ஒஸ்ரியோபொரோஸிஸ் ஏற்படுத்தும் பின் விளைவுகள்:
ஒஸ்ரியோபொரோஸிஸ் உள்ளவர்கள் ஒரு சிறு காயத்தின் பின்னர் ஒரு எலும்பை உடைத்துக் கொள்வது சாதாரணமானது. இடுப்பு, மணிக்கட்டு, முள்ளந்தண்டு ஆகியவற்றில் முறிவுகள் ஏற்படலாம். இடுப்பு, மணிக்கட்டில் முறிவுகள் விழுவதனால் ஏற்படுகின்றன.
முள்ளந்தண்டின் எலும்புகள் பலவீனமுற்ற நிலையில் ஒன்றுடன் ஒன்று நெருக்கப்படுவதால் முறிவடையக் கூடும். துண்டங்கள் நெருக்குப்படும் போது முள்ளந்தண்டு வளைவடையும். இதனால் நோ ஏற்படுவதுடன் உயரத்தில் குறைவும் ஏற்படும். சிலருக்கு சுவாசிப்பதில் சிக்கலும் ஏற்படும். ஒஸ்ரியோ பொரோசசிஸ்சிற்கான சிகிச்சை சாதாரணமாக எலும்புகளின் உடைவுக்கு காரணமாயிருக்கக் கூடிய கலங்களின் செயற்பாடுகளை தடை செய்வதற்கான மருந்து வகைகள் இதற்கெனக் கொடுக்கப்படுகின்றன. இதனால் எலும்புப் பொருண்மை அதிகரிக்கும். எலும்புகள் வலுப்பெறும். முறிவடையும் ஆபத்துக்கள் குறைவடையும். முதல் வருடச் சிகிச்சையினுள் புதிதான முள்ளந்தண்டு முறிவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் 60 70% தினால் குறைவடைகின்றது. போதியளவு கல்சியமும் விற்றமின் "டீ' யும் எடுத்தல் சிபாரிசு செய்யப்படுகிறது.
எனக்கு ஒஸரியோபொரோஸிஸ் இருப்பதாக காணப்படுமிடத்து நான் என்ன செய்தல் வேண்டும்?
பணிக்கப்பட்ட விதத்தில் சிகிச்சையை மேற்கொள்ளவும் மிகச் சிறந்த பெறுபேறுகளுக்காக சிகிச்சையை பல வருடங்களுக்குத் தொடர வேண்டியிருக்கும். உணவு:
உணவும் அதில் இருக்கக் கூடிய கல்சியத்தின் அளவும் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். தினமும் 1500 மி.கி. கல்சியம் அவசியமாகும். பாலுணவு வகையில் கல்சியம் நிறைவாக உள்ளது. ஏதேனுமொரு கல்சிய உணவை எடுக்கவும் வாத நோயியல் மருத்துவரை நாடவும்
வெய்யிலை பயன்படுத்தவும்
விற்றமின் "டீ' கல்சியம் குடலினால் உள்ளுறுஞ்சப்படும் வேகத்தை அதிகரிக்கும் என்பதால் முக்கியமானது தினமும் வெய்யிலில் உலõவுங்கள். அவ்வாறில்லையேல் உங்கள் உணவில் விற்றமின் "டீ' யை சேர்க்கும்படி வாத நோய் மருத்துவர் அறிவுறுத்துவார். (மீன் எண்ணெய் குளிசை)தினமும் உடற்பயிற்சி கவனத்துடன்:
முள்ளந்தண்டில் திடீர் அழுத்தங்கள் ஏற்பட்டு முறிவுகள் ஏற்பட அனுமதித்தலானது. பாரம் தூக்குதல், முன்புறமாக குனிதல் என்பனவற்றை தவிர்க்கவும்.
*படுக்கையின் போது முழங்காலில் நின்று, குந்தியிருந்து படுத்தல் வேண்டும்.
*தரையிலிருந்து எதனையாவது எடுக்கும்போது முதுகுப் பக்கம் நேராக இருக்கும்படி முழங் கால்களை மடித்து எடுக்கவும். *பாரமான பொருட்கள், சூட்கேஸ் போன்றவற்றை காவுதல் ஆகாது.*திடீரென அசைவுகளை ஏற்படுத்துதல் ஆகாது. வீழ்தலுக்கான ஏது நிலையை குறைத்தல் நாம் முதியவர்களாக ஆகும் போது நிலத்தில் வீழ்தலுக்கான ஏது நிலையும் அதிகமாகும். வீழ்தலை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை இனங்கண்டு அவற்றை சரியான இடத்தில் வைத்தல் வேண்டும்.*கண்பார்வையை சரி செய்தல் வேண்டும். *நடத்தல், சமனிலை பேணல் ஆகியவற்றில் பிரச்சினைகளை தவிர்த்தல். (உடம்பு பிடித்தல்/ ஊன்றுதடி)*மதுபானத்தின் அளவை எல்லைப்படுத்துதல். *இருக்கை நிலைகளை திடீரென மாற்றுதலாகாது.
*நடந்து திரியும் பகுதிகளில் தடங்கல்கள் இருத்தலாகாது.*வாயிற்படி/ கதவடி நில விரிப்புகளில் கவனம் செலுத்தவும். *மின் வெளிச்சத்தை வேண்டிய இடங்களில் வேண்டிய அளவுக்கு வைத்திருக்கவும், சுவிச்சுகளுக்கு பொருத்தமான இடங்களை முடிவு செய்யவும். *தளபாடங்களின் உயரத்தை சரி செய்யவும் (கட்டில் நாற்காலி/ மலசல கூட ஆசனம் என்பன) *புகைப்பிடித்தலை நிறுத்தவும் புகைத்தல் ஒஸ்ரி÷õ பொரோசஸ் வாய்ப்புக்களை அதிகரிக்கும். பிந்திய நிலையிலும் முந்துவது நல்லதே!
சுறுசுறுப்பான வாழ்வை நடத்துதலும் கல்சியம் நிறைந்த உணவை உண்பதும் ஒஸ்ரியோபொரோஸஸ் பிணியை தடுக்க உதவும். சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்த எவ்வளவுக்கு முந்துகிறோமோ அந்தளவுக்கு முறிவுகள் ஏற்படக்கூடிய ஏது நிலையினின்றும் எம்மைக் காத்துக் கொள்கின்றோம்
வாழ்வின் அழிவுக்கு எலும்புகள் காரணமாவதை தடுப்பது எப்படி
Posted by
tamilvili
Wednesday, August 26, 2009
0 comments