Welcome to My Website







உணவே மருந்து' என்கிற வாக்கு பொய்யாகி விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த முதியவர்கள் வரை பெரும் பாலானவர்கள் கலர்கலரான மருந்துமாத்திரைகளுடனேயே வாழ்க்கை தள்ளுகின்றனர். மருந்து உட்கொள்வதில் அலட்சியம் காட்டுவதால் வயிறு சம் பந்தப்பட்ட நோய்கள், அலர்ஜி உள்ளிட்ட உபாதைகள் வரும் வாய்ப்பு அதிகம். இதனால் மருந்து சாப்பிடும் போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பின்வருமாறு பார்க் கலாம்.

* டாக்டர் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து வாங்கி உட்கொள்ளும் பழக் கத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

* மருந்துக்கடைகளில் மருந்து வாங்கும் போது டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துகள் தானா? என்பதைக் கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* எந்தெந்த வேளைகளில் எந்தெந்த மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வது என் பதை மருந்துக் கடைக்காரரிடம் ஒன்றிற்கு இரண்டுமுறை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

*டாக்டர் எழுதிய மருந்துகளில் ஒன்றிரண்டு கடைகளில் இல்லாமல் போகலாம். உடனே மருந்துக் கடைக்காரரே மாற்று மருந்தைக் கொடுத்தால் தவிர்த்து விடுவது அவசியம். அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது உங்களை பரிசோதித்த டாக்டரிடம் போய், மருந்து கிடைக்காத விஷயத்தைக் கூறி மாற்று மருந்தை எழுதி வாங்குங்கள். * மருந்து சாப்பிடுவதால் ஒவ்வாமை (அலர்ஜி) ஏதாவது ஏற்படும் என்றால் அதனை மருத்துவரிடம் கண்டிப்பாக கூற வேண்டும். எந்தவகை மருந்துகளை சாப்பிடும் போது உடலுக்கு ஒத்துக் கொள்வ தில்லை என்கிற விவரத்தையும் தெரிவிப்பது நல்லது.

* 5 நாட்கள் வரை மருந்துகளை உட் கொள்ள டாக்டர் சொல்லி இருக்கலாம். இரண்டாவது நாளிலேயே நல்ல நிவாரணம் கிடைத்தது என்பதற்காக மருந்துகளை தூரப்போட்டு விடாதீர்கள். மருந்தை நிறுத்திய சில நாட்களில் மீண்டும் நோய் தாக்குவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே டாக் டரின் அறிவுரைப்படி எத்தனை நாட் களுக்கு மருந்து சாப்பிட வேண்டுமோ அதுவரை தொடருங்கள்.

* உங்களுக்கு வழங்கப்படும் ஆன்டிபயோடிக் எனப்படும் எதிர் உயிரி மருந்துகளைப் பற்றி நன்றாக அறிந்து கொண்டு அதனை முறையாக சாப்பிடுவது அவசியம். * டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துகளை சாப்பிட்டவுடன் தலைசுற்றல், அரிப்பு, மயக்கம், வாந்தி போன்ற பிரச்சினைகள் வந்தால் மருந்து உங்களுக்கு ஒத்துவரவில்லை என்று அர்த்தம். உடனே மருத்துவரை அணுகி மருந்து சாப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளை கூறவும்.

* ஆறு மாதத்திற்கு பின்பு உங்களுக்கு மீண்டும் காய்ச்சல் வந்திருக்கும். காய்ச்சல் என்கிற காரணத்துக்காக 6 மாதத்திற்கு முன்பு டாக்டர் கொடுத்த மருந்துகள் அல்லது அந்த மருந்து சீட்டைக் காண்பித்து மீண்டும் அதே மருந்தை வாங்கி பயன்படுத்தக் கூடாது.

* காலை, மதியம், இரவு என்ற 3 வேளைகளிலும் சாப்பாட்டிற்கு பின்பு மாத்திரை சாப்பிட டாக்டர் கூறி உள்ளார் என்று வைத்துக் கொள்வோம். காலை உணவை 11 மணிக்கு சாப்பிட்டு மாத்திரை எடுத்துக் கொள்கிறீர்கள். மதிய உணவை 1 மணிக்கு சாப்பிட்டு மாத் திரை எடுத்துக் கொண்டால் தேவையற்ற தொல்லைகளை விலை கொடுத்து வாங்குவது போலாகிவிடும். போதுமான இடைவெளியில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

* சிரப் குடிக்கும் போது டேபிள் ஸ்பூன், டீ ஸ்பூனுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை அறிந்து கொள்ளுங்கள். டீ ஸ்பூன் 5 மில்லி அளவும், டேபிள் ஸ்பூன் 15 மில்லி அளவும் கொண்டது. எனவே டாக்டர் எந்த ஸ்பூன் அளவுக்கு அருந்தச் சொல்கிறார் என்பதை நன்றாக கேட்டு அறிந்து அதன்படி சிரப்' அருந்துங்கள். * மருத்துவமனையில் ஊசி போட்டதும் துள்ளிக் குதித்து ஓடி வந்துவிடக் கூடாது. சற்று நேரம் ஒரு ஓரமாக அமர்ந்து இருங்கள். மருந்து உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ள வில்லை எனில் அலர்ஜி வந்துவிடும்.

* போதுமான வென்னீர் அல்லது தண்ணீரைக் கொண்டு மாத்திரை உட்கொள்ள வேண்டும்.

** ஊசி போட்டவுடன் வெயிலில் அதிக தூரம் நடந்து செல்லுதல், பயணம் செய்தல் கூடாது

0 comments

Post a Comment

விளம்பரங்கள்