Welcome to My Website






சுக்கு பிஸ்கட்

Posted by tamilvili Thursday, September 3, 2009

தேவையான பொருட்கள்
மைதா மாவு - கால் கிலோ
ஜீனி - 100 கிராம்
டால்டா - 100 கிராம்
சோடா உப்பு - அரைத்தேக்கரண்டி
சுக்குபொடி - இரண்டு தேக்கரண்டி
தேன் - இரண்டு தேக்கரண்டி
செய்முறை
ஜீனியை பொடி செய்து கொள்ளவும். ஒரு வாணலியில் டால்டாவை ஊற்றி உருக்கிக் கொண்டு அதனுடன் பொடித்த ஜீனியையும், தேனையும் சேர்க்கவும்.
இளஞ்சூட்டில் வைத்து கிளறவும். எல்லாம் நன்றாக கலந்தவுடன் இறக்கிவிடவும்.
மைதாவையும், சுக்குப்பொடியையும் ஒன்றாய் சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
சோடா உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து மாவில் ஊற்றி உருக்கி வைத்துள்ள டால்டா, ஜீனி கலவையை மாவில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ரொட்டி மாவுபோல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு சப்பாத்திக் கல்லில் அரை அங்குல கனமான சப்பாத்திகளாக இட்டு பிஸ்கட் அச்சுக் கொண்டு விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.
ஒரு போர்க் கொண்டு பிஸ்கட் துண்டுகளின் மேல் லேசாகக் குத்திவிட்டு ஒரு நெய் தடவிய தட்டில் வைத்து ஓவனில் வைக்கவும்.
வெப்பநிலை 250 டிகிரி பாரன்ஹீட்டில் வைத்து 15 முதல் 20 நிமிடம் வரை வேகவிட்டு எடுக்கவும்.

0 comments

Post a Comment

விளம்பரங்கள்