சோம்பு:
இதில், உப்புச் சத்து உள்ளது; குடல் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை பெருக் கும் தன்மை கொண்டது. எனவே, ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சீரகம்: விட்டமின் ஏ, சி சத்துகள் கொண்டவை. எல்லாருக்குமே நல்லது என்றாலும், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பித்தத்தை தணித்து, பிரஷரை குறைக்கும். உடல் உஷ்ணத்தை சீராக வைத்திருக்க உதவும்.
வெந்தயம்:
இரும்பு, கால்சியம் சத்துகள் கொண்டது. வளரும் குழந்தைகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது. உடலை இளைக்கச் செய்யும் குணம் கொண்டது. நீரிழிவை தடுக்கும். தாய்ப்பாலை பெருக்கும்.
மிளகு:
காப்சைன் எனும் சத்து உள்ளது. இதய நோய், ரத்த கொதிப்பு, மூச்சுத் தொந்தரவு, ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள், உணவில், மிளகாய்க்கு பதில் மிளகை சேர்க்க, நோயின் கடுமை குறையும். நஞ்சை முறிக்கும். கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. கொழுப்பு அடைப்பையும் விலக்கிடும்.
ஏலக்காய்:
விட்டமின் சி, பி12 சத்து கொண்டது. நீரிழிவு நோய் மற்றும் கண் பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு மிகவும் நல்லது. கண் பார்வைக்கு நல்லது. செரிமானத்தை தூண்டும்.
முந்திரிப் பருப்பு:
புரதம், கொழுப்பு, விட்டமின் இ சத்து கொண்டது. பித்தம் அதிகம் உள்ளவர்களும், இதய நோயாளிகளும் இதை சாப்பிடக் கூடாது. மிளகுடன் முந்திரியை வறுத்து சாப்பிட உடல் பெருகும்.
கிராம்பு:
இரும்பு மற்றும் கால்சிய சத்து நிறைந்தது. தொண்டை வலி, ரணம், வறட்டு இருமல் உள்ளவர் களுக்கு மிகவும் நல்லது. பல்வலியை போக்கும் குணம் கொண்டது. உடல் உஷ்ணத்தை சீர்படுத்தும். கிருமி நாசினியாக பயன்படும். வாய் துர்நாற்றத்தை போக்கக் கூடியது.
மஞ்சள்:
‘டானின்’ எனப்படும் “ஆன்டி ஆக்ஸிடெண்ட்’ உள்ளது. வறட்டு இருமல் உள்ளவர்களுக்கும், அடிக்கடி நோய்வாய்படுபவர்களுக் கும் மிகவும் நல்லது. வாழ்நாளை நீடிக்கச் செய்யும் தன்மை கொண்டது. நோய் தடுப்பாற்றலை பெருக்கும். கிருமிகளை கொல்லும். பித்தத்தை தணிக்கும். காசநோய் கிருமிகளை அழிக்கும். திசுக்களின் ஆயுளை நீடிக்கச் செய்யும்.
இஞ்சி:
கால்சியம், கார்போ ஹைட்ரேட், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட், விட்டமின் ஏ சத்து நிறைந்தது. அஜீரணக் கோளாறு, மூச்சுத் தொல்லை, மூட்டுவலி உள்ளவர்க ளுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப் புண் உள்ளவர்கள் தவிர்க்கவும், பித்தத்தை தணிக்கும் குணம் கொண்டது. வாயுத் தொல்லையை நீக்கும். ஆயுளை நீடிக்க செய்யும். கொழுப்பை கரைக்கும்.
பூண்டு:
விட்டமின் சி, ஏ உள்ளது. பாலில் பூண்டு மற்றும் தேன் கலந்து, தினமும் பருகிவர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும். மூட்டுவலியை போக்கும். வாயுப்பிடிப்பை நீக்கும்.
ஓமம்:
விட்டமின் பி, இரும்பு சத்து கொண்டது. வயிற்று உப்புசம் தொல்லை உள்ளவர்களுக்கு நல்லது. தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் டாக்டர்களின் ஆலோசனை இன்றி சாப்பிடக் கூடாது. பித்தம், வாயுவை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது. துரித செரிமானத்துக்கு உதவும்.
கால்சியம் சத்து கொண்டது. தடிப்பு, அரிப்பு போன்ற “சரும நோய்’ உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வெள்ளைபடுதல் உள்ளவர்கள் இதை சாப்பிடக் கூடாது. வெள்ளைப்படுதலை அதிகரிக்க செய்யும்.