கால்களை எப்போதும் வறட்சியாகவும் வைக்கக் கூடாது.பாத இடுக்குகள் தவிர மற்ற இடங்கள் அனைத்திலும் ஈரப்பதம் தரும் மருந்துகள் அல்லது எண்ணெயை தடவுங்கள்.
இது வெடிப்புக்கள், தோல் உலர்ந்து போதல் போன்ற பாதிப்புக்களை தடுக்கும்.கால்களில் காய்ந்த பகுதிகள் ஏதேனும் தென்பட்டால் அதை பக்குவமாக அகற்றி விடுங்கள்.
கால் ஆணி, கால் கட்டி போன்றவை தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அவற்றை அகற்றி விடுங்கள்.நீங்களாகவே இவற்றை அகற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்; அது வேறு உபாதைகளுக்கு வழிவகுக்கும்.வாரத்திற்கு ஒரு முறை கால் விரல் நகங்களை நெயில்கட்டரைக் கொண்டு அகற்றுங்கள் |
0 comments