அதிகரிப்பு, அளவுக்கதிகமான நிறை என்பன குதிப்பகுதிக்கு மேலதிக சிரமத்தை தோற்றுவிக்கும். 4) உள்ளங்காலினை மிதமிஞ்சி பயன்படுத்தல் அல்லது அளவுக்கதிகமாக நீட்டல் உதாரணமாக விளையாட்டு வீரர்கள் அதிக தூரம் ஓடுதல் அல்லது அளவுக்கு மீறிய ஓட்டம். 5) குதிக்கால் தசைநார் இறுக்கமடைதல்
(குதிக்காலின் மேலாக பின்காலில் தசைப் பகுதியின் அடிப்பாகத்தில்) வயது முதிர்ந்தவர்கள் விடயத்தில் உடனடி காரணம் ஒன்றிருக்கும். குதிக்கால் எலும்பில் வளர்ச்சி ஏற்பட்டதாக (இச்டூஞுச்ணஞுதட்) நம்புவர். பலர் விடயத்தில் ஒரு குதிமுள் இருப்பதுண்டு. ஆனால் நோவுக்கு அது வழமையில் காரணமல்ல.
குதிக்கால் அழற்சிக்கான சிகிச்சைகள் எவை?
வழமையில் வீக்கம், வலி காலப் போக்கில் குறைவடைந்து விடும்.
உள்ளங்கால் தசை இழையங்கள் எலும்பை சூழவுள்ள இழையங்களைப் போல் மெதுவாகவே குணமடையும். இதற்கு பல மாதங்கள் அல்லது அதற்கு மேலும் செல்லலாம். இருப்பினும் பின்வரும் முறைகளில் விரைவில் குணமடைய வாய்ப்புண்டு. இம்முறைகளில் மிக துரிதமாக ஒரு சில வாரங்களிலே குணமடையலாம். 1) பாதத்தினை கூடியவரை ஓய்வில் வைத்திருக்கவும், அளவுக்கு மீறிய நடத்தல், நிற்றல், ஓடுதல் செயற்பாடுகளை, பாதத்தினை நீட்டுதல் போன்றவற்றை தவிர்க்கவும். மெதுவான நடை மற்றும் பயிற்சிகள் நன்மையளிக்கும். அவை கீழே தரப்பட்டுள்ளன.
2) பாதணிகள் வெறும் காலுடனோ அல்லது கரடுமுரடான தரையிலோ நடக்க வேண்டாம். மிருதுத் தன்மையான குதிப்பகுதியுடைய சப்பாத்துகளை சிறந்த வில் போன்ற வளைவுடைய பாதணிகளை தெரிவு செய்யவும். திறந்த பாதணிகளை விட லேஸினால் தைக்கப்பட்ட பாதணிகள் விளையாட்டுக்கு உகந்தவை. பழைய அல்லது கிழிந்த சப்பாத்துகளை தவிர்க்கவும். அவை மிருதுத்தன்மையை அளிக்க மாட்டாது.
3) குதி உயர்ந்த பாதணிகள் குதிக்காலிற்கு பஞ்சு போன்று மிருதுத் தன்மையான பாதணிகளை எங்கும் வாங்கலாம் அல்லது இது போன்றவற்றை சப்பாத்துக்களில் இடுவதும் நன்மையளிக்கும். மென்மையான துணி வகைகளை பயன்படுத்தவும் இதன் நோக்கம் குதிப் பகுதியை ஒரு செ.மீற்றரினால் உயர்த்துவதாகும். குதி மிகவும் மென்மையானதாக இருக்குமானால் அப்பகுதி பதியக் கூடிய நைவுகாப்பு உறையில் ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி விடலாம். இதனால் மிருதுவான குதியின் பகுதி சப்பாத்தின் உட்புறத்தில் பதியமாட்டாது.
4) பரசிற்றமோல் போன்ற நோவாற்றிகள் நோவை குறைப்பன. சிலவேளைகளில் வீக்கத்தடுப்பு மருந்துகள் (ஐஞதணீணூணிஞூஞுண போன்ற) பயன்தருவன இவையும் நோவாற்றிகள் தாம். ஆயினும் வீக்கத்தை தடுப்பதுடன் சாதாரண நோவாற்றிகளிலும் சிறந்தவை. சிலர் வீக்கத்தடுப்பு மருந்து கலந்துள்ளவையான கிறீம் வகைகளை பூசி நோவை ஆற்றுவதும் உண்டு.
5) பயிற்சிகள் : மெதுவாகவும் ஒழுங்கு தவறாமலும் குதிக்கால் தசை நார்ப் பகுதியை நிமிர்த்துதல் வேண்டும். இதன்போது உள்ளங்கால் தசைநார் ஆழ் தசைப்பட்டை நோவை தளர்த்தும். காரணம் உள்ளங்கால் பஸ்சிரிஸ் உள்ள சிலருக்கு குதிக்கால் தசைநார் இறுக்கமடைந்திருக்கிறது. இதனால் குதிக்காலின் பின்பகுதி இழுப்பது போலிருக்கும். அத்துடன் உள்ளங்கால் தசை நார் சூழ் தசைப்பட்டையை இறுக்கமடையவும் செய்து விடும். அத்துடன் நீங்கள் இரவு முழுவதும் உறங்கும் வேளைகளில் உள்ளங்கால் தசை நார்ப்பட்டை தானாக இறுக்கமடைந்து விடுகிறது. (இதனாலேயே காலையில் நோவு அதிகமாகிறது) பின்வரும் பயிற்சிகள் நிவாரணம் தருவன.
1. ஒரு சுவரிலிருந்து 2 3 அடி விலகி நிற்கவும், பாதங்கள் குதிக்கால் நிலத்தில் ஊன்றியபடி முழங்கால்களை நிமிர்த்தி வைத்துக் கொண்டு சுவருடன் சாயவும். பின் காலின் தசைப் பகுதியும், குதிக்கால் தசை நாரும் இறுக்கமாக இருக்கும். சில வினாடிகளுக்கு இவ்வாறு நிற்கவும். 10 தடவைகள் இவ்வாறு செய்யவும். நாளொன்றுக்கு 5, 6 தடவைகள் இவ்வாறு செய்யலாம்.
2. முழங்கால் 90 பாகையில் மடிந்திருக்கும், பாதங்களும், குதிக்கால்களும் நிலத்தில் நன்றாக பதியும்படியும் ஒரு இருக்கையில் அமரவும். இப்பொழுது குதிக்கால்கள் அப்படியே இருக்க பாதங்களை மேல்நோக்கி உயர்த்தவும். இப்பொழுதும் குதிக்கால் தசை நார்களும் பின் கால் தசைப் பகுதியும் இறுக்கமாக இருப்பதை உணர்வீர்கள். இதனால் சற்று வேறுபட்ட தசை நார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. மீண்டும் பழைய நிலைக்கு வந்து சில வினாடிகள் அமர்ந்திருங்கள். இவ்வாறு 10 தடவைகளும் நாளொன்றுக்கு 5, 6 தடவைகளும் செய்தல் வேண்டும்.
இப்பயிற்சியின் நோக்கம் தசை நார்களையும், தசை நார் சூழ் தசைப்பட்டையையும் குதிக்காலிலிருந்து மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் மெதுவாக தளரச் செய்வதாகும். ஒரு ஆய்வின்படி நீட்டி நிமிர்த்தும் பயிற்சிகள் பெரும் பயனை அளித்துள்ளன.
3. ஊக்கமருந்துகள் மேற்படி பயிற்சிகளுக்கு குணப்படாத நோவுகளுக்கு ஸ்ரீரொய்ட் ஊசி மருந்துகளை கொடுக்கலாம். இதனால் பல வாரங்களுக்கு நோவிலிருந்து நிவாரணம் கிடைக்கும். ஒருவேளை பிரச்சினை தீர்ந்தும் விடலாம். எல்லா சந்தர்ப்பங்களிலும் இது வெற்றியளிப்பதில்லை. ஸ்ரீரொய்ட்ஸ் வீக்கத்தை தடுத்து நிறுத்தும். சில வேளைகளில் முதலாவது ஊசிக்கு குணமேற்படாத நிலையில் மேலும் சில ஊசிகள் ஏற்றப்படலாம். பிற சிகிச்சைகள்: சிலர் இரவில் பன்டேஜ் போட்டுக் கொண்டு நன்மையடைகிறார்கள். இதனால் உள்ளங்கால் தசைப்பட்டை இறுக்கமடைவது தடைப்படலாம். (பென்டேஜ் கட்டுவதால் பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன்கள் கிட்டுகின்றன) சிக்கலான நிலைமைகளில் காலின் கீழ்ப்பகுதிக்கு ஒரு பிளாஸ்ரர் போடப்படுகிறது. இது ஓய்வு, பாதுகாப்பு, பஞ்சணைப்பது போன்ற நிலை, சிறிதளவு நீட்டுவது, நிமிர்த்துவது போன்ற நிலையை உள்ளங்கால் தசைப்பட்டைக்கு குதிக்கால் தசை நார்களுக்கு ஏற்படுத்துகிறது. விளையாட்டு வீரர்கள் பயிற்சியின் முன்ரும் பின்னரும் ஐஸ் மசாஜ் ஏற்பாடு செய்கின்றனர்.
அறுவைச் சிகிச்சை: மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம். மேலே கூறப்பட்ட சிகிச்சை முறைகளால் 12 மாதங்களுக்கு மேலாக குணப்படாத நிலையிலேயே அறுவைச் சிகிச்சை சிபார்சு செய்யப்படுகிறது. அறுவைச் சிகிச்சை எப்போதும் வெற்றியளிப்பதில்லை. சிலருக்கு இது சிக்கலை ஏற்படுத்தி விடும் என்பதால் இதனை இறுதித் தீர்வாகவே கருதலாம்.
ஒஸ்ரியோபொரோஸிஸ் ஏற்படுத்தும் பின் விளைவுகள்:
ஒஸ்ரியோபொரோஸிஸ் உள்ளவர்கள் ஒரு சிறு காயத்தின் பின்னர் ஒரு எலும்பை உடைத்துக் கொள்வது சாதாரணமானது. இடுப்பு, மணிக்கட்டு, முள்ளந்தண்டு ஆகியவற்றில் முறிவுகள் ஏற்படலாம். இடுப்பு, மணிக்கட்டில் முறிவுகள் விழுவதனால் ஏற்படுகின்றன.
முள்ளந்தண்டின் எலும்புகள் பலவீனமுற்ற நிலையில் ஒன்றுடன் ஒன்று நெருக்கப்படுவதால் முறிவடையக் கூடும். துண்டங்கள் நெருக்குப்படும் போது முள்ளந்தண்டு வளைவடையும். இதனால் நோ ஏற்படுவதுடன் உயரத்தில் குறைவும் ஏற்படும். சிலருக்கு சுவாசிப்பதில் சிக்கலும் ஏற்படும். ஒஸ்ரியோ பொரோசசிஸ்சிற்கான சிகிச்சை சாதாரணமாக எலும்புகளின் உடைவுக்கு காரணமாயிருக்கக் கூடிய கலங்களின் செயற்பாடுகளை தடை செய்வதற்கான மருந்து வகைகள் இதற்கெனக் கொடுக்கப்படுகின்றன. இதனால் எலும்புப் பொருண்மை அதிகரிக்கும். எலும்புகள் வலுப்பெறும். முறிவடையும் ஆபத்துக்கள் குறைவடையும். முதல் வருடச் சிகிச்சையினுள் புதிதான முள்ளந்தண்டு முறிவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் 60 70% தினால் குறைவடைகின்றது. போதியளவு கல்சியமும் விற்றமின் "டீ' யும் எடுத்தல் சிபாரிசு செய்யப்படுகிறது.
எனக்கு ஒஸரியோபொரோஸிஸ் இருப்பதாக காணப்படுமிடத்து நான் என்ன செய்தல் வேண்டும்?
பணிக்கப்பட்ட விதத்தில் சிகிச்சையை மேற்கொள்ளவும் மிகச் சிறந்த பெறுபேறுகளுக்காக சிகிச்சையை பல வருடங்களுக்குத் தொடர வேண்டியிருக்கும். உணவு:
உணவும் அதில் இருக்கக் கூடிய கல்சியத்தின் அளவும் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். தினமும் 1500 மி.கி. கல்சியம் அவசியமாகும். பாலுணவு வகையில் கல்சியம் நிறைவாக உள்ளது. ஏதேனுமொரு கல்சிய உணவை எடுக்கவும் வாத நோயியல் மருத்துவரை நாடவும்
வெய்யிலை பயன்படுத்தவும்
விற்றமின் "டீ' கல்சியம் குடலினால் உள்ளுறுஞ்சப்படும் வேகத்தை அதிகரிக்கும் என்பதால் முக்கியமானது தினமும் வெய்யிலில் உலõவுங்கள். அவ்வாறில்லையேல் உங்கள் உணவில் விற்றமின் "டீ' யை சேர்க்கும்படி வாத நோய் மருத்துவர் அறிவுறுத்துவார். (மீன் எண்ணெய் குளிசை)தினமும் உடற்பயிற்சி கவனத்துடன்:
முள்ளந்தண்டில் திடீர் அழுத்தங்கள் ஏற்பட்டு முறிவுகள் ஏற்பட அனுமதித்தலானது. பாரம் தூக்குதல், முன்புறமாக குனிதல் என்பனவற்றை தவிர்க்கவும்.
*படுக்கையின் போது முழங்காலில் நின்று, குந்தியிருந்து படுத்தல் வேண்டும்.
*தரையிலிருந்து எதனையாவது எடுக்கும்போது முதுகுப் பக்கம் நேராக இருக்கும்படி முழங் கால்களை மடித்து எடுக்கவும். *பாரமான பொருட்கள், சூட்கேஸ் போன்றவற்றை காவுதல் ஆகாது.*திடீரென அசைவுகளை ஏற்படுத்துதல் ஆகாது. வீழ்தலுக்கான ஏது நிலையை குறைத்தல் நாம் முதியவர்களாக ஆகும் போது நிலத்தில் வீழ்தலுக்கான ஏது நிலையும் அதிகமாகும். வீழ்தலை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை இனங்கண்டு அவற்றை சரியான இடத்தில் வைத்தல் வேண்டும்.*கண்பார்வையை சரி செய்தல் வேண்டும். *நடத்தல், சமனிலை பேணல் ஆகியவற்றில் பிரச்சினைகளை தவிர்த்தல். (உடம்பு பிடித்தல்/ ஊன்றுதடி)*மதுபானத்தின் அளவை எல்லைப்படுத்துதல். *இருக்கை நிலைகளை திடீரென மாற்றுதலாகாது.
*நடந்து திரியும் பகுதிகளில் தடங்கல்கள் இருத்தலாகாது.*வாயிற்படி/ கதவடி நில விரிப்புகளில் கவனம் செலுத்தவும். *மின் வெளிச்சத்தை வேண்டிய இடங்களில் வேண்டிய அளவுக்கு வைத்திருக்கவும், சுவிச்சுகளுக்கு பொருத்தமான இடங்களை முடிவு செய்யவும். *தளபாடங்களின் உயரத்தை சரி செய்யவும் (கட்டில் நாற்காலி/ மலசல கூட ஆசனம் என்பன) *புகைப்பிடித்தலை நிறுத்தவும் புகைத்தல் ஒஸ்ரி÷õ பொரோசஸ் வாய்ப்புக்களை அதிகரிக்கும். பிந்திய நிலையிலும் முந்துவது நல்லதே!
சுறுசுறுப்பான வாழ்வை நடத்துதலும் கல்சியம் நிறைந்த உணவை உண்பதும் ஒஸ்ரியோபொரோஸஸ் பிணியை தடுக்க உதவும். சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்த எவ்வளவுக்கு முந்துகிறோமோ அந்தளவுக்கு முறிவுகள் ஏற்படக்கூடிய ஏது நிலையினின்றும் எம்மைக் காத்துக் கொள்கின்றோம்
திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல் நாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த தால் இதற்கு கிசுமுசுப் பழம் எனப் பெயரிட்டனர்.!
பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயா சம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதில் விற்றமின் பிபிபீ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.!
குழந்தைகள் வளர்ச்சிக்கு வளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கல்சியம்தான். கல்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கிய மாகவும், பலமாகவும் இருப்பார்கள்.!
இரத்த விருத்திக்கு எலும்பு மச்சைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மச்சைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.!
உடல் வலி குணமாக பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.!
பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சினை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படு கிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கஷாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும். மலச்சிக்கல் தீரமலச்சிக்கலே நோய்கள் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு காலம் நோயின்றி வாழலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் ஜீரண உறுப்புகள் வலு விழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சினை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகின்றன.!
இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும்.குடற்புண் ஆறஅஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவறை புண்ணாக்கி விடுகின்றன.!
இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடற் புண்கள் குணமாகும்.இதயத் துடிப்பு சீராகசிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதற்றத்துடனே காணப்படுவார் கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும். சுகமான நித்திரைக்கு தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும். தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்



உணவே மருந்து' என்கிற வாக்கு பொய்யாகி விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த முதியவர்கள் வரை பெரும் பாலானவர்கள் கலர்கலரான மருந்துமாத்திரைகளுடனேயே வாழ்க்கை தள்ளுகின்றனர். மருந்து உட்கொள்வதில் அலட்சியம் காட்டுவதால் வயிறு சம் பந்தப்பட்ட நோய்கள், அலர்ஜி உள்ளிட்ட உபாதைகள் வரும் வாய்ப்பு அதிகம். இதனால் மருந்து சாப்பிடும் போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பின்வருமாறு பார்க் கலாம்.