Welcome to My Website







வாழ்க்கையில் திருமணம் ஒரு தடவைதான் நடக்கும். அதனால் இப்போதெல்லாம் அத்தனை திருமணங்களிலும் அலங்காரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முன்னர் மணப்பெண் அலங்காரம் என்பது முகூர்த்தம் நடக்கும் அன்று காலையில் மணப்பெண்ணுக்கு மேக்அப் போடுவதோடு சரி. இப்போது திருமணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே முகம் மட்டுமல்ல, உடல் முழுவதும் மெருகூட்டப்படுகிறது. அது மாத்திரமன்றி, உடை, நகைகள் போன்றவையும் அவரவருக்கேற்றவாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது.

திருமணம் செய்துகொள்ளப்போகும் மணப்பெண் கவனிக்க வேண்டிய சில விடயங்கள்.

3 மாதங்களுக்கு முன்பு:

3 மாதங்களுக்கு முன்பிருந்தே மணப்பெண்கள் தினமும் 45 லீற்றர் தண்ணீர் பருகவேண்டும். அசைவ உணவுகளின் அளவைக்குறைத்து, பெருமளவு காய்கறி, பழங்களை உணவில் சேர்க்கவேண்டும். மனதை அமைதிப்படுத்தும் பொழுதுபோக்கில் ஈடுபட வேண்டும். தினமும் 8 மணிநேரம் நன்றாகத் தூங்கவேண்டும். உடலை பராமரிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தவேண்டும். வாரத்தில் ஒருநாள் உடம்பு முழுவதும் பாலைத் தடவி 15 நிமிடங்கள் கழித்து மென்மையான ஸ்பொன்ஞ்ச் அல்லது கை விரலால் மிதமாக தேய்க்க வேண்டும். பின்பு கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் பால் பவுடரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் சருமத்தில் பதிந்து பளபளப்பைக் கொடுக்கும்.

அழகு நிலையத்தில் மணப்பெண்களுக்காக இப்போது 'மில்க் பாத்' உள்ளது. ஒரு தொட்டியில் பால், தண்ணீர் மற்றும் ஒவ்வொருவர் சருமத்திற்கேற்ற 'ஜெல்'லும் அதில் கலந்திருக்கும். முதலில் அழகுசாதனப் பொருட்களை உடலில் பூசி தேய்த்து, 'ஸ்கிரப்' செய்துவிட்டு, பின்பு ஆவி 'பாத்' கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் 'மில்க் பாத்' எடுக்க வேண்டும். பின் உடல் முழுவதும் 'மாஸ்க்' போடப்படும். இதனால் சருமம் ஒரே நிறத்தில் பளபளப்புடன் தோன்றும். இதனைத் திருமணம் நடக்கும்வரை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்வது நல்லது.

பால் பிடிக்காதவர்கள் வைனில் குளிக்கிறார்கள். சாதாரண சருமத்தைக் கொண்டவர்கள் 'ஸ்ட்ரோபெரி' பழத்தைப் பிசைந்து முகத்தில் தேய்த்து 'ஸ்கிரப்' செய்ய வேண்டும். பத்து நிமிடத்தில் அதை நீக்கிவிட்டு, ஆப்பிள் கூழை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிட வேண்டும்.

எண்ணெய்த்தன்மையான சருமத்தைக் கொண்டவர்கள் காலை, மதியம், இரவு மூன்று வேளையிலும் முகத்தை நன்றாகத் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். தினமும் எலுமிச்சம்பழத்தை வெட்டி முகத்தில் தேய்த்து பத்து நிமிடத்தில் கழுவிவிடவேண்டும். இது லேசான எரிச்சலைத் தரும். சந்தனப் பவுடரை பன்னீர் அல்லது சுத்தமான தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்களில் கழுவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில், முகத்தில் இருக்கும் எண்ணெய்த்தன்மை குறைந்துவிடும். பின்பு வாரத்தில் ஒருமுறை மட்டும் இவ்வாறு செய்தால் போதும். கறுப்புப் புள்ளி, திட்டு, படை, முகப்பரு, நிறமாற்றம் போன்றவை இருப்பவர்கள் அழகு நிலையங்களிலே இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

கூந்தல் பராமரிப்பைப் பொறுத்தவரை மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற ஏதாவது ஒன்றை லேசாக சூடாக்கி தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊறிய பின்பு ஷாம்பு போட்டு கழுவி, கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனரை தலைமயிரில் மாத்திரமே பூச வேண்டும். தலை ஓட்டில் படக்கூடாது.

வரட்சியான கூந்தலை கொண்டிருந்தால் தே.எண்ணை, விளக்கெண்ணை, கிளிசரின், வினிகர் போன்றவைகளை தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கண்டிஷனருடன் கலந்து தலைமயிரில் பூசலாம். பின்பு சுடு தண்ணீரில் டவலை முக்கிப் பிழிந்து, கூந்தலைச் சுற்றிக் கட்ட வேண்டும். இரண்டு, மூன்று முறை அவிழ்த்து கட்டவேண்டும். 15, 20 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்பு போட்டு கழுவவேண்டும். பின்பு கண்டிஷனர் பூச வேண்டும். வாரத்திற்கு ஒரு தடவை இவ்வாறு செய்ய வேண்டும்.

ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டில் செய்ய வேண்டியவை:

சாதாரண சருமம் நாமக்கட்டி பவுடர், முல்தானிமுட்டி இரண்டையும் முகத்தில் பூசி கழுவ வேண்டும். எண்ணெய் சருமம் என்றால் முல்தானிமுட்டி மட்டும் பூச வேண்டும்.

அழகு நிலையத்தில் இதற்கான 'ஸ்கின் லைட்னிங் பேக்கேஜ்' உள்ளது. இதனை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். ஒரு வாரத்திற்கு முன்பு:

முகூர்த்த தினத்தன்று மணப்பெண்ணுக்கு முழுமையாக எப்படி அலங்காரம் செய்யப்படுமோ அது போன்ற அலங்காரத்தை செய்து பார்த்துவிட வேண்டும். உச்சி முதல் பாதம் வரை அலங்கரித்துவிட்டு, அதில் ஏதாவது மாற்றங்கள் தேவையா? உடை, அணிகலன்களில் ஏதாவது மாற்றம் தேவையா என்பதை எல்லாம் பார்த்துவிட வேண்டும். இப்போது பெரும்பாலும் மணமகனும் மணப்பெண்ணின் முழு அலங்காரத்தைப் பார்வையிட்டு அவருடைய விருப்பத்தைத் தெரிவிப்பார். இந்த அலங்காரத்திற்கு மூன்று மணிநேரம் தேவைப்படும். மூன்று நாட்களுக்கு முன்பு:

பெடிக்யூர், மெனிக்யூர் எனப்படும் கால், கை, நக பராமரிப்பு, வெக்சிங், பேஷியல், பாடி டிரீட்மென்ட் மற்றும் மெஹந்தி போன்றவைகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். இவற்றைச் செய்த பின் மணப்பெண்கள் வெளியே செல்லக்கூடாது. இரண்டு நாட்களுக்கு முன்பு:

நிறைய தண்ணீர் பருகவேண்டும். நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். நிறைய பழச்சாறு பருகவேண்டும். திருமணத்தன்று:

முகூர்த்தத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, முழுமையான மணப்பெண் அலங்காரத்தைத் தொடங்க வேண்டும். ஏற்கனவே 'ட்ரையல்' செய்து பார்த்திருந்தால் வேகமாக, சிறப்பாக மணப்பெண் அலங்காரத்தை முடிக்க முடியும்.

0 comments

Post a Comment

விளம்பரங்கள்