Welcome to My Website






ஸ்டைலாகவும், அழகாகவும் இருக்கத்தான் ஃபேஷன் பொருட்களைப் பயன்படுத்து கிறோம். ஆனால் சிலசமயங்களில் ஃபேஷன் பொருட்களே நம் ஆரோக்கியத்திற்குப் பிரச் சினையாகி விடுகிறது. எந்தெந்த ஃபேஷன் பொருட்கள், எந்தெந்த மாதிரியான பிரச்சி னையை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாமா.

ஸன்கிளாஸ் சூரியனின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் ஸன்கி ளாஸையே பயன்படுத்துகிறோம். பொது வாக, சற்று டார்க் கலரில் இருக்கின்ற ஸன் கிளாஸைத்தான், பயன்படுத்துகிறோம். ஆனால் உங்களுக்கொன்று தெரியுமா? டார்க் கான கலரில் இருக்கின்ற ஸன்கிளாஸ், சூரிய னிலிருந்து முழுமையாக உங்கள் கண்களைப் பாதுகாக்காது. இது போன்ற கண்ணாடிகள் அல்ட்ரா வயலட் கதிர்களை அதிக அளவு ஈர்த்துக் கொள்கிறது. பொதுவாகவே டார்க் கலர் உடைகள் அதிக அளவு ஒளியையும், வெப்பத்தையும் ஈர்த்துக் கொள்ளும் இல் லையா? அது போலவே ஸ்பெஷல் கோட்டிங் கொடுக்கப் படாத சாதாரண கண் ணாடிகள் கண்களில் எரிச்சல், கண் சிவப் பது போன்ற பிரச்சி னைகளை ஏற்படுத்தி விட்டு விடும். எச்ச ரிக்கை தேவை!

தலைமுடி பள பள கூந்தல் தான் தற்போதைய இளம் சமூகத்தினர் பிடித் தமான ஒன்று. இதையே பிடித்துக் கொண்டு எண் ணற்ற தயாரிப்புக்களை பயண்படுத்துகின்றனர். இதில் நிறையவே கெமிக் கல் கலந்திருக்கிறது. இது உங்கள் தலை முடியின் வேர்க்கால்களை பல மிழக்கச் செய்துவிடு கிறது. விளைவு தலைமுடி கொட்டி வழுக்கையாகி விடுகிற வாய்ப்பிருக்கிறது. அதனால் தரமான ஆயுர்வேத தயாரிப்புக் களைப் பயன்படுத்துங்கள்.

ஜிம்

உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஜிம்முக்குச் சென்று எக்ஸர்சைஸ் செய்வதுதான் நல்ல வழி. இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் நீங்கள் எக்ஸர்சைஸ் செய்யும்போது அணிந்து கொள்ளும் டைட்ஸ்தான் பிரச்சினையே. இதை போட்டுக் கொண்டால் உங்களுடைய அவுட் லுக். என்னவோ அழகாகத்தான் தெரி யும். ஆனால் எக்ஸர்சைஸ் செய்யும்போது இப்படி டைட்டான "அவுட்ஃபிட்'டை போட் டுக் கொண்டால் வியர்வை முழுவதுமாக வெளியேற முடியாமல் தொடை மற்றும் இடுப்பில் அப்படியே நின்றுவிடும். தொடர் ந்து இப்படி வியர்வை வெளியேற முடியாமல் போனால் அந்த இடங்களிலெல்லாம் இன்ஃபெக்ஷன் வர வாய்ப்பிருக்கிறது. ஸோ, எக்ஸர்சைஸ் செய்யும்போது தளர் வான கொட்டன் டிரஸ் தான் பெஸ்ட்! வளையங்கள்

வேலைக்குப் போகும் பெண்க ளும் சரி, மொட லிங் செய்பவர் களும் சரி காது களுக்கு அதி கம் பயன் படுத்துவது பெரிய வளையங் கள் தான். ஜீன்ஸ், சுடிதார், ஃபேஷன் புடைவைகள் என்று எல்லாவிதமான உடைக ளுக்கும் இந்த வளை யங்கள் பொருந்துவ தால் இன்றைய இளவட் டங்களின் ஒட்டு மொத்தமாக ஓட்டும் இந்தபேஷன் வளையங் களுக்குத்தான். இப்படி அடிக்கடி பெரிய பெரிய வளையங்களைப் பயன்படுத்தினால் காதுமடலின் அடிப்பகுதி விரிந்து காதுப்பகுதி களில் தீவிரமான இன்ஃபெக்ஷன்களை ஏற் படுத்தி விடும் அதனால் முடிந்த வரை இது மாதிரியான பெரிய பெரிய வளையங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால் நாலு பேர் பேசுவதைக் கேட்க வாவது நம் காது நல்ல முறையில் இருக்க வேண்டாமா?

ஸ்டொக்கிங்ஸ் எண்பதுகளில் பிரபலமான ஸொக்ஸ் போடும் கலாசாரம் தற்போது மறுபடியும் பேஷனாகிவிட்டது. குறிப்பாக முட்டி வரைக் கும் இறுக்கமாக ஸொக்ஸ் போடும் போது அந்தப் பகுதிகளின் ரத்த ஓட்டத்தை பாதித்து "நரம்புச் சிலந்தி' போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். அதனால் முடிந்த வரை முட்டி வரைக்கும் இறுக்கமான ஸொக்ஸ் போடுவதைத் தவிர்த்துவிடுங்கள். ஹைஹீல்ஸ்

சந்தேகமும் இல்லை. ஹைஹீல்ஸ் உங் களை அழகாகவும் உயரமாகவும் கம்பீரமாக வும் காட்டும் தான். ஆனால் தொடர்ந்து பயன் படுத்தினால் முதுகுவலி, ஆர்த்ரட்டீஸ் போன்ற பிரச்சினைகள் உங்களை ஒரு வழி பண்ணி விடும். அதனால் அடிக்கடி ஹைஹீல்ஸைப் பயன்படுத்தாதீர்கள்!

0 comments

Post a Comment

விளம்பரங்கள்