Welcome to My Website






Showing posts with label அழகு. Show all posts
Showing posts with label அழகு. Show all posts

முடி உதிர்வது ,முடியின் நுனிப்பகுதி வெடிப்பது, உடைவது என்பது இன்று பெண்கள் சாதாரணமாக எதிர்நோக்கும் பிரச்சினையாகும். இவர்கள் மாறி மாறி எதையாவது செய்வார்கள் ஆனால் எதிலும் சரியான தீர்வு கிடைக்காமல் திணறி விடுவார்கள். முடியை கவனித்து, பராமரிக்காவிட்டால், முடி உடையும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல் முடியின் நுனிப்பகுதியும் பிளவுபடும். அதிகமாக வெயிலிலும், காற்றிலும் வேலை செய்பவர்களின் தலை முடி நடுவில் உடைந்தும் நுனியில் பிளவு பட்டிருப்பதும் சகஜமான விஷயம். கிணற்று தண்ணீரில் குளிப்பவர்களின் தலைமுடி அதிகமாக உடைந்து போக வாய்ப்பிருக்கிறது. மேலும், வயதான முடியும் அடிக்கடி உடைந்து போகும். கெமிக்கல் கலந்த ஷாம்போவை உபயோகித்து தலைக்கு குளிக்க வேண்டாம். சோப்பு போன்றவற்றையும் தலைமுடிக்கு உபயோகிப்பது நல்லதல்ல. முடியின் நடுவில் உடைந்த முடியை மாதா மாதம் கட் செய்து டிரிம் பண்ணினால் சீக்கிரத்திலேயே சரியாகிவிடும். அதேபோல் அவரவர்களின் முடிக்கு தகுந்த கன்டிஷனர் உபயோகிப்பது நல்லது.

. சிம்பிளாக மேக்கப் செய்து கொள்வதுடன் ஸ்மார்ட்டாகவும் தெரிய வேண்டுமானால், ஹேயர் ரீ பொண்டிங் செய்து கொள்ளலாம். அதனால் முடி சொப்ட்டாக பட்டு போல இருக்கும். ஸ்ரெயிட் ஹெயராகவும் பண்ணிக் கொள்ளலாம். அதனால் நல்ல லுக் கிடைக்கும். அதுமட்டுமல்ல, ஒரு நல்ல இமேஜையும் இது கொடுக்கும். ஹெயர் ரீபொண்டிங் செய்து கொள்ள விரும்புபவர்கள் பியூட்டி பார்லருக்குச் சென்று செய்து கொள்ளலாம். இதற்கான செலவும் குறைவுதான். அவரவர் முடியின் நீளம் மற்றும் அடர்த்தியைப் பொறுத்து கட்டணம் மாறுபடும்.

இதே வேளை ஒருவரது தலைமுடி வறட்சியாக இருக்கிறது என்றால் தலை முடிக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்யலாம். தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் ஒயிலால் கூந்தலை மசாஜ் செய்து தலை குளிக்கலாம். ஷாம்போ போட்டுக் குளித்தால், கூந்தலில் கன்டிஷனர் தடவி மேலிருந்து கீழ் நோக்கி தண்ணீர் விட்டு முடியை அலச வேண்டும். கூந்தலை தேய்த்துக் கழுவக் கூடாது. முடியின் வேர்க்காலில் கன்டிஷனர் படாமல் முடியில் மட்டும் அப்ளை செய்வது நல்லது. முதலில் உங்களின் முடி சாதாரண முடி வகையா? அல்லது உடைந்த முடி வகையா? என்று தெரிந்து அதற்கேற்றால் போல் "ஹெயர் ஸ்மூத்திங்' செய்து கொள்ளலாம். அதேபோல் பார்லர்களில் "ஸ்பா' டிரீட்மெண்ட் செய்து கொண்டால்கூட, கூந்தலில் வறட்சி போய்விடும்


அலைபாயும் கூந்தல், பளபளப்பான தேகம், மாசுமருவற்ற சருமம், முத்தான பற்கள், காந்தக் கண்கள், செழிப்பான கன்னம், பவழ இதழ்கள், சொக்க வைக்கும் வனப்பு..இப்படித்தோற்றம் அளிக்க யாருக்குத் தான் விருப்பம் இருக்காது?

ஆரோக்கியம் * உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே அதன் அழகு வெளிப்படுகிறது. ஆகவே வாய்க்குள் போகும் உணவிற்கு ருசியை விட அதன் பயனிற்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதிக இனிப்பு மசாலா வகைகளையும் ஐஸ்க்ரீம் போன்றவைகளையும் எண்ணையில் பொறித்தவைகளையும் நீக்குதல் நல்லது.

இயற்கை தரும் க்ளென்சர்ஸ் * பால் நல்ல க்ளென்சர் என்பதால் தான் கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்துப் பேரழகியாய் இருந்திருக்கிறார் போலும்! குளிர்ந்தபாலில் பஞ்சினைத் தோய்த்து முகம் துடைப்பது சிறந்தது.மேக்கப் போடு முன்பு எப்போதும் முகத்தை க்ளென்சிங் இப்படிச் செய்யவேண்டும்.

* தேங்காயுடைத்ததும் கிடைக்கும் இளநீரும் சிறந்த க்ளென்சிங் மில்க் வீணாக்காமல் முகத்திற்குத் தடவிக் கொள்ளலாம்.

* வறண்ட சருமத்திற்கு இயற்கையான க்ளென்சர் தேனில் பால் சேர்த்து பயன்படுத்துவது என்றால் எண்ணைப் பசை சருமத்தினர் எலுமிச்சை சாற்றினில் சில துளிகள் பால் சேர்த்துக் கலந்து அதைப் பஞ்சினால் தொட்டு சருமத்தை துடைத்து எடுக்கலாம். பளிச் முகத்துக்கு

* பாதாம்பருப்பு சருமத்திற்கு ஒரு அற்புதப் பொருள் எனலாம். 5 பாதாம்பருப்பினை ஊற வைத்து பால் சேர்த்து விழுதாய் அரைத்து தேன் சில துளி சேர்த்து முகத்தில் பூசுங்கள். 20 நிமிடம் ஊறிய பின் முகத்தைக் கழுவுங்கள். பளிச் முகம் இப்போது!

முகப் பொலிவுக்கு * வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமட்டி மற்றும் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசி பிறகுக் கழுவினால் வெய்யிலினால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும். கருப்பு திட்டுகள் மறைய * மூக்கு கன்னங்களில் கருப்பு திட்டாய் இருக்கிறதா? சந்தனம் ஜாதிக்காய் வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீரினில் நைசாக அரைத்து பற்று மாதிரி போடுங்கள்..மங்கு படர்ந்த பகுதிகள் மளாரென மறைந்துபோகும்! கருவளையம் மறைய

* கண்ணுக்கு கீழேயும் கருப்பு வளையம் நமக்கு வெறுப்பான விஷயம் தான்... அதற்கு வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலக் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கறுமை காணாமல் போகும். சருமம் கருமை மாற * முட்டைகோஸின் வெளிப்புற இலைகளை எடுத்து மிக்ஸியிலிட்டு சாறு பிழிந்து அத்துடன் ஒரு ஸ்பூன் ஈஸ்ட், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து கைகளில் பூசி வர சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் கருமை நிறம் மாறி சிவந்து விடும். கழுத்தைப் பராமரிக்க

* நம் முகத்தைத் தாங்கும் கழுத்தையும் நாம் கவனிக்கணும் ..ஒரு ஸ்பூன் வெங்கயச்சாறு சிறிது ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் சிறிது பயற்ற மாவு கலந்து கழுத்திற்கு பூச வேண்டும். பத்து நிமிஷம் கழித்து கீழிருந்து தாடை நோக்கி மெதுவாய் மசாஜ் செய்ய ‘டபுள் சின் ‘ நாளடைவில் ‘சூப்பர் சின்‘ ஆகி விடும்! முகத்தில் புதுப்பொலிவுக்கு

* தர்பூசணி பழச்சாறு பயற்றமாவு கலவை முகத்தில் பூசப்பட்டு வந்தாலும் புதுப்பொலிவு கிடைக்கும். * பப்பாளிப்பழமும் அப்படியே முகத்தில் பூச உகந்தது இயற்கையான ஸ்க்ரப் இது! சிவந்த இதழ்களுக்கு * சின்ன துண்டு பீட்ரூட்டை உதட்டில் அடிக்கடி அழுத்தித் தேய்த்து வர செவ்வாய் (திங்களுக்குப் பின் வருவதல்ல சிவந்த அழகான இதழ்கள்) வரும் நிச்சயம்! நகங்கள் பொலிவு பெற

* பாதாம் எண்ணை சில சொட்டு நகத்தில் தேய்த்து வர ஆரோக்கியமாய் நகங்கள் வளரும்.பேரிச்சம்பழம் கலந்த பால் சாப்பிட்டு வந்தால் வெளிறிய உடைந்த நகங்கள் கூட நன்கு வளரும்.

ஸ்டைலாகவும், அழகாகவும் இருக்கத்தான் ஃபேஷன் பொருட்களைப் பயன்படுத்து கிறோம். ஆனால் சிலசமயங்களில் ஃபேஷன் பொருட்களே நம் ஆரோக்கியத்திற்குப் பிரச் சினையாகி விடுகிறது. எந்தெந்த ஃபேஷன் பொருட்கள், எந்தெந்த மாதிரியான பிரச்சி னையை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாமா.

ஸன்கிளாஸ் சூரியனின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் ஸன்கி ளாஸையே பயன்படுத்துகிறோம். பொது வாக, சற்று டார்க் கலரில் இருக்கின்ற ஸன் கிளாஸைத்தான், பயன்படுத்துகிறோம். ஆனால் உங்களுக்கொன்று தெரியுமா? டார்க் கான கலரில் இருக்கின்ற ஸன்கிளாஸ், சூரிய னிலிருந்து முழுமையாக உங்கள் கண்களைப் பாதுகாக்காது. இது போன்ற கண்ணாடிகள் அல்ட்ரா வயலட் கதிர்களை அதிக அளவு ஈர்த்துக் கொள்கிறது. பொதுவாகவே டார்க் கலர் உடைகள் அதிக அளவு ஒளியையும், வெப்பத்தையும் ஈர்த்துக் கொள்ளும் இல் லையா? அது போலவே ஸ்பெஷல் கோட்டிங் கொடுக்கப் படாத சாதாரண கண் ணாடிகள் கண்களில் எரிச்சல், கண் சிவப் பது போன்ற பிரச்சி னைகளை ஏற்படுத்தி விட்டு விடும். எச்ச ரிக்கை தேவை!

தலைமுடி பள பள கூந்தல் தான் தற்போதைய இளம் சமூகத்தினர் பிடித் தமான ஒன்று. இதையே பிடித்துக் கொண்டு எண் ணற்ற தயாரிப்புக்களை பயண்படுத்துகின்றனர். இதில் நிறையவே கெமிக் கல் கலந்திருக்கிறது. இது உங்கள் தலை முடியின் வேர்க்கால்களை பல மிழக்கச் செய்துவிடு கிறது. விளைவு தலைமுடி கொட்டி வழுக்கையாகி விடுகிற வாய்ப்பிருக்கிறது. அதனால் தரமான ஆயுர்வேத தயாரிப்புக் களைப் பயன்படுத்துங்கள்.

ஜிம்

உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஜிம்முக்குச் சென்று எக்ஸர்சைஸ் செய்வதுதான் நல்ல வழி. இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் நீங்கள் எக்ஸர்சைஸ் செய்யும்போது அணிந்து கொள்ளும் டைட்ஸ்தான் பிரச்சினையே. இதை போட்டுக் கொண்டால் உங்களுடைய அவுட் லுக். என்னவோ அழகாகத்தான் தெரி யும். ஆனால் எக்ஸர்சைஸ் செய்யும்போது இப்படி டைட்டான "அவுட்ஃபிட்'டை போட் டுக் கொண்டால் வியர்வை முழுவதுமாக வெளியேற முடியாமல் தொடை மற்றும் இடுப்பில் அப்படியே நின்றுவிடும். தொடர் ந்து இப்படி வியர்வை வெளியேற முடியாமல் போனால் அந்த இடங்களிலெல்லாம் இன்ஃபெக்ஷன் வர வாய்ப்பிருக்கிறது. ஸோ, எக்ஸர்சைஸ் செய்யும்போது தளர் வான கொட்டன் டிரஸ் தான் பெஸ்ட்! வளையங்கள்

வேலைக்குப் போகும் பெண்க ளும் சரி, மொட லிங் செய்பவர் களும் சரி காது களுக்கு அதி கம் பயன் படுத்துவது பெரிய வளையங் கள் தான். ஜீன்ஸ், சுடிதார், ஃபேஷன் புடைவைகள் என்று எல்லாவிதமான உடைக ளுக்கும் இந்த வளை யங்கள் பொருந்துவ தால் இன்றைய இளவட் டங்களின் ஒட்டு மொத்தமாக ஓட்டும் இந்தபேஷன் வளையங் களுக்குத்தான். இப்படி அடிக்கடி பெரிய பெரிய வளையங்களைப் பயன்படுத்தினால் காதுமடலின் அடிப்பகுதி விரிந்து காதுப்பகுதி களில் தீவிரமான இன்ஃபெக்ஷன்களை ஏற் படுத்தி விடும் அதனால் முடிந்த வரை இது மாதிரியான பெரிய பெரிய வளையங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால் நாலு பேர் பேசுவதைக் கேட்க வாவது நம் காது நல்ல முறையில் இருக்க வேண்டாமா?

ஸ்டொக்கிங்ஸ் எண்பதுகளில் பிரபலமான ஸொக்ஸ் போடும் கலாசாரம் தற்போது மறுபடியும் பேஷனாகிவிட்டது. குறிப்பாக முட்டி வரைக் கும் இறுக்கமாக ஸொக்ஸ் போடும் போது அந்தப் பகுதிகளின் ரத்த ஓட்டத்தை பாதித்து "நரம்புச் சிலந்தி' போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். அதனால் முடிந்த வரை முட்டி வரைக்கும் இறுக்கமான ஸொக்ஸ் போடுவதைத் தவிர்த்துவிடுங்கள். ஹைஹீல்ஸ்

சந்தேகமும் இல்லை. ஹைஹீல்ஸ் உங் களை அழகாகவும் உயரமாகவும் கம்பீரமாக வும் காட்டும் தான். ஆனால் தொடர்ந்து பயன் படுத்தினால் முதுகுவலி, ஆர்த்ரட்டீஸ் போன்ற பிரச்சினைகள் உங்களை ஒரு வழி பண்ணி விடும். அதனால் அடிக்கடி ஹைஹீல்ஸைப் பயன்படுத்தாதீர்கள்!

தரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண் டும். அப்போது தான் நகத் திற்கு எவ்வித பாதிப்பும் வராது. நெயில் பாலீஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து தேர்ந் தெடுங்கள்.* சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.* நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.* நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.* தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.* தினமும் நெயில் பாலீஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும். எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நெயில் பாலீஷ் உபயோகிக்காமல், இருப்பது நல்லது.* ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.* கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.* ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.* மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.* நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.* நெயில் பாலீஷ் போடும் போது, பிரஷ் ஷினால், நகத்தின் அடிப்பகுதியில் நுனி வரை ஒரே தடவையாக போட வேண்டும். அப்போது தான் அவை பளபளப்பாக எவ்வித திட்டுக்களும் இன்றி அழகாக காட்சியளிக்கும்.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும், அதி காலையிலும் கை விரல்களில் விளக்கெண்ணெயை அல்லது ஆலிவ் ஆயில் தடவிக் கொண்டு இரண்டு கைவிரல்களையும் கோர்த்து பிணைந்து பதினைந்து நிமிடங்கள் உருவி விட்டுக் கொண்டால் கைவிரல்கள் சதை பிடிப்பற்று அழகாக இருக்கும்.
கை விரல்களை டைப் அடிப்பது போல் அசைக்கவும். இது கைகளுக்கு நல்ல பயிற்சி.
நகம் வெட்டுவதற்கு முன்
நகம் வெட்டுவதற்கு முன்பு சோப்பு தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிடவும்நகம் வெட்டிய பின்னர் ஸ்கீன் க்ரீம் தடவவும்.
வாரம் ஒரு முறையாவது நகங்களை வெட்டி விடவும்நகங்களை அதிக நேரம் தண்ணீரில் வைக்காதிங்க. நகத்தில் உள்ள ஈர பசை போய்விடும்.நகத்தில் வெடிப்பு இருந்தால் நைல் பாலிஷ் போட்டால் மறையும்.நகங்கள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க உணவில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்.


நம்மில் தலைமுடிப் பிரச்சினை இல்லாதவர் களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆண், பெண் என்ற வேறுபாடு இதற்குக் கிடையாது. பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு தலைப்பொடுகு, இளநரை... இவை ஓயாதப்பிரச்சினை. ஆண்களுக்கு இவை களைவிட தலையாயப் பிரச்சினை வழுக்கை ஏற்படுதல். இளம் வயதிலேயே முடி உதிர்வ தால் முதுமைத்தோற்றத்திற்கு ஆளாகும் நிலை.

முடி உதிர்வது ஏன்?

முடி உதிர்வு என்றால் அதற்கு அடிப்படை யான காரணம் என்ன என்பதை முதலில் ஆராயவேண்டும். முடி உதிர்வு என்பது நோயின் அளவு கோல். உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தான் முடி உதிர்வின் அடிப்படைக் கார ணமாகும். தவிர, அதிகமான எண்ணெய்ப் பசை எண்ணெயே இல்லாமல் முடி வறண்டு போதல், அதிகமான டென்ஷன், இப்படி சில காரணங்களும் கூட இருக்கலாம். காரணம் அறிந்த பின்புதான் சிகிச்சைகளை துவங்க வேண்டும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்த மிக எளிய வழி வெறும் கைகளினால் தலைப்பகுதி யில் இதமாக மசாஜ் செய்து விடுவதுதான். தலையில் இறுக்கமான தொப்பி, ஹேர்பெல்ட் போன்றவற்றை அணி வதாலும் முடி உதிர லாம்.

பொடுகுத் தொல்லையா?

தலைப்பகுதி சருமத்தில் ஏற் படும் வறட்சியின் காரணமாக வும், எண்ணெய் சுரப்பிகள் குறைந்து இறந்த செல்களின் பட லங்கள் உதிர்வதாலும் பொடுகு உண்டாகிறது. இது தொற்றக்கூடிய பிரச்சினை வேறு. எனவே, பொடுகு உள்ளவர்கள் பயன்படுத் திய சீப்பு, டவல், தலையணை உறை போன்ற வற்றை பிறர் பயன் படுத் தவே கூடாது.

பொதுவாக அழகு நிலையங்களில் முடிக்கான, பொடுகு நீக்கும் சிகிச்சைகள், மசாஜ் போன்றவை களைத் தருவார்கள். ஆனால் இங்கு கார ணங்கள் ஆராயப் பட்டு மருந்துகள் தரப்படுகின்றன.

வழுக்கைக்கான காரணம் என்ன?

பரம்பரை தவிர, தலைப்பகுதியில் ஏற்படும் வறட்சியும் அதனால் ஏற்படும் முடி உதிர்வை ஆரம் பத்திலேயே கவனிக் காமல் அலட்சியப் படுத்துவதுமே வழுக்கைக்கு முக் கிய காரணங்களாக அமைகின்றன.

நுனியில் முடி பிளவுபடுவது ஏன்?

உடல் நலம் பாதிக் கப்பட்டுள்ள தன் அடையாளம்தான் நுனி யில் முடி பிளவு படுவது. உணவு முறை களில் மாற்றம் செய் தால் இந்தப் பிரச் சினை தீரும். இதற் கான பிரத்யேக சிகிச் சைகளும் உண்டு. அதேபோல நரை வேக மாக உண்டாகவும் முடிப் பகுதியில் ஏற்படும் அதிர்வுகளும் முக்கிய காரணம். முடி பராமரிப்பிற்கு எளிய வழிகள்

அதிகமாக எண்ணெய் தடவவும் கூடாது அதேபோல் எண்ணெய் தடவா மலும் இருக்கக் கூடாது. தலையை நேரம் கிடைக்கும்போது மென்மையாக மசாஜ் செய்துகொள்வது நல் லது. இதனால் ரத்த ஓட்டம் சீராகும். முடி உதிர் வது நிற்கும்.

குளிர்ந்த நீரில் தலையை அலசுவது நல்லது. ஈரமான தலையை சீப்பினால் வாரக்கூடாது. கூடுமானவரை டிரையர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எண்ணெய்ப்பண்டங்கள், இனிப்புப் பொருட்களை உண்ணாமல் தவிர்ப்பது நல் லது. பொடுகு, பேன் போன்ற பாதிப்புகளுக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சையை நாட வேண்டும். இதேபோல முடி உதிர்வு ஏற்படும் போதும் அலட்சியம் காட்டக்கூடாது. இப்படிச் செய்வது வழுக்கையை உண்டாக்கும்.

பராமரிப்பு

சரியான பராமரிப்பு இல்லாதது, உப்புத் தண்ணீரில் தலை குளிப்பது, போஷாக்கில்லாத ஆகாரம், மருந்தினால் ஏற்படும் பக்க விளை வுள் என பல்வேறு காரணங்களால் கூந்தல் உதிர்கிறது. கூந்தலில் அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இரும்புச் சத்து அதிகம் நிறைந்திருக்கும் உணவினை அதிகம் சாப்பிட வேண்டும்.

விளக்கெண்ணைய், தேங்காய் எண்ணைய், ஆலிவ் எண்ணைய் ஆகியவற்றை சம அள வில் எடுத்து லேசாக சசூடாக்கி தலையில் மசாஜ் செய்து, வெந்நீரில் மூழ்கிப் பிழிந்த டவ லால் தலைக்கு ஒத்தடம் தர வேண்டும். பிறகு தரமான சீயக்காயோ, ஷாம்புவோ போட்டு கூந்தலை அலச வேண்டும். வாரம் ஒருமுறை இப்படிச் செய்து வந்தால் கூந்தல் உதிர்வது நின்று ஆரோக்கியமாகவும் வளரும். முயற்சித்துத்தான் பாருங்களேன்.


முகத்தின் அழகை மேலும் வசீகரப்படுத்துவதில் கண்கள் எவ்வளவு முக்கியம் பெறுகின்றவோ அதைப்போல் உதடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. முறையாக உதடுகளைப் பராமரிக்காமல் விட்டால் உதடு வரண்டு தோல் உரிந்து அது அவலட்சணமாகிவிடும். ஆகவே உதடுகளைப் பராமரிக்க...

பொதுவான ஆலோசனைகள் :

வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும். உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அவலட்சணமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.

மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெயை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும். தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.

லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம். லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும். உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வொஷ் அல்லது தேங்காய் எண்ணெயை உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும். உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு விற்றமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும். உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும். லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் குளொஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் குளொஸ் தடவப்பட வேண்டும். லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.


கா‌ல்களை எ‌ப்போது‌ம் வற‌ட்‌சியாகவு‌ம் வை‌க்க‌க் கூடாது.பாத இடு‌க்குக‌ள் தவிர மற்ற இடங்கள் அனைத்திலும் ஈரப்பதம் தரும் மரு‌ந்துக‌ள் அ‌ல்லது எ‌ண்ணெ‌யை தடவுங்கள்.

இது வெடிப்புக்கள், தோல் உலர்ந்து போதல் போன்ற பாதிப்புக்களை தடுக்கும்.கால்களில் காய்ந்த பகுதிகள் ஏதேனும் தென்பட்டால் அதை பக்குவமாக அகற்றி விடுங்கள்.

கால் ஆணி, கால் கட்டி போன்றவை தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அவற்றை அகற்றி விடுங்கள்.நீங்களாகவே இவற்றை அகற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்; அது வேறு உபாதைகளுக்கு வழிவகுக்கும்.வார‌த்‌தி‌ற்கு ஒரு முறை கா‌ல் ‌விர‌ல் நக‌ங்களை நெ‌‌யி‌ல்க‌ட்டரை‌க் கொ‌ண்டு அக‌ற்று‌ங்க‌ள்


கண்க‌ள் பு‌த்துண‌ர்‌ச்‌‌சியுட‌ன் இரு‌க்க வே‌ண்டுமானா‌ல் அடிக்கடி குளிர்ந்த பாலில் நனைத்த பஞ்சை அ‌ல்லது உருளைக்கிழங்கு துண்டை அ‌ல்லது வெள்ளரி துண்டை அ‌ல்லது இளஞ் சூடான நீரில் நனைக்கப்பட்ட டீ பேகை கண்களின் மேல் சிறிது நேரம் வைக்கலாம். கண்களுக்குப் போதிய உறக்கம் தேவை. உற‌க்க குறைவதாலு‌ம் கருவளைய‌ங்க‌ள் ஏ‌ற்படு‌ம். அதிக வேலைப்பளு. நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்வது. இதற்கு கண்களுக்கு அவ்வப்போது இதமளிக்கம் பயிற்சியும் குளிர்ந்த நீரை‌க் கொ‌ண்டு முகத்தை‌க் கழுவுவது‌ம், அடிக்கடி கண் பகுதியில் படு‌ம்படி தெளிப்பதும் நல்லது. கிளாஸ் அணிவது வெறும் ஃபேஷன் என்று நினைத்து, கண்டதை அணிந்துவிட வேண்டாம். கண்ணுக்கே உலை வைத்துவிடக் கூடும். அ‌திகமாக டி‌வி பா‌ர்‌ப்பதை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம். தொட‌ர்‌ந்து பு‌த்தக‌ங்க‌ள் படி‌ப்பது ந‌ல்லது. க‌ண்ணு‌க்கு ‌சிற‌ந்த ப‌யி‌ற்‌சியாக அது அமையு‌ம்.

விளம்பரங்கள்