Welcome to My Website







உணவே மருந்து' என்கிற வாக்கு பொய்யாகி விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த முதியவர்கள் வரை பெரும் பாலானவர்கள் கலர்கலரான மருந்துமாத்திரைகளுடனேயே வாழ்க்கை தள்ளுகின்றனர். மருந்து உட்கொள்வதில் அலட்சியம் காட்டுவதால் வயிறு சம் பந்தப்பட்ட நோய்கள், அலர்ஜி உள்ளிட்ட உபாதைகள் வரும் வாய்ப்பு அதிகம். இதனால் மருந்து சாப்பிடும் போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பின்வருமாறு பார்க் கலாம்.

* டாக்டர் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து வாங்கி உட்கொள்ளும் பழக் கத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

* மருந்துக்கடைகளில் மருந்து வாங்கும் போது டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துகள் தானா? என்பதைக் கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* எந்தெந்த வேளைகளில் எந்தெந்த மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வது என் பதை மருந்துக் கடைக்காரரிடம் ஒன்றிற்கு இரண்டுமுறை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

*டாக்டர் எழுதிய மருந்துகளில் ஒன்றிரண்டு கடைகளில் இல்லாமல் போகலாம். உடனே மருந்துக் கடைக்காரரே மாற்று மருந்தைக் கொடுத்தால் தவிர்த்து விடுவது அவசியம். அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது உங்களை பரிசோதித்த டாக்டரிடம் போய், மருந்து கிடைக்காத விஷயத்தைக் கூறி மாற்று மருந்தை எழுதி வாங்குங்கள். * மருந்து சாப்பிடுவதால் ஒவ்வாமை (அலர்ஜி) ஏதாவது ஏற்படும் என்றால் அதனை மருத்துவரிடம் கண்டிப்பாக கூற வேண்டும். எந்தவகை மருந்துகளை சாப்பிடும் போது உடலுக்கு ஒத்துக் கொள்வ தில்லை என்கிற விவரத்தையும் தெரிவிப்பது நல்லது.

* 5 நாட்கள் வரை மருந்துகளை உட் கொள்ள டாக்டர் சொல்லி இருக்கலாம். இரண்டாவது நாளிலேயே நல்ல நிவாரணம் கிடைத்தது என்பதற்காக மருந்துகளை தூரப்போட்டு விடாதீர்கள். மருந்தை நிறுத்திய சில நாட்களில் மீண்டும் நோய் தாக்குவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே டாக் டரின் அறிவுரைப்படி எத்தனை நாட் களுக்கு மருந்து சாப்பிட வேண்டுமோ அதுவரை தொடருங்கள்.

* உங்களுக்கு வழங்கப்படும் ஆன்டிபயோடிக் எனப்படும் எதிர் உயிரி மருந்துகளைப் பற்றி நன்றாக அறிந்து கொண்டு அதனை முறையாக சாப்பிடுவது அவசியம். * டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துகளை சாப்பிட்டவுடன் தலைசுற்றல், அரிப்பு, மயக்கம், வாந்தி போன்ற பிரச்சினைகள் வந்தால் மருந்து உங்களுக்கு ஒத்துவரவில்லை என்று அர்த்தம். உடனே மருத்துவரை அணுகி மருந்து சாப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளை கூறவும்.

* ஆறு மாதத்திற்கு பின்பு உங்களுக்கு மீண்டும் காய்ச்சல் வந்திருக்கும். காய்ச்சல் என்கிற காரணத்துக்காக 6 மாதத்திற்கு முன்பு டாக்டர் கொடுத்த மருந்துகள் அல்லது அந்த மருந்து சீட்டைக் காண்பித்து மீண்டும் அதே மருந்தை வாங்கி பயன்படுத்தக் கூடாது.

* காலை, மதியம், இரவு என்ற 3 வேளைகளிலும் சாப்பாட்டிற்கு பின்பு மாத்திரை சாப்பிட டாக்டர் கூறி உள்ளார் என்று வைத்துக் கொள்வோம். காலை உணவை 11 மணிக்கு சாப்பிட்டு மாத்திரை எடுத்துக் கொள்கிறீர்கள். மதிய உணவை 1 மணிக்கு சாப்பிட்டு மாத் திரை எடுத்துக் கொண்டால் தேவையற்ற தொல்லைகளை விலை கொடுத்து வாங்குவது போலாகிவிடும். போதுமான இடைவெளியில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

* சிரப் குடிக்கும் போது டேபிள் ஸ்பூன், டீ ஸ்பூனுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை அறிந்து கொள்ளுங்கள். டீ ஸ்பூன் 5 மில்லி அளவும், டேபிள் ஸ்பூன் 15 மில்லி அளவும் கொண்டது. எனவே டாக்டர் எந்த ஸ்பூன் அளவுக்கு அருந்தச் சொல்கிறார் என்பதை நன்றாக கேட்டு அறிந்து அதன்படி சிரப்' அருந்துங்கள். * மருத்துவமனையில் ஊசி போட்டதும் துள்ளிக் குதித்து ஓடி வந்துவிடக் கூடாது. சற்று நேரம் ஒரு ஓரமாக அமர்ந்து இருங்கள். மருந்து உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ள வில்லை எனில் அலர்ஜி வந்துவிடும்.

* போதுமான வென்னீர் அல்லது தண்ணீரைக் கொண்டு மாத்திரை உட்கொள்ள வேண்டும்.

** ஊசி போட்டவுடன் வெயிலில் அதிக தூரம் நடந்து செல்லுதல், பயணம் செய்தல் கூடாது

குதிவாதம் என்றால் என்ன?
பிளான்ரர் பசிரிஸ் என்பது உள்ளங் காலின் தசை நார்களில் ஏற்படும் அழற்சியாகும். உள்ளங்காலின் தசைநார் இழையங்கள் ஒன்று சேர்ந்த பலமான தசைப்பட்டை குதியிலிருந்து பாதத்தின் நடு எலும்பு வரை நீண்டு செல்லும். இதனை உள்ளங்கால் தசைப்பட்டை என்பர். அது பாதத்தின் வில் போன்ற வளைவினை தாங்கி உறுதியளிக்கிறது. தசைநார் பட்டையில் ஏற்படும் சிறிய காயங்கள் அழற்சியை மற்றும் ஏனைய நோய்க்குறிகளை ஏற்படுத்தவல்லவை. இக்காயங்கள் வழமையில் குதிக்கால் எலும்புக்கு அருகிலேயே ஏற்படுகின்றன.

குதிக்கால் அழற்சியின் அறிகுறிகள் எவை?

பிரதான நோய்க்குறி வலியாகும். இது குதிக்கால் அடியில் எவ்விடத்திலும் வரலாம். பொதுவாக வலிக்குரிய பிரதான காரணமாக ஒரு குறித்த இடம் இனங்காணப்படலாம். இது அநேகமாக குதியிலிருந்து 4 சென்றிமீற்றர் முன்னோக்கி தொட முடியாத அளவுக்கு வலி இருக்கலாம். வழமையில் காலை நிலத்தில் வைக்கும் போது நோவு சிறிது குறையும். இருப்பினும் காலை எழுந்தவுடன் முதன் முதலில் கால் நிலத்தில் ஊன்றி நடக்கும் போது வலி மிக அதிகமாக இருக்கும். தொடர்ந்து நடக்கும் போது வலி அவ்வளவு இருக்காது. ஆனால் நீண்டதூர நடைப்பயணம் வலியை அதிகரித்து நிலைமையை மேலும் மோசமாக்கும். திடீரென காலை கடின அசைவுகளுக்கு உட்படுத்தும் போது உதாரணமாக படிக்கட்டுகளில் நடக்கும் போது அல்லது பெருவிரல் நுனியால் நடக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் வலி அதிகரிக்கும்.

குதிக்கால் அழற்சி எவர் எவர்க்கு ஏற்படலாம்?

இது மிகவும் பொதுவானது. பிரதானமாக 40வயதிற்கு மேற்பட்டவர்களை அதிலும் பெண்களை அதிகம் பீடிக்கிறது. விளையாட்டு வீரர்களிடையேயும் இது பொதுவாக காணப்படுகிறது. அத்துடன் பின்வரும் நிலைமைகள் இந்நோயை ஏற்படுத்தவல்லவை.

1) வழமையை விட அதிகமான நடத்தல், ஓடுதல், நீண்ட நேரம் நிற்றல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல். 2) மிருதுத்தன்மை அதிகமற்ற காலணிகளை அணிதல்.

3) திடீர் நிறை அதிகரிப்பு, அளவுக்கதிகமான நிறை என்பன குதிப்பகுதிக்கு மேலதிக சிரமத்தை தோற்றுவிக்கும். 4) உள்ளங்காலினை மிதமிஞ்சி பயன்படுத்தல் அல்லது அளவுக்கதிகமாக நீட்டல் உதாரணமாக விளையாட்டு வீரர்கள் அதிக தூரம் ஓடுதல் அல்லது அளவுக்கு மீறிய ஓட்டம். 5) குதிக்கால் தசைநார் இறுக்கமடைதல்



(குதிக்காலின் மேலாக பின்காலில் தசைப் பகுதியின் அடிப்பாகத்தில்) வயது முதிர்ந்தவர்கள் விடயத்தில் உடனடி காரணம் ஒன்றிருக்கும். குதிக்கால் எலும்பில் வளர்ச்சி ஏற்பட்டதாக (இச்டூஞுச்ணஞுதட்) நம்புவர். பலர் விடயத்தில் ஒரு குதிமுள் இருப்பதுண்டு. ஆனால் நோவுக்கு அது வழமையில் காரணமல்ல.

குதிக்கால் அழற்சிக்கான சிகிச்சைகள் எவை?

வழமையில் வீக்கம், வலி காலப் போக்கில் குறைவடைந்து விடும்.

உள்ளங்கால் தசை இழையங்கள் எலும்பை சூழவுள்ள இழையங்களைப் போல் மெதுவாகவே குணமடையும். இதற்கு பல மாதங்கள் அல்லது அதற்கு மேலும் செல்லலாம். இருப்பினும் பின்வரும் முறைகளில் விரைவில் குணமடைய வாய்ப்புண்டு. இம்முறைகளில் மிக துரிதமாக ஒரு சில வாரங்களிலே குணமடையலாம். 1) பாதத்தினை கூடியவரை ஓய்வில் வைத்திருக்கவும், அளவுக்கு மீறிய நடத்தல், நிற்றல், ஓடுதல் செயற்பாடுகளை, பாதத்தினை நீட்டுதல் போன்றவற்றை தவிர்க்கவும். மெதுவான நடை மற்றும் பயிற்சிகள் நன்மையளிக்கும். அவை கீழே தரப்பட்டுள்ளன.

2) பாதணிகள் வெறும் காலுடனோ அல்லது கரடுமுரடான தரையிலோ நடக்க வேண்டாம். மிருதுத் தன்மையான குதிப்பகுதியுடைய சப்பாத்துகளை சிறந்த வில் போன்ற வளைவுடைய பாதணிகளை தெரிவு செய்யவும். திறந்த பாதணிகளை விட லேஸினால் தைக்கப்பட்ட பாதணிகள் விளையாட்டுக்கு உகந்தவை. பழைய அல்லது கிழிந்த சப்பாத்துகளை தவிர்க்கவும். அவை மிருதுத்தன்மையை அளிக்க மாட்டாது.

3) குதி உயர்ந்த பாதணிகள் குதிக்காலிற்கு பஞ்சு போன்று மிருதுத் தன்மையான பாதணிகளை எங்கும் வாங்கலாம் அல்லது இது போன்றவற்றை சப்பாத்துக்களில் இடுவதும் நன்மையளிக்கும். மென்மையான துணி வகைகளை பயன்படுத்தவும் இதன் நோக்கம் குதிப் பகுதியை ஒரு செ.மீற்றரினால் உயர்த்துவதாகும். குதி மிகவும் மென்மையானதாக இருக்குமானால் அப்பகுதி பதியக் கூடிய நைவுகாப்பு உறையில் ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி விடலாம். இதனால் மிருதுவான குதியின் பகுதி சப்பாத்தின் உட்புறத்தில் பதியமாட்டாது.

4) பரசிற்றமோல் போன்ற நோவாற்றிகள் நோவை குறைப்பன. சிலவேளைகளில் வீக்கத்தடுப்பு மருந்துகள் (ஐஞதணீணூணிஞூஞுண போன்ற) பயன்தருவன இவையும் நோவாற்றிகள் தாம். ஆயினும் வீக்கத்தை தடுப்பதுடன் சாதாரண நோவாற்றிகளிலும் சிறந்தவை. சிலர் வீக்கத்தடுப்பு மருந்து கலந்துள்ளவையான கிறீம் வகைகளை பூசி நோவை ஆற்றுவதும் உண்டு.

5) பயிற்சிகள் : மெதுவாகவும் ஒழுங்கு தவறாமலும் குதிக்கால் தசை நார்ப் பகுதியை நிமிர்த்துதல் வேண்டும். இதன்போது உள்ளங்கால் தசைநார் ஆழ் தசைப்பட்டை நோவை தளர்த்தும். காரணம் உள்ளங்கால் பஸ்சிரிஸ் உள்ள சிலருக்கு குதிக்கால் தசைநார் இறுக்கமடைந்திருக்கிறது. இதனால் குதிக்காலின் பின்பகுதி இழுப்பது போலிருக்கும். அத்துடன் உள்ளங்கால் தசை நார் சூழ் தசைப்பட்டையை இறுக்கமடையவும் செய்து விடும். அத்துடன் நீங்கள் இரவு முழுவதும் உறங்கும் வேளைகளில் உள்ளங்கால் தசை நார்ப்பட்டை தானாக இறுக்கமடைந்து விடுகிறது. (இதனாலேயே காலையில் நோவு அதிகமாகிறது) பின்வரும் பயிற்சிகள் நிவாரணம் தருவன.

1. ஒரு சுவரிலிருந்து 2 3 அடி விலகி நிற்கவும், பாதங்கள் குதிக்கால் நிலத்தில் ஊன்றியபடி முழங்கால்களை நிமிர்த்தி வைத்துக் கொண்டு சுவருடன் சாயவும். பின் காலின் தசைப் பகுதியும், குதிக்கால் தசை நாரும் இறுக்கமாக இருக்கும். சில வினாடிகளுக்கு இவ்வாறு நிற்கவும். 10 தடவைகள் இவ்வாறு செய்யவும். நாளொன்றுக்கு 5, 6 தடவைகள் இவ்வாறு செய்யலாம்.

2. முழங்கால் 90 பாகையில் மடிந்திருக்கும், பாதங்களும், குதிக்கால்களும் நிலத்தில் நன்றாக பதியும்படியும் ஒரு இருக்கையில் அமரவும். இப்பொழுது குதிக்கால்கள் அப்படியே இருக்க பாதங்களை மேல்நோக்கி உயர்த்தவும். இப்பொழுதும் குதிக்கால் தசை நார்களும் பின் கால் தசைப் பகுதியும் இறுக்கமாக இருப்பதை உணர்வீர்கள். இதனால் சற்று வேறுபட்ட தசை நார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. மீண்டும் பழைய நிலைக்கு வந்து சில வினாடிகள் அமர்ந்திருங்கள். இவ்வாறு 10 தடவைகளும் நாளொன்றுக்கு 5, 6 தடவைகளும் செய்தல் வேண்டும்.

இப்பயிற்சியின் நோக்கம் தசை நார்களையும், தசை நார் சூழ் தசைப்பட்டையையும் குதிக்காலிலிருந்து மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் மெதுவாக தளரச் செய்வதாகும். ஒரு ஆய்வின்படி நீட்டி நிமிர்த்தும் பயிற்சிகள் பெரும் பயனை அளித்துள்ளன.

3. ஊக்கமருந்துகள் மேற்படி பயிற்சிகளுக்கு குணப்படாத நோவுகளுக்கு ஸ்ரீரொய்ட் ஊசி மருந்துகளை கொடுக்கலாம். இதனால் பல வாரங்களுக்கு நோவிலிருந்து நிவாரணம் கிடைக்கும். ஒருவேளை பிரச்சினை தீர்ந்தும் விடலாம். எல்லா சந்தர்ப்பங்களிலும் இது வெற்றியளிப்பதில்லை. ஸ்ரீரொய்ட்ஸ் வீக்கத்தை தடுத்து நிறுத்தும். சில வேளைகளில் முதலாவது ஊசிக்கு குணமேற்படாத நிலையில் மேலும் சில ஊசிகள் ஏற்றப்படலாம். பிற சிகிச்சைகள்: சிலர் இரவில் பன்டேஜ் போட்டுக் கொண்டு நன்மையடைகிறார்கள். இதனால் உள்ளங்கால் தசைப்பட்டை இறுக்கமடைவது தடைப்படலாம். (பென்டேஜ் கட்டுவதால் பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன்கள் கிட்டுகின்றன) சிக்கலான நிலைமைகளில் காலின் கீழ்ப்பகுதிக்கு ஒரு பிளாஸ்ரர் போடப்படுகிறது. இது ஓய்வு, பாதுகாப்பு, பஞ்சணைப்பது போன்ற நிலை, சிறிதளவு நீட்டுவது, நிமிர்த்துவது போன்ற நிலையை உள்ளங்கால் தசைப்பட்டைக்கு குதிக்கால் தசை நார்களுக்கு ஏற்படுத்துகிறது. விளையாட்டு வீரர்கள் பயிற்சியின் முன்ரும் பின்னரும் ஐஸ் மசாஜ் ஏற்பாடு செய்கின்றனர்.

அறுவைச் சிகிச்சை: மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம். மேலே கூறப்பட்ட சிகிச்சை முறைகளால் 12 மாதங்களுக்கு மேலாக குணப்படாத நிலையிலேயே அறுவைச் சிகிச்சை சிபார்சு செய்யப்படுகிறது. அறுவைச் சிகிச்சை எப்போதும் வெற்றியளிப்பதில்லை. சிலருக்கு இது சிக்கலை ஏற்படுத்தி விடும் என்பதால் இதனை இறுதித் தீர்வாகவே கருதலாம்.

ஒஸ்ரியோபொரோஸிஸ் ஏற்படுத்தும் பின் விளைவுகள்:
ஒஸ்ரியோபொரோஸிஸ் உள்ளவர்கள் ஒரு சிறு காயத்தின் பின்னர் ஒரு எலும்பை உடைத்துக் கொள்வது சாதாரணமானது. இடுப்பு, மணிக்கட்டு, முள்ளந்தண்டு ஆகியவற்றில் முறிவுகள் ஏற்படலாம். இடுப்பு, மணிக்கட்டில் முறிவுகள் விழுவதனால் ஏற்படுகின்றன.

முள்ளந்தண்டின் எலும்புகள் பலவீனமுற்ற நிலையில் ஒன்றுடன் ஒன்று நெருக்கப்படுவதால் முறிவடையக் கூடும். துண்டங்கள் நெருக்குப்படும் போது முள்ளந்தண்டு வளைவடையும். இதனால் நோ ஏற்படுவதுடன் உயரத்தில் குறைவும் ஏற்படும். சிலருக்கு சுவாசிப்பதில் சிக்கலும் ஏற்படும். ஒஸ்ரியோ பொரோசசிஸ்சிற்கான சிகிச்சை சாதாரணமாக எலும்புகளின் உடைவுக்கு காரணமாயிருக்கக் கூடிய கலங்களின் செயற்பாடுகளை தடை செய்வதற்கான மருந்து வகைகள் இதற்கெனக் கொடுக்கப்படுகின்றன. இதனால் எலும்புப் பொருண்மை அதிகரிக்கும். எலும்புகள் வலுப்பெறும். முறிவடையும் ஆபத்துக்கள் குறைவடையும். முதல் வருடச் சிகிச்சையினுள் புதிதான முள்ளந்தண்டு முறிவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் 60 70% தினால் குறைவடைகின்றது. போதியளவு கல்சியமும் விற்றமின் "டீ' யும் எடுத்தல் சிபாரிசு செய்யப்படுகிறது.

எனக்கு ஒஸரியோபொரோஸிஸ் இருப்பதாக காணப்படுமிடத்து நான் என்ன செய்தல் வேண்டும்?

பணிக்கப்பட்ட விதத்தில் சிகிச்சையை மேற்கொள்ளவும் மிகச் சிறந்த பெறுபேறுகளுக்காக சிகிச்சையை பல வருடங்களுக்குத் தொடர வேண்டியிருக்கும். உணவு:

உணவும் அதில் இருக்கக் கூடிய கல்சியத்தின் அளவும் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். தினமும் 1500 மி.கி. கல்சியம் அவசியமாகும். பாலுணவு வகையில் கல்சியம் நிறைவாக உள்ளது. ஏதேனுமொரு கல்சிய உணவை எடுக்கவும் வாத நோயியல் மருத்துவரை நாடவும்

வெய்யிலை பயன்படுத்தவும்

விற்றமின் "டீ' கல்சியம் குடலினால் உள்ளுறுஞ்சப்படும் வேகத்தை அதிகரிக்கும் என்பதால் முக்கியமானது தினமும் வெய்யிலில் உலõவுங்கள். அவ்வாறில்லையேல் உங்கள் உணவில் விற்றமின் "டீ' யை சேர்க்கும்படி வாத நோய் மருத்துவர் அறிவுறுத்துவார். (மீன் எண்ணெய் குளிசை)தினமும் உடற்பயிற்சி கவனத்துடன்:

முள்ளந்தண்டில் திடீர் அழுத்தங்கள் ஏற்பட்டு முறிவுகள் ஏற்பட அனுமதித்தலானது. பாரம் தூக்குதல், முன்புறமாக குனிதல் என்பனவற்றை தவிர்க்கவும்.

*படுக்கையின் போது முழங்காலில் நின்று, குந்தியிருந்து படுத்தல் வேண்டும்.

*தரையிலிருந்து எதனையாவது எடுக்கும்போது முதுகுப் பக்கம் நேராக இருக்கும்படி முழங் கால்களை மடித்து எடுக்கவும். *பாரமான பொருட்கள், சூட்கேஸ் போன்றவற்றை காவுதல் ஆகாது.*திடீரென அசைவுகளை ஏற்படுத்துதல் ஆகாது. வீழ்தலுக்கான ஏது நிலையை குறைத்தல் நாம் முதியவர்களாக ஆகும் போது நிலத்தில் வீழ்தலுக்கான ஏது நிலையும் அதிகமாகும். வீழ்தலை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை இனங்கண்டு அவற்றை சரியான இடத்தில் வைத்தல் வேண்டும்.*கண்பார்வையை சரி செய்தல் வேண்டும். *நடத்தல், சமனிலை பேணல் ஆகியவற்றில் பிரச்சினைகளை தவிர்த்தல். (உடம்பு பிடித்தல்/ ஊன்றுதடி)*மதுபானத்தின் அளவை எல்லைப்படுத்துதல். *இருக்கை நிலைகளை திடீரென மாற்றுதலாகாது.

*நடந்து திரியும் பகுதிகளில் தடங்கல்கள் இருத்தலாகாது.*வாயிற்படி/ கதவடி நில விரிப்புகளில் கவனம் செலுத்தவும். *மின் வெளிச்சத்தை வேண்டிய இடங்களில் வேண்டிய அளவுக்கு வைத்திருக்கவும், சுவிச்சுகளுக்கு பொருத்தமான இடங்களை முடிவு செய்யவும். *தளபாடங்களின் உயரத்தை சரி செய்யவும் (கட்டில் நாற்காலி/ மலசல கூட ஆசனம் என்பன) *புகைப்பிடித்தலை நிறுத்தவும் புகைத்தல் ஒஸ்ரி÷õ பொரோசஸ் வாய்ப்புக்களை அதிகரிக்கும். பிந்திய நிலையிலும் முந்துவது நல்லதே!

சுறுசுறுப்பான வாழ்வை நடத்துதலும் கல்சியம் நிறைந்த உணவை உண்பதும் ஒஸ்ரியோபொரோஸஸ் பிணியை தடுக்க உதவும். சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்த எவ்வளவுக்கு முந்துகிறோமோ அந்தளவுக்கு முறிவுகள் ஏற்படக்கூடிய ஏது நிலையினின்றும் எம்மைக் காத்துக் கொள்கின்றோம்

திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல் நாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த தால் இதற்கு கிசுமுசுப் பழம் எனப் பெயரிட்டனர்.!

பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயா சம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதில் விற்றமின் பிபிபீ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.!

குழந்தைகள் வளர்ச்சிக்கு வளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கல்சியம்தான். கல்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கிய மாகவும், பலமாகவும் இருப்பார்கள்.!

இரத்த விருத்திக்கு எலும்பு மச்சைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மச்சைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.!

உடல் வலி குணமாக பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.!

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சினை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படு கிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கஷாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும். மலச்சிக்கல் தீரமலச்சிக்கலே நோய்கள் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு காலம் நோயின்றி வாழலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் ஜீரண உறுப்புகள் வலு விழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சினை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகின்றன.!

இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும்.குடற்புண் ஆறஅஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவறை புண்ணாக்கி விடுகின்றன.!

இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடற் புண்கள் குணமாகும்.இதயத் துடிப்பு சீராகசிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதற்றத்துடனே காணப்படுவார் கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும். சுகமான நித்திரைக்கு தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும். தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்

மல்லாகம் பழம்பதி பிள்ளையார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா உற்சவம் கடந்த புதன் கிழமை இரவு 7.30 மணிக்கு இடம் பெற்றது பிள்ளையார் இர வீதி உலா தேரில் வருவதைப் படங்களில் காணலாம்


தேவையான பொருட்கள்

உலர்ந்ததிராட்சை-250 கிராம்

மைதா-500 கிராம்

சீனி- 500 கிராம்

மாஜரீன் -500 கிராம்

முட்டை-10

பேக்கிங் பவுடர்-1 பக்கெட்

துருவிய சொக்லேட்-250 கிராம்

வனிலா எசன்ஸ்-2 தே.க

செய்முறை

மைதாவையும் பேக்கிங்பவுடரையும் சேர்த்து 4-5 முறை சலித்து வைக்கவும்.

திராட்சையை மைதாக் கலவையுடன் கலந்து வைக்கவும்.

முட்டையை உடைத்து மஞ்சள்கரு ஒரு பாத்திரத்திலும் வெள்ளைக்கரு ஒரு பாத்திரத்திலும் எடுத்து வைக்கவும். மாஜரீனையும் சீனியையும் சேர்த்து கிறீமாகும் வரை நன்றாக அடிக்கவும்.

அக் கலவையுடன் மஞ்சள்கருவைச் சேர்த்து அடிக்கவும்.

வெள்ளைக்கருவை நுரை பொங்க அடிக்கவும்.

மாஜரீன் கலவைக்குள் வெள்ளைக்கருவை சேர்த்து அடிக்கவும்.

பின்பு வனிலா எசன்ஸ், மைதாமாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மரத்தடியால் கலக்கவும்.

ஓவனை முற்கூட்டியே சூடு படுத்தவும்.

கேக் ரேயில் பேக்கிங் பேப்பரை விரித்து இக் கலவையை ஊற்றவும்.

175° டிகிரியில் 40 நிமிடம் பேக் செய்யவும்.

பின்பு வெளியில் எடுத்து ஆறிய பின்பு கேக்கை திருப்பி ஒரு தட்டில் போடவும். அதன் மேல் மாஜரீனைப் பூசி துருவிய சொக்லேட்டை தூவி, வெட்டிப் பரிமாறவும்.


நம்மில் தலைமுடிப் பிரச்சினை இல்லாதவர் களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆண், பெண் என்ற வேறுபாடு இதற்குக் கிடையாது. பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு தலைப்பொடுகு, இளநரை... இவை ஓயாதப்பிரச்சினை. ஆண்களுக்கு இவை களைவிட தலையாயப் பிரச்சினை வழுக்கை ஏற்படுதல். இளம் வயதிலேயே முடி உதிர்வ தால் முதுமைத்தோற்றத்திற்கு ஆளாகும் நிலை.

முடி உதிர்வது ஏன்?

முடி உதிர்வு என்றால் அதற்கு அடிப்படை யான காரணம் என்ன என்பதை முதலில் ஆராயவேண்டும். முடி உதிர்வு என்பது நோயின் அளவு கோல். உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தான் முடி உதிர்வின் அடிப்படைக் கார ணமாகும். தவிர, அதிகமான எண்ணெய்ப் பசை எண்ணெயே இல்லாமல் முடி வறண்டு போதல், அதிகமான டென்ஷன், இப்படி சில காரணங்களும் கூட இருக்கலாம். காரணம் அறிந்த பின்புதான் சிகிச்சைகளை துவங்க வேண்டும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்த மிக எளிய வழி வெறும் கைகளினால் தலைப்பகுதி யில் இதமாக மசாஜ் செய்து விடுவதுதான். தலையில் இறுக்கமான தொப்பி, ஹேர்பெல்ட் போன்றவற்றை அணி வதாலும் முடி உதிர லாம்.

பொடுகுத் தொல்லையா?

தலைப்பகுதி சருமத்தில் ஏற் படும் வறட்சியின் காரணமாக வும், எண்ணெய் சுரப்பிகள் குறைந்து இறந்த செல்களின் பட லங்கள் உதிர்வதாலும் பொடுகு உண்டாகிறது. இது தொற்றக்கூடிய பிரச்சினை வேறு. எனவே, பொடுகு உள்ளவர்கள் பயன்படுத் திய சீப்பு, டவல், தலையணை உறை போன்ற வற்றை பிறர் பயன் படுத் தவே கூடாது.

பொதுவாக அழகு நிலையங்களில் முடிக்கான, பொடுகு நீக்கும் சிகிச்சைகள், மசாஜ் போன்றவை களைத் தருவார்கள். ஆனால் இங்கு கார ணங்கள் ஆராயப் பட்டு மருந்துகள் தரப்படுகின்றன.

வழுக்கைக்கான காரணம் என்ன?

பரம்பரை தவிர, தலைப்பகுதியில் ஏற்படும் வறட்சியும் அதனால் ஏற்படும் முடி உதிர்வை ஆரம் பத்திலேயே கவனிக் காமல் அலட்சியப் படுத்துவதுமே வழுக்கைக்கு முக் கிய காரணங்களாக அமைகின்றன.

நுனியில் முடி பிளவுபடுவது ஏன்?

உடல் நலம் பாதிக் கப்பட்டுள்ள தன் அடையாளம்தான் நுனி யில் முடி பிளவு படுவது. உணவு முறை களில் மாற்றம் செய் தால் இந்தப் பிரச் சினை தீரும். இதற் கான பிரத்யேக சிகிச் சைகளும் உண்டு. அதேபோல நரை வேக மாக உண்டாகவும் முடிப் பகுதியில் ஏற்படும் அதிர்வுகளும் முக்கிய காரணம். முடி பராமரிப்பிற்கு எளிய வழிகள்

அதிகமாக எண்ணெய் தடவவும் கூடாது அதேபோல் எண்ணெய் தடவா மலும் இருக்கக் கூடாது. தலையை நேரம் கிடைக்கும்போது மென்மையாக மசாஜ் செய்துகொள்வது நல் லது. இதனால் ரத்த ஓட்டம் சீராகும். முடி உதிர் வது நிற்கும்.

குளிர்ந்த நீரில் தலையை அலசுவது நல்லது. ஈரமான தலையை சீப்பினால் வாரக்கூடாது. கூடுமானவரை டிரையர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எண்ணெய்ப்பண்டங்கள், இனிப்புப் பொருட்களை உண்ணாமல் தவிர்ப்பது நல் லது. பொடுகு, பேன் போன்ற பாதிப்புகளுக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சையை நாட வேண்டும். இதேபோல முடி உதிர்வு ஏற்படும் போதும் அலட்சியம் காட்டக்கூடாது. இப்படிச் செய்வது வழுக்கையை உண்டாக்கும்.

பராமரிப்பு

சரியான பராமரிப்பு இல்லாதது, உப்புத் தண்ணீரில் தலை குளிப்பது, போஷாக்கில்லாத ஆகாரம், மருந்தினால் ஏற்படும் பக்க விளை வுள் என பல்வேறு காரணங்களால் கூந்தல் உதிர்கிறது. கூந்தலில் அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இரும்புச் சத்து அதிகம் நிறைந்திருக்கும் உணவினை அதிகம் சாப்பிட வேண்டும்.

விளக்கெண்ணைய், தேங்காய் எண்ணைய், ஆலிவ் எண்ணைய் ஆகியவற்றை சம அள வில் எடுத்து லேசாக சசூடாக்கி தலையில் மசாஜ் செய்து, வெந்நீரில் மூழ்கிப் பிழிந்த டவ லால் தலைக்கு ஒத்தடம் தர வேண்டும். பிறகு தரமான சீயக்காயோ, ஷாம்புவோ போட்டு கூந்தலை அலச வேண்டும். வாரம் ஒருமுறை இப்படிச் செய்து வந்தால் கூந்தல் உதிர்வது நின்று ஆரோக்கியமாகவும் வளரும். முயற்சித்துத்தான் பாருங்களேன்.

விளம்பரங்கள்