தேவையான பொருட்கள்
மைதா மாவு -- 200 கிராம்
சர்க்கரை பொடி -- 100 கிராம்
வெண்ணைய் -- 100 கிராம்
கார்ன்ப்ளேக்ஸ் -- 50 கிராம்
முந்திரி பருப்பு -- 25 கிராம்
பேக்கிங் பவுடர் -- 1/2 ஸ்பூன்
உப்பு -- 1 சிட்டிகை
பூவன் வாழைப்பழம் -- 1 என்னம்
முட்டை -- 1 என்னம்
வாழைப்பழ எசன்ஸ் -- சில துளிகள்
செய்முறை
முந்திரியை பொடியாக்கவும்.
முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும்.
மைதா மாவு, பேக்கிங் பவுடரை கலந்து சலிக்கவும்.
அதனுடன் உப்பு சேர்க்கவும்.
வெண்ணையுடன் சர்க்கரையை பொடியை கலந்து நன்கு அடித்து முட்டை, எசன்ஸ் சேர்த்து கலக்கி இக் கலவையில் கார்ன் ப்ளேக்ஸ், முந்திரி பவுடர் சேர்த்து மைதாமாவு , வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசையவும்.
கலவை ஸ்பூனில் எடுக்கும் பதத்தில் இருக்க வேண்டும்.
நெய் தடவிய ட்ரேயில் கலக்கிய மாவை ஸ்பூனால் எடுத்து சின்ன சின்ன தாக பரவலாக வைக்கவும்.
ஓவனில் 300 டிகிரி பாரன்ஹீட்டில் 20 நிமிடம் வைக்கவும்.
ரெடி.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 150 கிராம்
அரிசிமாவு - 2 மேசைக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கினை வேகவைத்து தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் மாவு, வெண்ணெய் மற்றும் உப்பு கலந்து பிசைந்து கொள்ளவும்.
அதனை நீள உருளையாக உருட்டிக் கொள்ளவும். பிறகு அதனை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
துண்டுகளை நெய் தடவிய தவாவில் போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன்மீது லேசாக வெண்ணெய் தடவி பரிமாறவும்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு : 1 1/4 கப்உருளைக்கிழங்கு – 3பச்சை மிளகாய் – 5வெங்காயம் – 3மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டிகடுகு,சீரகம், சோம்பு,உளுத்தம்பருப்பு – 1/2 தே.கரண்டி (ஒவ்வொன்றும்)நெய் -சிறிதளவுகறிவேப்பில், கொத்துமல்லி- சிறிதளவுஉப்பு தேவையான அளவுஎண்ணை – தேவையான அளவு
செய்முறை
பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்ஹ்து தோலுரித்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், சோம்பு ஆகியவற்றைப்போட்டுத் தாளித்துக்கொள்ளவும்.
பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுச் சிவக்க வதக்கிக்கொண்டு வேகவைத்த உருளைக்கிழங்கையூம் போட்டு வதக்கிக் கொள்ளவேண்டும்.
அதன்பின் மிளகாய்த்தூளையும் உப்பையும் போட்டு நன்கு மசித்துக்கொள்ளுங்கள். கடைசியாக கொத்துமல்லித்தழையையும் போட்டு நன்றாக கிளறிவிடுங்கள்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவைக் கொட்டிச் சிறிது நீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அதைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
அந்த மாவு உருண்டைகளை வட்ட வடிவில் தேய்த்துக்கொண்டு அவற்றின் நடுவே மசாலாவை வைத்து முக்கோண வடிவில் மடித்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைவிட்டு காய்ந்ததும் கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்.
இதை தக்காளி சாஸுடன் பரிமாரலாம்.
தேவையான பொருட்கள் 2 பேருக்கு
பயத்தம்பருப்பு [சிறுபருப்பு] – 1 கப்
தயிர் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 5 அல்லது 6
பூண்டு – 3 அல்லது 4 பல்
உப்பு தேவையான அளவு
செய்முறை
பயத்தம் பருப்பை தாராளமாக தண்ணீர் விட்டு 5 அல்லது 6 மணி நேரம் ஊரவிடவும்.
நன்கு ஊரியதும் பச்சை மிளகாய், பூண்டு,தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவில் தயிர்,உப்பு சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
தோசைகளை வார்த்து எடுத்து தேங்காய் சட்டினியுடன் சூடாக பரிமாறவும்.
குறிப்பு
மாவில் தண்ணீர் அதிகமிருந்தால் ஒரு தே. கரண்டி அரிசி மாவு கலந்து உபயோகிக்கலாம்.
மாவு ஓரளவுக்கு இலகுவாக இருக்கவேண்டும், கெட்டியாக இருந்தால் தோசை கடினமாக இருக்கும்.
தயிரை கடைந்தபின் மாவில் சேர்த்தால் கட்டி தட்டாது.
வேண்டுமளவு தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள் தோசையின் மென்மை கூடும். அளவுக்கதிகமானால் புளித்துவிடும் கவனம்.
சுவை நன்றாக இருக்க சூடாக இருக்கும்போதே உண்ணுங்கள். அவ்வளவுதான்.
மன இறுக்கம், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இசை கேட்பதாலோ, அல்லது நூல்களைப் படிப்பதாலோ அதிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இசைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அனைவரையும் ஆட்டுவிப்பது இசை. இதேபோல் நம்மில் பலர் புத்தக ஆர்வலராக இருப்போம்.
இத்தகைய பழக்க வழக்கங்களால் நமக்கு ஏற்படும் மன அழுத்தம் குறைவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மன அழுத்தம், டென்ஷனாக இருக்கும்போது புத்தகத்தைப் படித்து பலர் அதிலிருந்து விடுபட முயல்கின்றனர். நூல்களைப் படிக்கும் போது அதிலேயே மனம் ஆழ்ந்து விடுவதால் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பில்லை.
தொடர்ந்து 6 நிமிடங்கள் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் மன அழுத்தம் படிப்படியாகக் குறைகிறது. படிக்கும்போது இதயம், தசைகளில் ஏற்படும் படபடப்பு படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலை ஏற்படுவதாக, இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டேவிட் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
புத்தகம் படிப்பதால் 68 சதவீதம் மன அழுத்தம் குறைகிறது. இசையைக் கேட்பதன் மூலம் 61 சதவீதமும், தேநீர் அருந்துவதால் 54 சதவீதமும் மன அழுத்தம் குறைவதாக, அவர் மேலும் கூறியுள்ளார்.
எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் அருகம்புல், இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்குள்ளது.
முழுமுதற்கடவுளான விநாயகருக்கு உகந்த வழிபாட்டுப் பொருளாக அருகம்புல் கருதப்படுகிறது. ஆனால், இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. அருகம்புல்லில் சாறு எடுத்து உட்கொண்டால் உடல் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.
தயாரிப்பது எப்படி?
கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைபடுத்த வேண்டும்.
பின்னர் அருகம்புல்லுடன் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்து, (தேவைப்பட்டால்) துளசி, வில்வம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுக்க வேண்டும். வீட்டில் மிக்ஸி இருப்பின், அதைப் பயன்படுத்தியும் சாறு தயாரிக்கலாம்.
காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவில் இதை பருகலாம்.
மருத்துவ குணங்கள்:
* அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.
* உடல் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக உள்ளது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அது சீராக்குகிறது.
* வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.
* நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.
* நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.
எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்கு கிடைக்கிறது. காலை நேரங்களில் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வோர் இதை பெருமளவில் வாங்கி பருகுகின்றனர்.
சேலம் ஜங்சன், உழவர் சந்தை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் கூட அதிகாலை நேரங்களில் அருகம்புல்சாறு கன ஜோரில் விற்பனையாவதைப் பார்க்கலாம்.
1. தலையணி, தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.
2. காதணி தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை, கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல.;
3. கழுத்தணிகள் கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை, பிச்சியரும்பு மாலை, நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, தாழம்பூ அட்டிகை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்ட சரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.
4. புய அணிகலன்கள் கொந்திக்காய்
5. கை அணிகலன்கள் காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு
6. கைவிரல் அணிகலன்கள் சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப் பூ
7. கால் அணிகலன்கள் மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய்க் கொலுசு, ஆலங்காய் கொலுசு
8. கால் விரல் அணிகள் கான் மோதிரம், காலாழி, தாழ் செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி
9. ஆண்களின் அணிகலன்கள் வீரக் கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண், பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம், கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்துவடம்,. கடுக்கண், குண்டலம். ஆகியனவாகும்.


