Welcome to My Website






நகைகள் வாங்க போறீங்களா?

Posted by tamilvili Wednesday, August 26, 2009

*நகைகள் வாங்கச் செல்லும்முன் தங்கத்தின் வெள்ளியின் அன்றைய தின மதிப்பீடு என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். *நகைகள் வாங்கச் செல்லுமுன் எந்த நகை வாங்கச் செல்கிறோம் என்பதை உறுதி செய்த பின்னரே கடைக்குச் செல்ல வேண்டும். *தரமான கடைகளில் நகைகளை வாங்குங்கள் காரணம் வீதிக்கு வீதி நகைக்கடைகள் உள்ளன. *நீங்கள் எவ்வளவு பணத்திற்கு நகைவாங்கப்போகிறீர்கள் என்பதனை கடைக்குச் செல்லுமுன் தீர்மாணிக்க வேண்டும். *செய்கூலி எவ் வளவு சதவீதம் சேதாரம் எவ்வளவு சதவீதம் போடப்படுகிறது என்பதனை கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும். *நீங்கள் குறித்துக்காட்டும் வடிவத்தில் நகை செய்வதற்கான பணத்தினை கேட்டுத் தீர்மானித்து முற்பணம் கொடுத்து பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

*நகைகள் செய்வதற்காக ஓடர் கொடுக்கும் போது எவ்வளவு தங்கத்தில் செய்யப்படுவதாக பதியப்பட்டுள்ளதோ அதேபோல் நகைவேலை முடிவடைந்த பின்னர் கடையிலிருந்து எடுத்துவரும்போது நகையின் அளவை நிறுத்துப் பார்க்கவேண்டும். *நகைகள் வாங்கும்போது கற்கள் பதித்த நகைகளை வாங்குவதை விடுத்து பொன்னாலான ஆபரணங்களை வாங்கினால் பணத்தின் தரத்திற்கு ஏற்ப நகை காணப்படும்.

* நீங்கள் வாங்கும் நகை எந்த வகையைச்சார்ந்தது என்பதை கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.இல்லையேல் நீங்கள் வாங்கும் தங்க நகையில் குறியீடுகள் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். நகைகளை பாதுகாப்பது எப்படி? நகைகளை அணிவதற்கு முன்னதாகவே பவுண்டேஷனோ பவுடரோ போட்டுக்கொள்ளுங்கள். நகைகளை அணிந்த பின் இவற்றைப்பூசிக்கொண்டால் நகைகள் பொலிவிழந்து விடும்.

*நகைகளை கழற்றி பத்திரப்படுத்தும் போது வெல்வெட் துணியில் போட்டு வைப்பது நல்லது. வெறும் தகரப் பெட்டிகளில் போட்டுவைத்தால் கீறல்கள் விழுந்து பொலிவு கெடும்.

*ஒவ்வொரு நகையும் தனித்தனி பெட்டிகளில் போட்டுவைத்தால் எப்போதும் புத்தம் புதிதாகவே காட்சி தரும். *நிரந்தரமாக அணிந்து கொள்ளும் நகைகளை வாரந்தோறும் சுத்தம் செய்யவேண்டும். *நகைகளை கழுவி சுத்தம் செய்யும் போது இளஞ்சுடுநீரில் ஷாம்புவைக் கலந்து மென்மையான தூரிகையால் தேய்த்து கழுவினால் “பளிச் சென்றிருக்கும்

0 comments

Post a Comment

விளம்பரங்கள்