1. தலையணி, தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.
2. காதணி தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை, கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல.;
3. கழுத்தணிகள் கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை, பிச்சியரும்பு மாலை, நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, தாழம்பூ அட்டிகை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்ட சரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.
4. புய அணிகலன்கள் கொந்திக்காய்
5. கை அணிகலன்கள் காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு
6. கைவிரல் அணிகலன்கள் சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப் பூ
7. கால் அணிகலன்கள் மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய்க் கொலுசு, ஆலங்காய் கொலுசு
8. கால் விரல் அணிகள் கான் மோதிரம், காலாழி, தாழ் செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி
9. ஆண்களின் அணிகலன்கள் வீரக் கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண், பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம், கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்துவடம்,. கடுக்கண், குண்டலம். ஆகியனவாகும்.
காலணிகள், இப்போதெல்லாம் ஆடம்பரத் திற்கான அவசியமாக மாறிவருகின்றன. காலுக்கு இதமாக இருக்கவேண்டும் என்பதற் காக வாங்கப்பட்ட காலணிகள் காலமாற்றத் தில் அழகுக்கும், ஆடம்பரத்திற்கும் மாறியதில் ஆச்சரியமில்லை என்றாலும், ஆடைக்கும், அணிகலன்களுக்கும் கொடுக்கும் அதே முக் கியத்துவத்தை செருப்புக்கும் கொடுத்து வாங்கி அணிந்து மகிழ்கின்றனர் இன் றைய தலைமுறையினர்.
அதனால்தான் ஆடை, அணிகலன்க ளுக்கு நிகராக காலணிகளின் விலையும் அதிகரித்து வருகின்றது. இப்போதெல் லாம் பல ஆயிரம் ரூபாய் வரை செருப் புகள் விற்கப்படுகின்றன.
கலர்புல் செருப்புகளையும், ஆடைக்கு ஏற்ற மேட்சான செருப்புகளையுமே இன்றைய இளம் பெண்கள் விரும்புகின்ற னர். ஆனால் செருப்பு என்பது நமது உள் ளங்காலோடு நெருங்கிய தொடர்பு உடை யதால் அதை வயசுக்கு தக்க படியும், தேவைக்கு தக்கபடியும் வாங்குவது முக் கியமானது. ஏனென்றால் உள்ளங்காலு டன் நமது உட லில் உள்ள அனைத்து நரம்புகளும் தொடர்புடையது.
இப்போது திருமணம் போன்ற விசே ஷங்களுக்கும், வீடு, சுற்றுலா போன்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான செருப்புகளை பெண்கள் அணிகின்றனர். உடலுக்கு தகுந்தபடி செருப்புகளை வாங் குவது நல்லது. பொருத்தமான செருப்பு களை அணிபவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். பொருத்தமில்லாத செருப்புகளை அணிந்தால் தன்னம்பிக்கை குறையும்.
செருப்புகளை தேர்ந்தெடுத்து வாங்கும் போது மூன்று விஷயங்களை கவனித்து வாங் குவது நல்லது. அவை சௌகரியம், அழகு, நிறம் ஆகியவை. கண்ணைப் பறிக்கும் கலர் களை விட இளநிறமே, மற்றவர்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கும். முன்பகுதி குறுகி, குதிகால் உயர்ந்து இருப் பதையே இன்றைய இளம்பெண்கள் விரும்பு கின்றனர். செருப்புகளின் முன்பகுதி குறுகி உள்ளதால் விரல்கள் அழுத்தத்திற்கு உள்ளா கின்றன. மேலும் வர்மப் புள்ளிகளும் அழுத் தப்படுவதால், உடலில் பலவித பிரச்சினை களை ஏற்படுத்தும். இதனால் தலைவலி, கண் வலி, சோர்வு, கால்வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும்.
மேலும் இறுக்கிப் பிடிக்கும் விரல்களில் கொப்பளங்கள் ஏற்படும். இயல்பாக நடக்க முடியாமல் நெருக்கடி ஏற்படும். இன்றைய பேஷன் விரும்பிகள் அனைவருமே குதிகால் உயர்ந்த செருப்புகளையே அணிகின்றனர். இதன் காரணமாக உடலின் சமன்நிலை பாதிப்பு அடைகிறது. இதனால் முதுகுவலி, குதிகால் வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். கால்கள் மெலிந்து இருப்பவர்கள் பென்ஸி ஹீல்ஸ்' என்ற குதிகால் செருப்புகளை தவிர்க் கவும். குண்டு உடல்வாகு உடையவர்கள் அதிக எடையுள்ள செருப்புகளை அணிய வேண்டாம். இவர்கள் மென்மையான திறந்த வெளி செருப்புகளை அணிவது நல்லது.
பாதம் நீளமாக உள்ளவர்கள், கோடு போட்ட டிசைன்கள் நிறைந்த செருப்புகளை அணிய வேண்டாம். இதனால் பாதம் மேலும் நீளமாக இருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். செருப்புகளை வாங்கும்போது. அதை வலது காலில் போட்டுப் பார்த்து வாங்கவும். உங்களுடைய உடல் அமைப்பு, வேலை, செல் லும் இடத்துக்கு தக்கபடி செருப்புகளை அணி யவும்.
பெண்களை பொறுத்தவரை, பெண்களின் உடல் வடிவமைப்பு, எடைக்கு தக்கபடி செருப் புகளை நிதானமாக தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. ஷூக்கள் வாங்கும்போது முன்பக்கம், பின்பக்கம் அழுத்திப் பார்த்து போதுமான இடைவெளி உள்ளதா? என்பதை கவனித்து வாங்குவது நல்லது.
என்பது பழமொழி. இப்போதெல்லாம் ஆடைதான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது. ஒருவரை பார்க்கும்போது அவர் அணிந்திருக்கும் ஆடையை வைத்தே நாம் அவரை மதிப்பிடுகிறோம்.
சில பெண்கள் அணிந்துள்ள ஆடை களைப் பார்க்கும்போது சம்பந்தமே இல்லாமல் இருக்கும். அது புடைவையாக இருந்தாலும்... அல்லது சுடிதார், ஜீன்ஸ் போன்ற மொடர்ன் உடைகளாக இருந் தாலும் உடலமைப்பு சரியாக இல்லாத போது அது பொருத்தமாக இருக்காது. அவரவருக்குப் பொருத்தமான ஆடை களை பொருத்தமான முறையில் அணிந் தால் கண்டிப்பாக எல்லோரையும் கவரலாம்.
அதாவது கந்தையான ஆடையாக இருந்தாலும் அதை துவைத்து, அயர்ன் செய்து அணிந்தால் அழகாகவே இருக் கும். நிறத்திற்கும், தோற்றத்திற்கும், உயரத் திற்கும் பருமனுக்கும் மற்றும் பருவத்திற் கும் தகுந்தபடி ஆடைகளை அணிந்தால் கண்டிப்பாக நாம் அழகாகத் தெரிவோம். ஒல்லியும் உயரமுமாக இருக்கும் பெண் கள் கோடு அல்லது கட்டம் போட்ட உடைகளை அணியக்கூடாது. முடியை கழுத்துக்கு மேல் தூக்கி முடி அலங்காரம் செய்யவும் கூடாது. சிறிய போர்டர் புடைவை அல்லது நீள வாக்கில் பூவேலை செய்த சுடிதார் அணிய வேண் டாம். சற்று பெரிய பூக்கள் போட்ட பளிச் சென்ற புடைவைகள் அல்லது சுடிதாரும் போட்டமும், பூப்போட்ட சுடிதாரும் அணியலாம். நீளமான அகலமான டிசைன் எதுவும் இல்லாத பிளைன் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கறுப்பு நிறங்களில் அணியலாம்.
உயரமான ஒல்லியான பெண்கள் கறுப்பு அல்லது மாநிறமாக உள்ளவர்கள் அழுத்தமான நிறங்களில் ஆடைகள் தேர்ந் தெடுக்கக் கூடாது. அப்படியே தேர்ந்தெடுத் தாலும் அடர்த்தி மற்றும் வெளிர் நிறங்கள் மாறிமாறி வருவது போல் இருந்தால் நன்றாக இருக்கும். அதில் ஏதாவது ஒரு நிறத்தில் முடிந்தால் ஆடையில் உள்ள லைட் நிறப் ப்ளவுசோ அல்லது துப்பட்டாவோ அணியவேண்டும். உயரமானவர்கள் கழுத்தில் நீளமாகத் தொங் கும் ஆபரணங்கள் அணியாமல் கழுத்தை ஒட்டி இருக்கும் சிறிய நெக்லஸ் அணியலாம்.
நல்ல நிறமான சிகப்பாக இருப்பவர்கள், குட்டையாக... ஒல்லியாக இருந்தால் பிளை னாக... டிசைன் இல்லாத நிறத்தில் ஆடை அணிய வேண்டாம். அப்படி புடைவை அணியும்போது ஜாக்கெட் அடர்த்தியான நிறத் தில் டிசைன்களுடன் இருக்கலாம். கருப்பாக... குள்ளமாக இருப்பவர்கள் மெல்லிய சரிகை போர்டர் வைத்தோ அல்லது மெல்லிய போர்டருடனோ சேலை அணிய லாம். பெரும்பாலும் போர்டரும், சேலையின் தலைப்பும் உள்ள புடைவைகளை தவிர்த்திட வேண்டும். அழுத்தமான நிறத்தில் உள்ள சேலைகளை கறுப்பாக இருப்ப வர்கள் அணிய வேண்டாம்.
அப்படி அணியும்போது அதில் சிறிய வெளிர் நிறத்தில் பூக்கள் அல்லது புள்ளிகள் இருந்தால் நன்றாக இருக்கும். குண்டாக இருப்பவர்கள் உடலுடன் ஒட்டியவாறு ஆடைகளை அணியக் கூடாது. டொப்பும், பொட்டமும் வெவ் வேறு நிறத்தில் இருக்குமாறு சுடிதார் அணியலாம். துப்பட்டாவை தவிர்க்க லாம். அல்லது கணுக்கால் வரை மிடி அணிந்து நீண்ட கைகளை உடைய டொப்ஸை இன் செய்து அணியலாம்.
மிடியில் கூட முன்பக்கம் பட்டையாக தைத்து அதில் அடி நுனி வரை பூவேலை அமைந்திருந்தால் தோற் றத்தை சிறிது உயரமாகக் காட்டும். ஆடையும் அழகாக இருக்கும். முடிந்த அளவு உயரமான செருப்பு அணிந்து கொள்ள வேண்டும்.
குட்டையான கழுத்து இருந்தால், அதை இறுக்கமாக சுற்றும் பட்டையான அணிகலன்கள் அணிந்தால் நன்றாக இருக்காது. நெக்லெஸ் கூட சிறிது தளர மார்பில் படும்படியாக அணியலாம். மெல்லிய நீளமான சங்கிலி அணிய லாம். கைகளில் மெல்லிய கம்பிகளாக மோதிரங்கள் அணியலாம். காதில் நீண்டு தொங்கும் காதணிகள் அணியலாம்.
காதைத் தாண்டி முடியில் மாட்டும் நீள மாட்டல்களை அணியலாம். காதைச் சுற்றிலும் துளையிட்டு நிறைய ஆபரணங்களை அணியலாம். அவை தட்டையாக அகலமாக இல்லாமல் இருப்பது அவசியம். ஒல்லியாக இருப்பவர் கள் சுருக்கு வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாகத் தெரிவார்கள். இறுகிய உடைகளையும் தவிர்க்க வேண்டும்.
பேண்ட், டீ ஷேர்ட் அணிபவர்கள் டீ ஷேர்ட்டை இன் செய்யாமல் அணியவும். பேண்ட், ஷேர்ட் அணிபவர்கள் ஷேர்ட்டில் டிசைன்கள் இருந்தால் இன்னும் அழகாகக் காணப்படுவார்கள்.
|
நவநாகரிக யுகத்தில் நங்கையர் எல்லாம் அங்கமாக ஜொலிக்க தங்கத்தை அணிந்தார்கள். எல்லா அங்கங்களையும் அழகுபடுத்திக் காட்டினாலும் அத்தியாவசியப் பொருட்களை கைகளில் கொண்டுசென்றால் பாதுகாப்பும் இல்லை அழகும் இல்லை. அதனால் பொருட்களை எல்லாம் வைப்பதற்கு கைப்பைகளை கொண்டு செல்வது வழக்கம்.கைப்பைகள் கூட வண்ணங்களாக மிளிர வேண்டும் என்பதே எல்லோர் எண்ணமும். வண்ண வண்ண கைப்பைகள் வாங்குவதற்கு கடைகளை தேடுபவர்கள் அதிகம். கடைகள் இருந்தாலும் காட்சிக்கு வைக்கப்பட்ட கைப்பைகளை தெரிவு செய்வதில் குழப்பம் எற்படலாம் அக்குழப்பத்தை நிவர்த்தி செய்யவே உங்களுக்கு ஒரு குறிப்பு. *கைப்பை வாங்க செல்பவர்களாக இருந்தால் முதலில் நீங்கள் என்ன நிறத்தில் கைப்பையை வாங்கப்போகிறீர்கள் என்று வீட்டிலேயே தீர்மானித்து கொண்டு கடைக்குச் செல்லவேண்டும்
*கடையில் காட்சிக்கு வைக்கப்பட்ட கைப்பைகளை தெரிவு செய்யும் போது அது விலைக்கேற்ற தரமுடையதாக உள்ளதா என பார்க்கவேண்டும்.
* நீங்கள் தெரிவு செய்யும் கைப்பைகள் பொதுவான நிறமுடையதா என பார்க்கவேண்டும். *கைப்பைகளை வாங்கும்போது எப்போதும் கண்கவர் வண்ணங்களிலேயே தெரிவு செய்யவேண்டும். *கைப்பைக்குள் சிறிய சிறிய மடிப்புக்கள் உள்ளனவா என பார்க்கவேண்டும். *கைப்பையின் வார்கள் பொதுவாக சிறிதாக இருத்தல் வேண்டும்.
*கைப்பையை மூடும் இடம் எப்பொழுதும் சிப் உள்ளதாக இருக்க வேண்டும். *கைப்பைகளை வாங்கும்போது நீளம் சிறியதாகவும் அகலம் சற்று பெரியதாகவும் இருக்கவேண்டும். எப்போதும் கையில் அணிந்து கொண்டு செல்லும் போது கையின் நடுப்பகுதியில் சரிசமமானஅளவில் இருபக்கமும் கைப்பை தெரியவேண்டும்.
எட்டிப் பிடிக்கமுடியாதளவுக்கு விலை போனாலும் தங்கம் நம் அத்தியாவசியத் தேவைகளுடன் இரண்டறக் கலந்த ஒன்றாகி விட்டது. திருமணங்களில் பெண்ணுக்கு போடப்படும் தங்கத்தின் அளவு தான் திருமணத்தையே தரம் பிரிக்கிறது. இப்படி நம்மிடம் இருந்து பிரிக்க முடியாத தங்கத்தை வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டியது கடமை அல்லவா!
நிறத்தையும் பளிச்சென்ற தன்மையையும் பார்த்து ஒருபோதும் தங்கம் வாங்கக்கூடாது. பொலிஷ் மூலம் தங்கத்துக்கு எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நிறம் கொடுக்கலாம்.மஞ்சள்நிறம் அதிகம் கொண்ட நகைகள் அதிக பெறுமதிமிக்கவை என்று எண்ணி விடாதீர்கள்.வேலைப்பாடுகள் குறைந்த ஆபரணங்களை வாங்குவதே சிறந்தது. அதற்கு செய்கூலி குறைவு என்பதோடு, விற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதிக கழிவும் ஏற்படாது.
தங்க நகைகள் வாங்கும் போது பலர் ரசீதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. ரசீது இல்லையென்றால் பணம் கொஞ்சம் குறையலாம் என்று எண்ணி ரசீது வாங்குவதில் ஆர்வம் காட்டாமல் விட்டு விடுகிறார்கள். உண்மையில் ரசீது வாங்கினால்தான் பிற்காலத்தில் விற்கும் சூழ்நிலை ஏற்பட்டால் பெரும் உதவியாக இருக்கும். ரசீது வாங்கும் போது நகையின் எடை ,மொடல், போன்றவற்றை தெளிவாக குறிப்பிடச் சொல்ல வேண்டும். கற்கள், முத்துகள் பதித்த நகைகளை வாங்கும் போது அதிக கவனம் காட்ட வேண்டும். சில கடைகளில் கற்களின் எடையையும் தங்கத்தின் எடைபோல கணக்கிட்டு விடுவார்கள். கற்களுக்கு தனி எடையும் தங்கத்துக்கு தனி எடையும் போடுவதே சரியான தொழில் தர்மம்.
தங்க ஆபரணங்களை தனித்தனி பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரே பெட்டியில் ஒன்றோடு ஒன்றாக பலவற்றை சேர்த்தால் நகைகளில் கீறல்கள் ஏற்பட்டுவிடும் வாய்ப்பு அதிகம். அதனால் பெறுமதி குறைவதோடு நிறமும் மங்கி விடும்.
வழக்கமாக வாங்கும் கடைகளில் தங்கம் வாங்குவது நல்லது. அதனால் நம்பகத்தன்மை கூடும். அதோடு பாதிப்பு ஏதேனும் ஏற்படினும் உடனடி பரிகாரம் காணமுடியும்
அதிக உடையும் குறைந்த உடையும் பெண்கள் பொதி சுமப்பது போல உடல் முழுவதும் சுற்றிய நிலையில் அதிகமான அளவில் உடை அணிவது அழகைக் கெடுக்கும். அதற்காக அங்கங்கள் தெரியும் அளவுக்கு மிகவும் குறைவான ஆடைகளை அணியக் கூடாது. கடைத் தெருவுக்குப் போகும்போதுகடைத்தெரு மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது இலேசான நிறத்தில் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது சூழ்நிலைக்கு ஏற்ப பாந்தமாக இருக்க வேண்டும்.
புடவைக்குப் பொருத்தமான சோளிகள் பெண்கள் அணியக்கூடிய சோளிகளின் கைகளிலும், கழுத்திலும் லேஸ்களை வைத்துத் தைத்துக் கொண்டால் அவை என்ன வண்ணத்தில் புடவை அணிந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும்.
அலுவலகம் செல்லும் பெண்கள் அணியும் ஆடை
அலுவலங்களுக்கோ, பள்ளி, கல்லூரிகளுக்கோ செல்லும் பெண்கள் மிகவும் பகட்டாகவும் கண்களைப் பறிக்கும் விதத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். ஆனால் ஒரேடியாக மோசமான ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என கருதிவிடக்கூடாது. கண்ணியமான தோற்றத்தை அளிக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ற உடையை அணிந்து செல்வது மிகவும் அவசியம்.
ஒல்லியான பெண்களுக்கு உடைகள்
மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக் கூடாது. சோளியின் கைகள்கூட மிகவும் பிடிப்பாக இல்லாமல் சற்று தளர்த்தியாக இருப்பது நல்லது.
புடவையின் அமைப்பும் உருவத்தோற்றமும்
பெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும். உதாரணமாக பெண்கள் அணியக்கூடிய புடவையில் அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் அமைந்தால் உயரமான பெண்கள் குள்ளமாக இருப்பது போன்ற பிரமை பார்ப்பவர்களுக்கு தோன்றும். புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயரமாக இருப்பது போல காட்சி தருவார்கள்.
கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்றால்
கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் போது மிகவும் நெருக்கமாக கட்டம் போடப்பட்ட மிகவும் அழுத்தமான சாயம் கொண்ட கைத்தறி சேலைகளை உடுத்திச் சென்றால் பாந்தமாக இருக்கும்
கலர் கலராய் ஆடைகள், வண்ண வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே வளையல்கள் அணியும்போது அதற்கென சில முறைகள் உண்டு. அது தவறும்போது அழகை அது குறைத்து விடவும் கூடும். முதலாவது உங்களிடம் வண்ண வண்ண வளையல்கள் பல டிசைன்களில் இருக்குகிறதா.
அதை வெள்ளை ரிசூவில் சுற்றி டெட்டோல் அல்லது கலந்த புடவையை நனைத்துஅந்த பெட்டியிலே வைத்து பாதுகாப்பாக வையுங்கள். இதனால் உங்கள் கைகளை அலர்ஜிக்கில் இருந்து பாதுகாக்கலாம். பொருளின் உபயோகக் காலமும் கூடும். மற்றது நாம் அணியும் ஆடைகளுக்கு பொருத்தமான நாம் ஆணியும் வளையல்களைத் தெரிவு செய்யவேண்டும். இன்று சந்தையிலே பலவித வளையல்கள் அறிமுகம் ஆகிக்கொண்டேதான் இருக்கின்றது.
உதாரணம், கண்ணாடி, ஸ்டீல், பிளாஸ்டிக் என ஏராளம். நாம் புடவை அணியும் சந்தர்ப்பங்களில் கை நிறைய வளையல்களை அணியலாம். சுடிதார் அணியும் பெண்கள் அளவாக வளையல் போடலாம். ஜீன்ஸ் அணியும் பட்சத்தில் ஓரிரு வளையல்களை போட்டால் எடுப்பாக இருக்கும். நாம் அணியும் ஆடைகளில் எத்தனை வர்ணங்கள் உள்ளதோ அத்தனை வர்ணத்திலும் ஒவ்வொரு வளையல் தெரிவுசெய்து அணியும்போது அது அழகாகக் காட்சி தரும். வைபவங்களுக்கு அணியும் வளையல்கள் கொஞ்சம் மினுமினுப்பாக இருந்தால் அழகாய் இருக்கும். கற்கள் பதித்த வளையல்கள் பட்டுச்சேலைக்கு பொருத்தமாய் இருக்கும். எப்படியும் ஒற்றை வளையல் அணியும்போது விரல்களுக்கு மோதிரங்களை குறைத்து போடவேண்டும்.
|
வாழ்க்கையில் திருமணம் ஒரு தடவைதான் நடக்கும். அதனால் இப்போதெல்லாம் அத்தனை திருமணங்களிலும் அலங்காரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முன்னர் மணப்பெண் அலங்காரம் என்பது முகூர்த்தம் நடக்கும் அன்று காலையில் மணப்பெண்ணுக்கு மேக்அப் போடுவதோடு சரி. இப்போது திருமணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே முகம் மட்டுமல்ல, உடல் முழுவதும் மெருகூட்டப்படுகிறது. அது மாத்திரமன்றி, உடை, நகைகள் போன்றவையும் அவரவருக்கேற்றவாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது.
திருமணம் செய்துகொள்ளப்போகும் மணப்பெண் கவனிக்க வேண்டிய சில விடயங்கள்.
3 மாதங்களுக்கு முன்பு:
3 மாதங்களுக்கு முன்பிருந்தே மணப்பெண்கள் தினமும் 45 லீற்றர் தண்ணீர் பருகவேண்டும். அசைவ உணவுகளின் அளவைக்குறைத்து, பெருமளவு காய்கறி, பழங்களை உணவில் சேர்க்கவேண்டும். மனதை அமைதிப்படுத்தும் பொழுதுபோக்கில் ஈடுபட வேண்டும். தினமும் 8 மணிநேரம் நன்றாகத் தூங்கவேண்டும். உடலை பராமரிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தவேண்டும். வாரத்தில் ஒருநாள் உடம்பு முழுவதும் பாலைத் தடவி 15 நிமிடங்கள் கழித்து மென்மையான ஸ்பொன்ஞ்ச் அல்லது கை விரலால் மிதமாக தேய்க்க வேண்டும். பின்பு கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் பால் பவுடரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் சருமத்தில் பதிந்து பளபளப்பைக் கொடுக்கும்.
அழகு நிலையத்தில் மணப்பெண்களுக்காக இப்போது 'மில்க் பாத்' உள்ளது. ஒரு தொட்டியில் பால், தண்ணீர் மற்றும் ஒவ்வொருவர் சருமத்திற்கேற்ற 'ஜெல்'லும் அதில் கலந்திருக்கும். முதலில் அழகுசாதனப் பொருட்களை உடலில் பூசி தேய்த்து, 'ஸ்கிரப்' செய்துவிட்டு, பின்பு ஆவி 'பாத்' கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் 'மில்க் பாத்' எடுக்க வேண்டும். பின் உடல் முழுவதும் 'மாஸ்க்' போடப்படும். இதனால் சருமம் ஒரே நிறத்தில் பளபளப்புடன் தோன்றும். இதனைத் திருமணம் நடக்கும்வரை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்வது நல்லது.
பால் பிடிக்காதவர்கள் வைனில் குளிக்கிறார்கள். சாதாரண சருமத்தைக் கொண்டவர்கள் 'ஸ்ட்ரோபெரி' பழத்தைப் பிசைந்து முகத்தில் தேய்த்து 'ஸ்கிரப்' செய்ய வேண்டும். பத்து நிமிடத்தில் அதை நீக்கிவிட்டு, ஆப்பிள் கூழை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிட வேண்டும்.
எண்ணெய்த்தன்மையான சருமத்தைக் கொண்டவர்கள் காலை, மதியம், இரவு மூன்று வேளையிலும் முகத்தை நன்றாகத் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். தினமும் எலுமிச்சம்பழத்தை வெட்டி முகத்தில் தேய்த்து பத்து நிமிடத்தில் கழுவிவிடவேண்டும். இது லேசான எரிச்சலைத் தரும். சந்தனப் பவுடரை பன்னீர் அல்லது சுத்தமான தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்களில் கழுவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில், முகத்தில் இருக்கும் எண்ணெய்த்தன்மை குறைந்துவிடும். பின்பு வாரத்தில் ஒருமுறை மட்டும் இவ்வாறு செய்தால் போதும். கறுப்புப் புள்ளி, திட்டு, படை, முகப்பரு, நிறமாற்றம் போன்றவை இருப்பவர்கள் அழகு நிலையங்களிலே இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
கூந்தல் பராமரிப்பைப் பொறுத்தவரை மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற ஏதாவது ஒன்றை லேசாக சூடாக்கி தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊறிய பின்பு ஷாம்பு போட்டு கழுவி, கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனரை தலைமயிரில் மாத்திரமே பூச வேண்டும். தலை ஓட்டில் படக்கூடாது.
வரட்சியான கூந்தலை கொண்டிருந்தால் தே.எண்ணை, விளக்கெண்ணை, கிளிசரின், வினிகர் போன்றவைகளை தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கண்டிஷனருடன் கலந்து தலைமயிரில் பூசலாம். பின்பு சுடு தண்ணீரில் டவலை முக்கிப் பிழிந்து, கூந்தலைச் சுற்றிக் கட்ட வேண்டும். இரண்டு, மூன்று முறை அவிழ்த்து கட்டவேண்டும். 15, 20 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்பு போட்டு கழுவவேண்டும். பின்பு கண்டிஷனர் பூச வேண்டும். வாரத்திற்கு ஒரு தடவை இவ்வாறு செய்ய வேண்டும்.
ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டில் செய்ய வேண்டியவை:
சாதாரண சருமம் நாமக்கட்டி பவுடர், முல்தானிமுட்டி இரண்டையும் முகத்தில் பூசி கழுவ வேண்டும். எண்ணெய் சருமம் என்றால் முல்தானிமுட்டி மட்டும் பூச வேண்டும்.
அழகு நிலையத்தில் இதற்கான 'ஸ்கின் லைட்னிங் பேக்கேஜ்' உள்ளது. இதனை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். ஒரு வாரத்திற்கு முன்பு:
முகூர்த்த தினத்தன்று மணப்பெண்ணுக்கு முழுமையாக எப்படி அலங்காரம் செய்யப்படுமோ அது போன்ற அலங்காரத்தை செய்து பார்த்துவிட வேண்டும். உச்சி முதல் பாதம் வரை அலங்கரித்துவிட்டு, அதில் ஏதாவது மாற்றங்கள் தேவையா? உடை, அணிகலன்களில் ஏதாவது மாற்றம் தேவையா என்பதை எல்லாம் பார்த்துவிட வேண்டும். இப்போது பெரும்பாலும் மணமகனும் மணப்பெண்ணின் முழு அலங்காரத்தைப் பார்வையிட்டு அவருடைய விருப்பத்தைத் தெரிவிப்பார். இந்த அலங்காரத்திற்கு மூன்று மணிநேரம் தேவைப்படும். மூன்று நாட்களுக்கு முன்பு:
பெடிக்யூர், மெனிக்யூர் எனப்படும் கால், கை, நக பராமரிப்பு, வெக்சிங், பேஷியல், பாடி டிரீட்மென்ட் மற்றும் மெஹந்தி போன்றவைகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். இவற்றைச் செய்த பின் மணப்பெண்கள் வெளியே செல்லக்கூடாது. இரண்டு நாட்களுக்கு முன்பு:
நிறைய தண்ணீர் பருகவேண்டும். நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். நிறைய பழச்சாறு பருகவேண்டும். திருமணத்தன்று:
முகூர்த்தத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, முழுமையான மணப்பெண் அலங்காரத்தைத் தொடங்க வேண்டும். ஏற்கனவே 'ட்ரையல்' செய்து பார்த்திருந்தால் வேகமாக, சிறப்பாக மணப்பெண் அலங்காரத்தை முடிக்க முடியும்.
குள்ளமாக இருப்பவர்கள்:
* குள்ளமாக இருப்பவர்கள் லோங் டொப் போடாதீர்கள். அது உங்களை இன்னமும் குள்ளமாகக் காண்பிக்கும். முழங்கால் வரையிலான டொப் குர்தா போட்டுக் கொண்டால் உயரமாகத் தெரிவீர்கள். அதேபோல நெடுங் கோடுகள் கொண்ட சுடிதார் உங்களை உயரமாகக் காட்டும். * முடிந்தவரை குள்ளமாக இருப்பவர்கள் சுடிதாரின் டொப் ஒரு கலர், பொட்டம் பகுதி ஒரு கலர் என்று போடாதீர்கள். இரண்டும் வேறுபட்ட கலர்களாக இருந்தால் உங்களின் தோற்றத்தை உயரக் குறைவாக காண்பித்து விடும். ஒரே கலர் சுடிதார்தான் உங்களுக்கு ஏற்றது. * சிலருக்கு இடுப்பு கொஞ்சம் அகலமாக இருக்கும். அப்படியிருப்பவர்கள் இடுப்பிலிருந்து ஸ்லிப் கட் வருமாறு சுடிதார் தைத்துக் கொள்ளலாம். அதேபோல் வயிறு பெரிதாகத் தெரிபவர்கள் இடுப்பிலிருந்து "ஏ' மாதிரியான லைன் வருமாறு தைத்துக்கொண்டால் வயிறு ஒட்டியதாகத் தெரியும். உயரமாக இருப்பவர்கள்:
* உயரமானவர்கள் குள்ளமான குர்தா போடக் கூடாது. அப்படிப் போட்டால் கால் நீளமாகத் தெரியும். அதேபோல குறுக்குக் கோடுகள் உங்களை ஜம்மென்று காட்டும்.
* ஷிபோன் மெட்ரீரியல் கவர்ச்சிகரமான தோற்றத்தைத் தரும். இந்த சுடிதாரில் குந்தன் வேர்க் எம்பிரோய்டரி செய்யப்பட்டுள்ளது. சின்னச் சின்ன பைப்பிங் (மொத்தம் 16) சுடிதாரை கூடுதல் அழகாக்குகிறது.
* பிரிண்ட் வேர்க் செய்யப்பட்ட பியூர் கிரேப் ஸில்க் மெட்ரீரியல் சுடிதாரைத்தான் சினிமாவில் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சுடிதாரின் ஓரங்களில் செய்யப்பட்டுள்ள கோட்டா லேஸ் பினிஷிங் சுடிதாரை கூடுதல் அழகாக்குகிறது.
* பிரெஞ்ச் கிரேப் மெட்ரீரியல், பஷனாக இருந்த இந்த சுடிதார் மறுபடியும் வந்துள்ளது. சுடிதாரின் பொட்டம் ரௌசர் மாதிரியும் தெரியும். ஸ்கேர்ட் மாதிரியும் தெரியும். சின்னச் சின்ன சீக்வென்ஸ் வேர்க் இந்தச் சுடிதாரை ஸ்டைலாகக் காட்டுகிறது. *உங்கள் தோள்கள் நேராக இல்லையா? அகன்ற நெக்காக தைத்துக்கொள்ளுங்கள். சற்று சரிவான தோள்களா? "நரோ நெக்' உங்களுக்கு எடுப்பாக இருக்கும். கூன் உள்ளவரா? அப்படியென்றால் தோளில் "இன்ஸைட் கட்' கொடுத்து ரெய்லரிடம் தைக்கச் சொல்லுங்கள். கொலர் சுடிதார் யாருக்கெல்லாம் பொருந்தும்?
ஒல்லியாக இருப்பவர்கள் மற்றும் கழுத்து நீளமாக இருப்பவர்களுக்கு கொலர் சுடிதார் மிகப்பொருத்தமாக இருக்கும். * அதிக சதைப்பிடிப்புடன் இருப்பவர்கள் கழுத்தின் பின்புறம் மட்டும் கொலர் வைத்துத் தைத்துக் கொண்டால் அழகாக இருக்கும்.


*நகைகள் வாங்கச் செல்லும்முன் தங்கத்தின் வெள்ளியின் அன்றைய தின மதிப்பீடு என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். *நகைகள் வாங்கச் செல்லுமுன் எந்த நகை வாங்கச் செல்கிறோம் என்பதை உறுதி செய்த பின்னரே கடைக்குச் செல்ல வேண்டும். *தரமான கடைகளில் நகைகளை வாங்குங்கள் காரணம் வீதிக்கு வீதி நகைக்கடைகள் உள்ளன. *நீங்கள் எவ்வளவு பணத்திற்கு நகைவாங்கப்போகிறீர்கள் என்பதனை கடைக்குச் செல்லுமுன் தீர்மாணிக்க வேண்டும். *செய்கூலி எவ் வளவு சதவீதம் சேதாரம் எவ்வளவு சதவீதம் போடப்படுகிறது என்பதனை கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும். *நீங்கள் குறித்துக்காட்டும் வடிவத்தில் நகை செய்வதற்கான பணத்தினை கேட்டுத் தீர்மானித்து முற்பணம் கொடுத்து பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.