Welcome to My Website






சோம்பு:
இதில், உப்புச் சத்து உள்ளது; குடல் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை பெருக் கும் தன்மை கொண்டது. எனவே, ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சீரகம்: விட்டமின் ஏ, சி சத்துகள் கொண்டவை. எல்லாருக்குமே நல்லது என்றாலும், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பித்தத்தை தணித்து, பிரஷரை குறைக்கும். உடல் உஷ்ணத்தை சீராக வைத்திருக்க உதவும்.

வெந்தயம்:
இரும்பு, கால்சியம் சத்துகள் கொண்டது. வளரும் குழந்தைகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது. உடலை இளைக்கச் செய்யும் குணம் கொண்டது. நீரிழிவை தடுக்கும். தாய்ப்பாலை பெருக்கும்.

மிளகு:
காப்சைன் எனும் சத்து உள்ளது. இதய நோய், ரத்த கொதிப்பு, மூச்சுத் தொந்தரவு, ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள், உணவில், மிளகாய்க்கு பதில் மிளகை சேர்க்க, நோயின் கடுமை குறையும். நஞ்சை முறிக்கும். கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. கொழுப்பு அடைப்பையும் விலக்கிடும்.

ஏலக்காய்:
விட்டமின் சி, பி12 சத்து கொண்டது. நீரிழிவு நோய் மற்றும் கண் பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு மிகவும் நல்லது. கண் பார்வைக்கு நல்லது. செரிமானத்தை தூண்டும்.

முந்திரிப் பருப்பு:
புரதம், கொழுப்பு, விட்டமின் இ சத்து கொண்டது. பித்தம் அதிகம் உள்ளவர்களும், இதய நோயாளிகளும் இதை சாப்பிடக் கூடாது. மிளகுடன் முந்திரியை வறுத்து சாப்பிட உடல் பெருகும்.

கிராம்பு:
இரும்பு மற்றும் கால்சிய சத்து நிறைந்தது. தொண்டை வலி, ரணம், வறட்டு இருமல் உள்ளவர் களுக்கு மிகவும் நல்லது. பல்வலியை போக்கும் குணம் கொண்டது. உடல் உஷ்ணத்தை சீர்படுத்தும். கிருமி நாசினியாக பயன்படும். வாய் துர்நாற்றத்தை போக்கக் கூடியது.

மஞ்சள்:
‘டானின்’ எனப்படும் “ஆன்டி ஆக்ஸிடெண்ட்’ உள்ளது. வறட்டு இருமல் உள்ளவர்களுக்கும், அடிக்கடி நோய்வாய்படுபவர்களுக் கும் மிகவும் நல்லது. வாழ்நாளை நீடிக்கச் செய்யும் தன்மை கொண்டது. நோய் தடுப்பாற்றலை பெருக்கும். கிருமிகளை கொல்லும். பித்தத்தை தணிக்கும். காசநோய் கிருமிகளை அழிக்கும். திசுக்களின் ஆயுளை நீடிக்கச் செய்யும்.

இஞ்சி:
கால்சியம், கார்போ ஹைட்ரேட், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட், விட்டமின் ஏ சத்து நிறைந்தது. அஜீரணக் கோளாறு, மூச்சுத் தொல்லை, மூட்டுவலி உள்ளவர்க ளுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப் புண் உள்ளவர்கள் தவிர்க்கவும், பித்தத்தை தணிக்கும் குணம் கொண்டது. வாயுத் தொல்லையை நீக்கும். ஆயுளை நீடிக்க செய்யும். கொழுப்பை கரைக்கும்.

பூண்டு:
விட்டமின் சி, ஏ உள்ளது. பாலில் பூண்டு மற்றும் தேன் கலந்து, தினமும் பருகிவர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும். மூட்டுவலியை போக்கும். வாயுப்பிடிப்பை நீக்கும்.

ஓமம்:
விட்டமின் பி, இரும்பு சத்து கொண்டது. வயிற்று உப்புசம் தொல்லை உள்ளவர்களுக்கு நல்லது. தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் டாக்டர்களின் ஆலோசனை இன்றி சாப்பிடக் கூடாது. பித்தம், வாயுவை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது. துரித செரிமானத்துக்கு உதவும்.

பெருங்காயம்:
கால்சியம் சத்து கொண்டது. தடிப்பு, அரிப்பு போன்ற “சரும நோய்’ உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வெள்ளைபடுதல் உள்ளவர்கள் இதை சாப்பிடக் கூடாது. வெள்ளைப்படுதலை அதிகரிக்க செய்யும்.

மைக்ரோ அவனில் சேமியா உப்புமா செய்வது எப்படின்னு
பார்க்கலாம் வாங்க.






INGREDIENTS பட்டியல் வறுத்த சேமியா - 2 கப், நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1, பச்சை மிளகாய்- 1 நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்,
கறிவேப்பிலை கொஞ்சம், தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, எண்ணெய். சுடு தண்ணீர் - 2 கப், உப்பு தேவைக்கேற்ப




1. மைக்ரோ வேவ் பாத்திரத்தில் தாளிக்க கொடுத்திருக்கும்
சாமான்களை சேர்த்து மூடி 3 நிமிடம் வைக்கவும்.
(மூடாமல் வைத்தால் கடுகு, எண்ணெய் ஆகியவை தெளித்து
அவனை சுத்தமாக துடைக்க வேண்டியது ஆகும்)

2. எடுத்து வெங்காயம் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள்
வைக்கவும்.

3.வறுத்த சேமியா, சுடு தண்ணீர், உப்பு சேர்த்து
நன்கு கலக்கி 5 நிமிடங்கள் மைக்ரோ ஹையில்
வைக்கவும்.

4. எடுத்து ஒரு முறை நன்கு கிளறி தேவையெனில்
மேலும் 2 நிமிடங்கள் வைக்கவும்.

சேமியா உப்புமா ரெடி.

அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள் இன்ன உணவு இன்ன தன்மையுடையது என்பதை உணர்ந்து உடல்நலனில் கவனமாக இருந்திருக்கின்றனர். இப்போது பலருக்கு என்ன உணவுப்பொருள் என்ன கலோரி என்று கவனமிருக்கிறது உடல் பருமனாகிவிடும் என்ற பயத்தின் காரணமாக , ஆனால் அதில் என்ன
சத்து இருக்கிறது அதை எப்போது சேர்ப்பது எப்போது சேர்க்காமல் இருப்பது என்பது தெரிவதில்லை. அவசரயுகத்தில் எளிதாக சமைப்பதையும் , உடலுக்கு ஒன்று என்றால் மருத்துவர் மட்டுமே கதி என்று இருப்பதையும் இளந்தலைமுறை பழகிக்கொண்டிருந்தால் நம் பாரம்பரிய பெருமைகள் பழம்பெருமைகளாகி அழிந்து விடும்.

இங்கே சில பொருட்களின் தன்மைகள்

உடற்சூட்டை தணிப்பவை
பச்சைப்பயிறு , மோர் , உளுந்தவடை , பனங்கற்கண்டு , வெங்காயம் , சுரைக்காய் , நெல்லிக்காய் , வெந்தயக்கீரை , மாதுளம் பழம் நாவற்பழம் , கோவைக்காய் , இளநீர்

ருசியின்மையைப் போக்குபவை

புதினா , மல்லி , கறிவேப்பிலை , நெல்லிக்காய் , எலுமிச்சை , மாவடு , திராட்சை , வெல்லம் , கருப்பட்டி , மிளகு , நெற்பொறி

சிவப்பணு உற்பத்திக்கு

புடலைங்காய் , பீட்ரூட் , முருங்கைக்கீரை , அவரை , பச்சைநிறக் காய்கள் , உளுந்து , துவரை , கம்பு , சோளம் கேழ்வரகு ,பசலைக்கீரை

மருந்தை முறிக்கும் உணவுகள்

அகத்தி , பாகற்காய், வேப்பிலை , நெய் , கடலைப்பருப்பு , கொத்தவரை , எருமைப்பால் . சோம்பு , வெள்ளரிக்காய்

விஷத்தை நீக்கும் உணவுகள்

வெங்காயம் , பூண்டு , சிறுகீரை , வேப்பிலை , மிளகு , மஞ்சள் , காயம்

பித்தம் தணிப்பவை

சீரகம் , கருப்பட்டி , வெல்லம் , சுண்டைவற்றல் செவ்விளநீர் , அரைக்கீரை , எலுமிச்சை

இன்னும் எத்தனையெத்தனையோ இருக்கும் நான் எழுதியவை சில மட்டுமே. அவரவர் வீட்டில் இருக்கும் வயதானவர்களிடம் கேட்டு மேலும் தெரிந்து கொள்ளுங்கள் . அனுபவத்தில் சிறந்த வயதானவர்களின் பொக்கிஷத்தை மூடி சாவியைத் தொலைத்து விடாதீர்கள் .

தேவையானப் பொருட்கள்
மைதா மாவு – 100 கிராம்
தேன் - 60 மிலி
முட்டை – 5
கேஸ்டர் சுகர் – 150 கிராம்
பேக்கிங் பவுடர் - 3/4 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி
மைதா மாவை சலித்து வைத்துக் கொள்ளவும். மற்ற மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
முட்டையுடன் கேஸ்டர் சுகரை சேர்த்து அடிக்கவும்.
அதன் பின்னர் இந்த கலவையில் தேனை சேர்த்து நன்கு அடிக்கவும். கலவை ரிப்பன் பதத்திற்கு வரும்வரை(சுமார் 10 நிமிடங்கள்) அடிக்கவும்.
பிறகு எசன்ஸ் ஊற்றி கலந்து அதில் மாவை சிறிது சிறிதாக தூவி கலக்கவும். மாவை கலக்க மட்டும், பீட்டரை பயன்படுத்தாமல் கரண்டியை போட்டு மென்மையாக கலக்கவும்.
ஓவனை 350 F முற்சூடு செய்யவும். எல்லாம் ஒன்றாக சேரும்படி நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
பேக்கிங் ட்ரேயில் பார்ச்மெண்ட் பேப்பர் /ஃபாயில் பேப்பரை போட்டு பின் கலவையை அதில் ஊற்றவும்.
பின் கலவையை 30 நிமிடங்கள் ஓவனில் வைத்து பேக் செய்து எடுக்கவும்.
தித்திக்கும் தேன் கேக் தயார். இதில் தேனின் சுவை தூக்கலாக தெரியும். தேன் சுவை பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்
மைதா - 100 கிராம்
ரவை - 100 கிராம்
டால்டா - 200 கிராம்
ஏலக்காய் - 2
சீனி - 150 கிராம்
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
உப்பு - சிறிதளவு
பொரிப்பதற்கு எண்ணெய் - கால் கிலோ
செய்முறை
மைதாவை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். ரவாவை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மைதா, ரவா, சீனி, தேங்காய், ஏலக்காய், டால்டா, உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு அதனை எடுத்து ஒரு ட்ரேயில் பரப்பி, பிஸ்கட் அளவு வெட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

நம்மில் பல பேர் சிறு தலைவலி, சளி, காய்ச்சல் போன்றவற்றிக்கு கூட உடனே மருந்து சாப்பிட்டு விடுவார்கள். இதில் என்ன தவறு இருக்கு! தலைவலி காய்ச்சல் என்றால் மருந்து எடுத்துக்கொண்டால் தானே சரி ஆகும்! என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

நான் கூறுவது சிறு தலைவலி மற்றும் தொடக்க காய்ச்சலுக்கு மட்டுமே! தீவிர பிரச்சனைக்கு அல்ல.

நமக்கு அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததே. அதனால தான் இது ஒரு சிலருக்கு அடிக்கடி ஏற்படுகிறது. கொஞ்சம் தண்ணீர் மாறினாலோ, தட்பவெட்ப நிலை மாறினாலோ இதன் தாக்கம் அதிகமாக இருக்கும், இதற்க்கு முக்கிய காரணம் நம் உடல் அந்த மாற்றத்தை ஏற்று கொள்ளக்கூடிய அளவிற்கு திராணி இல்லாததே காரணம்.

கொஞ்சம் (நிறைய) பேருக்கு, இப்படின்னா காய்ச்சல் தலைவலி சளி வந்து விடும் அவர்களை கவனித்தீர்கள் என்றால் அவர்கள் அதிகம் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களா இருப்பார்கள்.

ஒரு சிலருக்கு இவைகள் அவர்கள் பக்கமே வராது அப்படியே வந்தாலும் விரைவில் சரியாகி விடும், காரணம் இதை போல நேர்ந்தால் உடனடியாக மருந்து உட்கொள்ள மாட்டார்கள். ஏதாவது சூடா காஃபி, தூக்கம் அல்லது ரசம் சாதமோடு முடித்து கொள்வார்கள்.

நம் உடலுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையே ஏதாவது நம் உடலுக்கு நேர்ந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனபது தான். நமக்கு ஏற்படும் பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நம் உடல் இருக்கும். எனவே அது செய்து முடிக்கும் முன்பே நாம் மருந்து எடுத்துகொண்டால் நம் உடல் அதற்க்கு பழகி விடும். எனவே வரும் தலைவலி காய்ச்சல் போன்றவற்றை தடுக்க முயற்சிகள் எடுக்காது, அப்படி வந்தவற்றையும் எளிதில் குணப்படுத்தாது, எனவே நீங்கள் மருந்து சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் என்ற நிலைக்கு உங்கள் உடல்நிலை வந்து விடும்.

முதலில் தலைவலிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டவர்கள், போக போக இரண்டு மூன்று சாப்பிட்டால் தான் சரி ஆகும் என்ற நிலைமை வந்து விடும் அல்லது ஸ்ட்ராங்கானா மருந்து உட்கொண்டால் மட்டுமே கேட்கும் படி நம் உடல் பழகி விடும், அதோடில்லாமல் நமது உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைந்து அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் போன்றவைகள் ஆக்கிரமித்து கொள்ளும், உடனே குணமும் ஆகாது ஒரு வாரத்திற்கு மூக்கை உறிஞ்சுகிட்டு இருக்க வேண்டியது தான்.

இதை போன்ற நிலையை தவிர்க்க மருத்துவரிடம் செல்லாமல் நீங்களே தலைவலிக்கும் சளிக்கும் காய்ச்சலுக்கும் (Saridon, Crosin, Vicks action 500, Metacin, Anacin(temporarily relieves minor aches and pains due to headache) போன்றவை) மருந்து உட்கொள்வீர்கள் தானே, அந்த சமயங்களில் அதற்க்கு பதிலாக ஒரு தூக்கமோ, சூடாக ஒரு காஃபியோ அல்லது ரசம் சாதம் மட்டுமோ சாப்பிட்டு நன்கு ஓய்வு எடுத்தாலே போதுமானது. இரவில் படுக்கும் போது வயிற்று வலி வந்தால் உடலின் உஷ்ணமாக கூட இருக்கலாம், இதற்க்கு சிறிது வெந்தயத்தை மோரில் கலந்து சாப்பிட்ட பிறகு தூங்கினால் சரி ஆகி விடும்.

இதை போல செய்ய முடியாத நிலைமையில் இருந்தால் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

மருந்து மாத்திரைகளை தவிர்த்தால் மட்டுமே (அவசியமான நேரங்களில் அல்ல) நமது உடல் நலம் சிறப்பாக இருக்கும், இதை போல தொந்தரவுகள் நம்மை நெருங்காது.

டிஸ்கி

மேற்கூறிய அனைத்தும் தொடக்க நிலைக்கு மட்டுமே, இதற்காக நாமே மருத்துவராக கருதி கொண்டு அலட்சியமாக இருந்து விடக்கூடாது, குணமாகவில்லை என்றால் மருத்துவரை அணுகி சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்
இடியாப்ப மாவு - 2 கப்
துவரம்பருப்பு - அரை கப்
துருவிய தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 4
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் இடியாப்பங்கள் தயார் செய்து எடுத்து, அவற்றை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
போதுமான நீரில் துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, மிளகாய்வற்றல் சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் வேக வைத்த பருப்பு, தேங்காய்த்துருவல், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சுமார் கால் மணி நேரம் கொதிக்க விடவும்.
அதன் பின்னர் இந்த கரைசலை உதிர்த்த இடியாப்பத்தின் மேல் ஊற்றி, கிளறி பரிமாறவும்.

தேவையான பொருட்கள்
மைதா மாவு - கால் கிலோ
ஜீனி - 100 கிராம்
டால்டா - 100 கிராம்
சோடா உப்பு - அரைத்தேக்கரண்டி
சுக்குபொடி - இரண்டு தேக்கரண்டி
தேன் - இரண்டு தேக்கரண்டி
செய்முறை
ஜீனியை பொடி செய்து கொள்ளவும். ஒரு வாணலியில் டால்டாவை ஊற்றி உருக்கிக் கொண்டு அதனுடன் பொடித்த ஜீனியையும், தேனையும் சேர்க்கவும்.
இளஞ்சூட்டில் வைத்து கிளறவும். எல்லாம் நன்றாக கலந்தவுடன் இறக்கிவிடவும்.
மைதாவையும், சுக்குப்பொடியையும் ஒன்றாய் சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
சோடா உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து மாவில் ஊற்றி உருக்கி வைத்துள்ள டால்டா, ஜீனி கலவையை மாவில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ரொட்டி மாவுபோல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு சப்பாத்திக் கல்லில் அரை அங்குல கனமான சப்பாத்திகளாக இட்டு பிஸ்கட் அச்சுக் கொண்டு விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.
ஒரு போர்க் கொண்டு பிஸ்கட் துண்டுகளின் மேல் லேசாகக் குத்திவிட்டு ஒரு நெய் தடவிய தட்டில் வைத்து ஓவனில் வைக்கவும்.
வெப்பநிலை 250 டிகிரி பாரன்ஹீட்டில் வைத்து 15 முதல் 20 நிமிடம் வரை வேகவிட்டு எடுக்கவும்.

கார் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை விடுக்கும் கேஸ் பெடல் ஒன்றை சில கார்களில் நிஸ்ஸான் அறிமுகப்படுத்தவுள்ளது.

அதாவது ஏதோ ஒன்றுடன் கார் மோதும் நிலை ஏற்படும்போது இந்த கேஸ் பெடல் சற்றே தன்னை தூக்கிக் கொள்ளும். இந்த எச்சரிக்கையை உணர்ந்து ஓட்டுனர்கள் ஆக்சிலேட்டரிலிருந்து காலை எடுத்து விட்டால் கார் தானாகவே நின்று விடும்.

ராடார் உணர் கொம்புகள் (Sensors) மற்றும் கணினி இணைந்த இந்த தொழில்நுட்பம் காரின் வேகம் மற்றும் முன்னால் செல்லும் அல்லது வரும் வாகனத்தின் தூரம் ஆகியவற்றை கணித்து விடும் என்று நிஸ்ஸான் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட கார்கள் இந்த ஆண்டு முதல் ஜப்பானிலும் அடுத்த ஆண்டில் அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று அந்த நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது.

நம் பழக்கும் ஒரு விலங்கு போல் சாலையின் ஆபத்துகளை இது முன் கூட்டியே நமக்கு அறிவித்து விடும். மனிதனும் எந்திரமும் சேர்ந்து பணியாற்றி அபாயத்தை தடுத்துக் கொள்ளலாம் என்று நிஸ்ஸானின் மூத்த மேலாளர் யூசுகே அகட்சு தெரிவித்துள்ளார்.

அதாவது ஒருவர் குதிரையில் பயணம் செய்வது போல்தான் இது... குதிரையின் கட்டுப்பாடு நம் கையில் இருப்பதுபோல் இதில் எந்திரத்தின் கட்டுப்பாட்டில் நாம்... என்று அவர் மேலும் இதனை விரிவுபடுத்தினார்.

கேஸ் பெடலிலிருந்து ஓட்டுனர்கள் காலை எடுத்தவுடன் பிரேக்குகள் தானாகவே வேலை செய்து காரை நிறுத்தி விடும். ஆனால் எச்சரிக்கையை உணராமல் காலை ஆக்சிலேட்டரிலேயே வைத்திருந்தால் கார் போய்க்கொண்டுதான் இருக்கும்.

மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுகிறீர்களா... இதோ வருகிறது எச்சரிக்கை!

காரில் உள்ள கியரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் ஓட்டுனரின் வியர்வையிலிருந்து அவர் குடித்திருக்கும் மதுவின் அளவை கணக்கிட்டு விடும் அதிசய தொழில்நுட்பம் ஒன்றையும் பரிசோதனை முயற்சியாக நிஸ்ஸான் செய்துள்ளது.

அதாவது குறிப்பிட்ட அளவிற்கு மேல் மது அருந்தியிருந்தீர்கள் என்றால் காரின் எஞ்சின் நிற்காது அவ்வளவுதான். மற்றபடி மின் குரல் ஒன்று வந்து உங்களை எச்சரிக்கை செய்து கொண்டிருக்கும்.

ஏனெனில் நம் நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது என்பது தினசரி நடவடிக்கையாக மாறியுள்ளது. இதனால் ஜப்பானில் கடந்த ஆண்டு சுமார் 611 விபத்துகள் நடந்துள்ளதாக நிஸ்ஸான் கூறுகிறது.

மேலும் ஓட்டுனர் வண்டியை தடம் மாற்றி தட்டுத் தடுமாறி ஓட்டுகிறாரா, ஓட்டுனர் குடித்திருக்கிறாரா அல்லது போதையில் ஓட்டுகிறாரா என்பதை கணினி மயமாக்கப்பட்ட காமிரா ஒளி மூலமாக காட்டி விடும்.

இது போன்ற கண்காணிப்புகள் நிறைந்த தொழில்நுட்பம் கொண்ட ஒரு காரை மக்கள் பொதுவாக விரும்ப மாட்டார்கள்தான்... எனினும் டெலிவரி டிரக்குகள், டாக்சி கேப்கள் ஆகியவற்றை நிர்வகிக்க இத்தகைய தொழில்நுட்பங்கள் அத்தியாவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றனர் என்று நிஸ்ஸான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் முக்கியமான அதிக பாதுகாப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பெரும்பாலான விபத்துகள் தடம் மாறுவதால் ஏற்படுவதே. ஆனால் இது புதிய தொழில்நுட்ப வாகனங்கள் தடம் மாறினாலும் மீண்டும் நேரான தடத்திற்கு தானாகவே வந்து விடும். இந்த தட தொழில்நுட்பம் அமெரிக்காவில் இன்ஃபினிடி எக்ஸ் லக்சுரி மாடல் கார்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதே போல் நடந்து செல்பவர்களின் மேல் கார் இடித்து விடும் பட்சத்தில் பம்பரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் எஞ்சின் மூடியை லேசாக தூக்கி அவருக்கு தீவிரமாக அடிபடாமல் காக்கிறது.

ஸ்போர்ட்ஸ் மாடல் கார்களில் எஞ்சின் மூடிக்கும் எஞ்ஜினுக்குமான இடைவெளி மிகக்குறைவாக இருக்கும். இம்மாதிரி கார்களில் அடிபடும்போது காயங்கள் தீவிரமாக ஏற்படுகிறது. எனவே மூடி லேசாக தூக்குவதன் மூலம் எச்சரிக்கை விடுத்து அடிபடுபவர் பெருமளவு காயம் ஏற்படாமல் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதுபோன்ற வசதி தற்போது ஃபோர்டின் ஜாகுவார் மற்றும் ஹோன்டா கார்களில் உள்ளது. ஜப்பானில் இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிஸ்ஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏனெனில் நம் நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது என்பது தினசரி நடவடிக்கையாக மாறியுள்ளது. இதனால் ஜப்பானில் கடந்த ஆண்டு சுமார் 611 விபத்துகள் நடந்துள்ளதாக நிஸ்ஸான் கூறுகிறது.

மேலும் ஓட்டுனர் வண்டியை தடம் மாற்றி தட்டுத் தடுமாறி ஓட்டுகிறாரா, ஓட்டுனர் குடித்திருக்கிறாரா அல்லது போதையில் ஓட்டுகிறாரா என்பதை கணினி மயமாக்கப்பட்ட காமிரா ஒளி மூலமாக காட்டி விடும்.

இது போன்ற கண்காணிப்புகள் நிறைந்த தொழில்நுட்பம் கொண்ட ஒரு காரை மக்கள் பொதுவாக விரும்ப மாட்டார்கள்தான்... எனினும் டெலிவரி டிரக்குகள், டாக்சி கேப்கள் ஆகியவற்றை நிர்வகிக்க இத்தகைய தொழில்நுட்பங்கள் அத்தியாவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றனர் என்று நிஸ்ஸான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் முக்கியமான அதிக பாதுகாப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பெரும்பாலான விபத்துகள் தடம் மாறுவதால் ஏற்படுவதே. ஆனால் இது புதிய தொழில்நுட்ப வாகனங்கள் தடம் மாறினாலும் மீண்டும் நேரான தடத்திற்கு தானாகவே வந்து விடும். இந்த தட தொழில்நுட்பம் அமெரிக்காவில் இன்ஃபினிடி எக்ஸ் லக்சுரி மாடல் கார்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதே போல் நடந்து செல்பவர்களின் மேல் கார் இடித்து விடும் பட்சத்தில் பம்பரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் எஞ்சின் மூடியை லேசாக தூக்கி அவருக்கு தீவிரமாக அடிபடாமல் காக்கிறது.

ஸ்போர்ட்ஸ் மாடல் கார்களில் எஞ்சின் மூடிக்கும் எஞ்ஜினுக்குமான இடைவெளி மிகக்குறைவாக இருக்கும். இம்மாதிரி கார்களில் அடிபடும்போது காயங்கள் தீவிரமாக ஏற்படுகிறது. எனவே மூடி லேசாக தூக்குவதன் மூலம் எச்சரிக்கை விடுத்து அடிபடுபவர் பெருமளவு காயம் ஏற்படாமல் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதுபோன்ற வசதி தற்போது ஃபோர்டின் ஜாகுவார் மற்றும் ஹோன்டா கார்களில் உள்ளது. ஜப்பானில் இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிஸ்ஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேவையான பொருட்கள்
மைதா மாவு -- 200 கிராம்
சர்க்கரை பொடி -- 100 கிராம்
வெண்ணைய் -- 100 கிராம்
கார்ன்ப்ளேக்ஸ் -- 50 கிராம்
முந்திரி பருப்பு -- 25 கிராம்
பேக்கிங் பவுடர் -- 1/2 ஸ்பூன்
உப்பு -- 1 சிட்டிகை
பூவன் வாழைப்பழம் -- 1 என்னம்
முட்டை -- 1 என்னம்
வாழைப்பழ எசன்ஸ் -- சில துளிகள்
செய்முறை
முந்திரியை பொடியாக்கவும்.
முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும்.
மைதா மாவு, பேக்கிங் பவுடரை கலந்து சலிக்கவும்.
அதனுடன் உப்பு சேர்க்கவும்.
வெண்ணையுடன் சர்க்கரையை பொடியை கலந்து நன்கு அடித்து முட்டை, எசன்ஸ் சேர்த்து கலக்கி இக் கலவையில் கார்ன் ப்ளேக்ஸ், முந்திரி பவுடர் சேர்த்து மைதாமாவு , வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசையவும்.
கலவை ஸ்பூனில் எடுக்கும் பதத்தில் இருக்க வேண்டும்.
நெய் தடவிய ட்ரேயில் கலக்கிய மாவை ஸ்பூனால் எடுத்து சின்ன சின்ன தாக பரவலாக வைக்கவும்.
ஓவனில் 300 டிகிரி பாரன்ஹீட்டில் 20 நிமிடம் வைக்கவும்.
ரெடி.

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 150 கிராம்
அரிசிமாவு - 2 மேசைக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கினை வேகவைத்து தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் மாவு, வெண்ணெய் மற்றும் உப்பு கலந்து பிசைந்து கொள்ளவும்.
அதனை நீள உருளையாக உருட்டிக் கொள்ளவும். பிறகு அதனை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
துண்டுகளை நெய் தடவிய தவாவில் போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன்மீது லேசாக வெண்ணெய் தடவி பரிமாறவும்.

தேவையான பொருட்கள்
கடலை மாவு : 1 1/4 கப்உருளைக்கிழங்கு – 3பச்சை மிளகாய் – 5வெங்காயம் – 3மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டிகடுகு,சீரகம், சோம்பு,உளுத்தம்பருப்பு – 1/2 தே.கரண்டி (ஒவ்வொன்றும்)நெய் -சிறிதளவுகறிவேப்பில், கொத்துமல்லி- சிறிதளவுஉப்பு தேவையான அளவுஎண்ணை – தேவையான அளவு
செய்முறை
பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்ஹ்து தோலுரித்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், சோம்பு ஆகியவற்றைப்போட்டுத் தாளித்துக்கொள்ளவும்.
பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுச் சிவக்க வதக்கிக்கொண்டு வேகவைத்த உருளைக்கிழங்கையூம் போட்டு வதக்கிக் கொள்ளவேண்டும்.
அதன்பின் மிளகாய்த்தூளையும் உப்பையும் போட்டு நன்கு மசித்துக்கொள்ளுங்கள். கடைசியாக கொத்துமல்லித்தழையையும் போட்டு நன்றாக கிளறிவிடுங்கள்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவைக் கொட்டிச் சிறிது நீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அதைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
அந்த மாவு உருண்டைகளை வட்ட வடிவில் தேய்த்துக்கொண்டு அவற்றின் நடுவே மசாலாவை வைத்து முக்கோண வடிவில் மடித்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைவிட்டு காய்ந்ததும் கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்.
இதை தக்காளி சாஸுடன் பரிமாரலாம்.

தேவையான பொருட்கள் 2 பேருக்கு

பயத்தம்பருப்பு [சிறுபருப்பு] – 1 கப்
தயிர் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 5 அல்லது 6
பூண்டு – 3 அல்லது 4 பல்
உப்பு தேவையான அளவு

செய்முறை

பயத்தம் பருப்பை தாராளமாக தண்ணீர் விட்டு 5 அல்லது 6 மணி நேரம் ஊரவிடவும்.

நன்கு ஊரியதும் பச்சை மிளகாய், பூண்டு,தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த மாவில் தயிர்,உப்பு சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.

தோசைகளை வார்த்து எடுத்து தேங்காய் சட்டினியுடன் சூடாக பரிமாறவும்.

குறிப்பு

மாவில் தண்ணீர் அதிகமிருந்தால் ஒரு தே. கரண்டி அரிசி மாவு கலந்து உபயோகிக்கலாம்.
மாவு ஓரளவுக்கு இலகுவாக இருக்கவேண்டும், கெட்டியாக இருந்தால் தோசை கடினமாக இருக்கும்.
தயிரை கடைந்தபின் மாவில் சேர்த்தால் கட்டி தட்டாது.
வேண்டுமளவு தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள் தோசையின் மென்மை கூடும். அளவுக்கதிகமானால் புளித்துவிடும் கவனம்.
சுவை நன்றாக இருக்க சூடாக இருக்கும்போதே உண்ணுங்கள். அவ்வளவுதான்.

மன இறுக்கம், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இசை கேட்பதாலோ, அல்லது நூல்களைப் படிப்பதாலோ அதிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இசைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அனைவரையும் ஆட்டுவிப்பது இசை. இதேபோல் நம்மில் பலர் புத்தக ஆர்வலராக இருப்போம்.

இத்தகைய பழக்க வழக்கங்களால் நமக்கு ஏற்படும் மன அழுத்தம் குறைவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தம், டென்ஷனாக இருக்கும்போது புத்தகத்தைப் படித்து பலர் அதிலிருந்து விடுபட முயல்கின்றனர். நூல்களைப் படிக்கும் போது அதிலேயே மனம் ஆழ்ந்து விடுவதால் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பில்லை.

தொடர்ந்து 6 நிமிடங்கள் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் மன அழுத்தம் படிப்படியாகக் குறைகிறது. படிக்கும்போது இதயம், தசைகளில் ஏற்படும் படபடப்பு படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலை ஏற்படுவதாக, இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டேவிட் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

புத்தகம் படிப்பதால் 68 சதவீதம் மன அழுத்தம் குறைகிறது. இசையைக் கேட்பதன் மூலம் 61 சதவீதமும், தேநீர் அருந்துவதால் 54 சதவீதமும் மன அழுத்தம் குறைவதாக, அவர் மேலும் கூறியுள்ளார்.

எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் அருகம்புல், இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்குள்ளது.

முழுமுதற்கடவுளான விநாயகருக்கு உகந்த வழிபாட்டுப் பொருளாக அருகம்புல் கருதப்படுகிறது. ஆனால், இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. அருகம்புல்லில் சாறு எடுத்து உட்கொண்டால் உடல் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

தயாரிப்பது எப்படி?

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைபடுத்த வேண்டும்.

பின்னர் அருகம்புல்லுடன் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்து, (தேவைப்பட்டால்) துளசி, வில்வம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுக்க வேண்டும். வீட்டில் மிக்ஸி இருப்பின், அதைப் பயன்படுத்தியும் சாறு தயாரிக்கலாம்.

காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவில் இதை பருகலாம்.

மருத்துவ குணங்கள்:

* அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

* உடல் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக உள்ளது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அது சீராக்குகிறது.

* வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

* நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

* நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்கு கிடைக்கிறது. காலை நேரங்களில் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வோர் இதை பெருமளவில் வாங்கி பருகுகின்றனர்.

சேலம் ஜங்சன், உழவர் சந்தை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் கூட அதிகாலை நேரங்களில் அருகம்புல்சாறு கன ஜோரில் விற்பனையாவதைப் பார்க்கலாம்.

1. தலையணி, தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.

2. காதணி தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை, கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல.;

3. கழுத்தணிகள் கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை, பிச்சியரும்பு மாலை, நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, தாழம்பூ அட்டிகை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்ட சரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.

4. புய அணிகலன்கள் கொந்திக்காய்

5. கை அணிகலன்கள் காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு

6. கைவிரல் அணிகலன்கள் சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப் பூ

7. கால் அணிகலன்கள் மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய்க் கொலுசு, ஆலங்காய் கொலுசு

8. கால் விரல் அணிகள் கான் மோதிரம், காலாழி, தாழ் செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி

9. ஆண்களின் அணிகலன்கள் வீரக் கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண், பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம், கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்துவடம்,. கடுக்கண், குண்டலம். ஆகியனவாகும்.

விளம்பரங்கள்