Welcome to My Website







வாழ்க்கையில் திருமணம் ஒரு தடவைதான் நடக்கும். அதனால் இப்போதெல்லாம் அத்தனை திருமணங்களிலும் அலங்காரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முன்னர் மணப்பெண் அலங்காரம் என்பது முகூர்த்தம் நடக்கும் அன்று காலையில் மணப்பெண்ணுக்கு மேக்அப் போடுவதோடு சரி. இப்போது திருமணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே முகம் மட்டுமல்ல, உடல் முழுவதும் மெருகூட்டப்படுகிறது. அது மாத்திரமன்றி, உடை, நகைகள் போன்றவையும் அவரவருக்கேற்றவாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது.

திருமணம் செய்துகொள்ளப்போகும் மணப்பெண் கவனிக்க வேண்டிய சில விடயங்கள்.

3 மாதங்களுக்கு முன்பு:

3 மாதங்களுக்கு முன்பிருந்தே மணப்பெண்கள் தினமும் 45 லீற்றர் தண்ணீர் பருகவேண்டும். அசைவ உணவுகளின் அளவைக்குறைத்து, பெருமளவு காய்கறி, பழங்களை உணவில் சேர்க்கவேண்டும். மனதை அமைதிப்படுத்தும் பொழுதுபோக்கில் ஈடுபட வேண்டும். தினமும் 8 மணிநேரம் நன்றாகத் தூங்கவேண்டும். உடலை பராமரிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தவேண்டும். வாரத்தில் ஒருநாள் உடம்பு முழுவதும் பாலைத் தடவி 15 நிமிடங்கள் கழித்து மென்மையான ஸ்பொன்ஞ்ச் அல்லது கை விரலால் மிதமாக தேய்க்க வேண்டும். பின்பு கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் பால் பவுடரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் சருமத்தில் பதிந்து பளபளப்பைக் கொடுக்கும்.

அழகு நிலையத்தில் மணப்பெண்களுக்காக இப்போது 'மில்க் பாத்' உள்ளது. ஒரு தொட்டியில் பால், தண்ணீர் மற்றும் ஒவ்வொருவர் சருமத்திற்கேற்ற 'ஜெல்'லும் அதில் கலந்திருக்கும். முதலில் அழகுசாதனப் பொருட்களை உடலில் பூசி தேய்த்து, 'ஸ்கிரப்' செய்துவிட்டு, பின்பு ஆவி 'பாத்' கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் 'மில்க் பாத்' எடுக்க வேண்டும். பின் உடல் முழுவதும் 'மாஸ்க்' போடப்படும். இதனால் சருமம் ஒரே நிறத்தில் பளபளப்புடன் தோன்றும். இதனைத் திருமணம் நடக்கும்வரை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்வது நல்லது.

பால் பிடிக்காதவர்கள் வைனில் குளிக்கிறார்கள். சாதாரண சருமத்தைக் கொண்டவர்கள் 'ஸ்ட்ரோபெரி' பழத்தைப் பிசைந்து முகத்தில் தேய்த்து 'ஸ்கிரப்' செய்ய வேண்டும். பத்து நிமிடத்தில் அதை நீக்கிவிட்டு, ஆப்பிள் கூழை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிட வேண்டும்.

எண்ணெய்த்தன்மையான சருமத்தைக் கொண்டவர்கள் காலை, மதியம், இரவு மூன்று வேளையிலும் முகத்தை நன்றாகத் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். தினமும் எலுமிச்சம்பழத்தை வெட்டி முகத்தில் தேய்த்து பத்து நிமிடத்தில் கழுவிவிடவேண்டும். இது லேசான எரிச்சலைத் தரும். சந்தனப் பவுடரை பன்னீர் அல்லது சுத்தமான தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்களில் கழுவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில், முகத்தில் இருக்கும் எண்ணெய்த்தன்மை குறைந்துவிடும். பின்பு வாரத்தில் ஒருமுறை மட்டும் இவ்வாறு செய்தால் போதும். கறுப்புப் புள்ளி, திட்டு, படை, முகப்பரு, நிறமாற்றம் போன்றவை இருப்பவர்கள் அழகு நிலையங்களிலே இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

கூந்தல் பராமரிப்பைப் பொறுத்தவரை மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற ஏதாவது ஒன்றை லேசாக சூடாக்கி தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊறிய பின்பு ஷாம்பு போட்டு கழுவி, கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனரை தலைமயிரில் மாத்திரமே பூச வேண்டும். தலை ஓட்டில் படக்கூடாது.

வரட்சியான கூந்தலை கொண்டிருந்தால் தே.எண்ணை, விளக்கெண்ணை, கிளிசரின், வினிகர் போன்றவைகளை தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கண்டிஷனருடன் கலந்து தலைமயிரில் பூசலாம். பின்பு சுடு தண்ணீரில் டவலை முக்கிப் பிழிந்து, கூந்தலைச் சுற்றிக் கட்ட வேண்டும். இரண்டு, மூன்று முறை அவிழ்த்து கட்டவேண்டும். 15, 20 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்பு போட்டு கழுவவேண்டும். பின்பு கண்டிஷனர் பூச வேண்டும். வாரத்திற்கு ஒரு தடவை இவ்வாறு செய்ய வேண்டும்.

ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டில் செய்ய வேண்டியவை:

சாதாரண சருமம் நாமக்கட்டி பவுடர், முல்தானிமுட்டி இரண்டையும் முகத்தில் பூசி கழுவ வேண்டும். எண்ணெய் சருமம் என்றால் முல்தானிமுட்டி மட்டும் பூச வேண்டும்.

அழகு நிலையத்தில் இதற்கான 'ஸ்கின் லைட்னிங் பேக்கேஜ்' உள்ளது. இதனை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். ஒரு வாரத்திற்கு முன்பு:

முகூர்த்த தினத்தன்று மணப்பெண்ணுக்கு முழுமையாக எப்படி அலங்காரம் செய்யப்படுமோ அது போன்ற அலங்காரத்தை செய்து பார்த்துவிட வேண்டும். உச்சி முதல் பாதம் வரை அலங்கரித்துவிட்டு, அதில் ஏதாவது மாற்றங்கள் தேவையா? உடை, அணிகலன்களில் ஏதாவது மாற்றம் தேவையா என்பதை எல்லாம் பார்த்துவிட வேண்டும். இப்போது பெரும்பாலும் மணமகனும் மணப்பெண்ணின் முழு அலங்காரத்தைப் பார்வையிட்டு அவருடைய விருப்பத்தைத் தெரிவிப்பார். இந்த அலங்காரத்திற்கு மூன்று மணிநேரம் தேவைப்படும். மூன்று நாட்களுக்கு முன்பு:

பெடிக்யூர், மெனிக்யூர் எனப்படும் கால், கை, நக பராமரிப்பு, வெக்சிங், பேஷியல், பாடி டிரீட்மென்ட் மற்றும் மெஹந்தி போன்றவைகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். இவற்றைச் செய்த பின் மணப்பெண்கள் வெளியே செல்லக்கூடாது. இரண்டு நாட்களுக்கு முன்பு:

நிறைய தண்ணீர் பருகவேண்டும். நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். நிறைய பழச்சாறு பருகவேண்டும். திருமணத்தன்று:

முகூர்த்தத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, முழுமையான மணப்பெண் அலங்காரத்தைத் தொடங்க வேண்டும். ஏற்கனவே 'ட்ரையல்' செய்து பார்த்திருந்தால் வேகமாக, சிறப்பாக மணப்பெண் அலங்காரத்தை முடிக்க முடியும்.


குள்ளமாக இருப்பவர்கள்:
* குள்ளமாக இருப்பவர்கள் லோங் டொப் போடாதீர்கள். அது உங்களை இன்னமும் குள்ளமாகக் காண்பிக்கும். முழங்கால் வரையிலான டொப் குர்தா போட்டுக் கொண்டால் உயரமாகத் தெரிவீர்கள். அதேபோல நெடுங் கோடுகள் கொண்ட சுடிதார் உங்களை உயரமாகக் காட்டும். * முடிந்தவரை குள்ளமாக இருப்பவர்கள் சுடிதாரின் டொப் ஒரு கலர், பொட்டம் பகுதி ஒரு கலர் என்று போடாதீர்கள். இரண்டும் வேறுபட்ட கலர்களாக இருந்தால் உங்களின் தோற்றத்தை உயரக் குறைவாக காண்பித்து விடும். ஒரே கலர் சுடிதார்தான் உங்களுக்கு ஏற்றது. * சிலருக்கு இடுப்பு கொஞ்சம் அகலமாக இருக்கும். அப்படியிருப்பவர்கள் இடுப்பிலிருந்து ஸ்லிப் கட் வருமாறு சுடிதார் தைத்துக் கொள்ளலாம். அதேபோல் வயிறு பெரிதாகத் தெரிபவர்கள் இடுப்பிலிருந்து "ஏ' மாதிரியான லைன் வருமாறு தைத்துக்கொண்டால் வயிறு ஒட்டியதாகத் தெரியும். உயரமாக இருப்பவர்கள்:

* உயரமானவர்கள் குள்ளமான குர்தா போடக் கூடாது. அப்படிப் போட்டால் கால் நீளமாகத் தெரியும். அதேபோல குறுக்குக் கோடுகள் உங்களை ஜம்மென்று காட்டும்.

* ஷிபோன் மெட்ரீரியல் கவர்ச்சிகரமான தோற்றத்தைத் தரும். இந்த சுடிதாரில் குந்தன் வேர்க் எம்பிரோய்டரி செய்யப்பட்டுள்ளது. சின்னச் சின்ன பைப்பிங் (மொத்தம் 16) சுடிதாரை கூடுதல் அழகாக்குகிறது.

* பிரிண்ட் வேர்க் செய்யப்பட்ட பியூர் கிரேப் ஸில்க் மெட்ரீரியல் சுடிதாரைத்தான் சினிமாவில் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சுடிதாரின் ஓரங்களில் செய்யப்பட்டுள்ள கோட்டா லேஸ் பினிஷிங் சுடிதாரை கூடுதல் அழகாக்குகிறது.

* பிரெஞ்ச் கிரேப் மெட்ரீரியல், பஷனாக இருந்த இந்த சுடிதார் மறுபடியும் வந்துள்ளது. சுடிதாரின் பொட்டம் ரௌசர் மாதிரியும் தெரியும். ஸ்கேர்ட் மாதிரியும் தெரியும். சின்னச் சின்ன சீக்வென்ஸ் வேர்க் இந்தச் சுடிதாரை ஸ்டைலாகக் காட்டுகிறது. *உங்கள் தோள்கள் நேராக இல்லையா? அகன்ற நெக்காக தைத்துக்கொள்ளுங்கள். சற்று சரிவான தோள்களா? "நரோ நெக்' உங்களுக்கு எடுப்பாக இருக்கும். கூன் உள்ளவரா? அப்படியென்றால் தோளில் "இன்ஸைட் கட்' கொடுத்து ரெய்லரிடம் தைக்கச் சொல்லுங்கள். கொலர் சுடிதார் யாருக்கெல்லாம் பொருந்தும்?

ஒல்லியாக இருப்பவர்கள் மற்றும் கழுத்து நீளமாக இருப்பவர்களுக்கு கொலர் சுடிதார் மிகப்பொருத்தமாக இருக்கும். * அதிக சதைப்பிடிப்புடன் இருப்பவர்கள் கழுத்தின் பின்புறம் மட்டும் கொலர் வைத்துத் தைத்துக் கொண்டால் அழகாக இருக்கும்.

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் புதிய மஞ்ச வெள்ளோட்ட்ம் நாளை புதன் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இடம் பெற்வுள்ளது. தேவஸ்தான தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுரகன் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் புத்தூர் காளிகா சிற்பாலய சிற்பக் கலைஞர் விஸ்வபிரம்மஸ்ரீ ஸ்தபதி செ.பாலச்சந்திரன் கௌரவிக்கப்படவுள்ளார்.

மஞ்ச வெள்ளோட்டத்தையொட்டி ஆசியுரைகளை மாவை ஆதீன முதல்வர் மகாராஜஸ்ரீ சு.து.சண்முகநாதக்குருக்கள் கீரிமலை நகுலேஸ்வர ஆதீன முதல்வர் இராஜராஜஸ்ரீ கு.நகுலேஸ்வரக்குருக்கள் நல்லைதிருஞான சம்பந்தர் ஆதீன இரண்டாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிகஞானசம்பந்தபரமாச்சரியசுவாமிகள் மற்றும் தேல்லிப்பளை துர்க்கையமம்ன் ஆலய பிரதமகுரு வா.அகிலேஸ்வரக்குருக்களும் வழங்கவுள்ளார்கள்.

வாழ்த்துரைகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்க.கணேஸ் யாழ்ப்பாணம் பல் கலைக்கழக துனை வேந்தர் பேராசிரியா நா.சண்முகலிங்கன் தெல்லிபபளை பிரதேச செயலாளர்சு.முரளிதரன் தெல்லிப்பளை ஈந்து இளைஞர் சங்கத் தலைவர்க.ரவீந்திரன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளார்கள்.

பாஸ்தா - 2 கப்

எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 1கப்

செடார் சீஸ் - 100 கிராம்

சூப் கியுப்- 1

தக்காளி - 1

வெங்காயம் - 1

கொடை மிளகாய் - சிறியது 1

மஞ்சள் - 2 பின்ச்

சீரகம் பவுடர் - 2பின்ச்

மிளகு பவுடர் - 2 பின்ச்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 1 -2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

மல்லி இலை - சிறிது.

செய்முறை

முதலில் பாஸ்தாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு வடிகட்டி வைக்கவும். சிக்கன் சிறிய துண்டுகளாக கட் செய்து கழுவி நீர் இல்லாமல் வைக்கவும்.தக்காளி,வெங்காயம்,கொடை மிளகாய் ,மல்லி இலை கட் செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி,இஞ்சிபூண்டு,தக்காளி,சிக்கன் ,மஞ்சள்,சீரகம்,மிளகு,உப்பு சிறிது போட்டு வெந்தவுடன் ,கொடை மிளகாய் போட்டு கிளறி இறக்கவும்.சிக்கனில் நீர் இருந்தால் அதனுடன் உபயோகிக்கவும்.

பின்பு பைரக்ஸ் போன்ற பேக்கிங் பவுலில் எண்ணெய் சிறிது தடவி பாஸ்தா,வேக வைத்த சிக்கன்,பொடித்த சூப் கியுப்,அதன் மேல் செடார் சீஸ் போட்டு முற்ச்சூடு படுத்தப்பட்ட அவனில் 200 டிகிரியில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.லேசாக சீஸ் சிவறும் போது எடுக்கவும்.மல்லி இலை தூவி பரிமாறவும்.

சுவையான கிரீமி சிக்கன் பேக்ட் பாஸ்தா ரெடி

-ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வென்றது. இதன் மூலம் தொடரை 2-1 என கைப்பற்றியது.

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகள் மோதிய வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடந்தது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருந்தன. முக்கியத்துவம் வாய்ந்த கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332, அவுஸ்திரேலியா 160 ஓட்டக்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 373 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்த இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு எட்ட முடியாத 546 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அவுஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (40), காடிச்(43) சிறப்பான துவக்கம் தந்தது. அடுத்து வந்த கேப்டன் பாண்டிங், மைக்கேல் ஹசி ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதையடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அந்நாட்டு ரசிகர்களுக்கு உருவானது. ஆனால், பாண்டிங் 66 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பிளின்டாப்பினால் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த அவுஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினார்கள். வருவதும் உடனே பெவிலியன் திரும்புவதுமாக இருந்தனர். மனம் தளராமல் போராடிய ஹசி சதம் கடந்து அவுட்டானார். அவர் 14 பவுண்டரி உட்பட 121 ரன்கள் எடு்ததார். ஆஸ்திரேலியா 348 ஓட்டங்களும் ஆல்-அவுட்டாகியது.

197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து தொடரை 2-1 என கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்க்கு வழங்கப்பட்டது.
,

நான் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் மதுரையை சொந்த ஊராக நினைக்கிறேன் என்று மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.

மதுரை வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்ட பள்ளி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் அழகிரி பேசுகையில்,

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் (சுப்பிரமணிய சாமி) மதுரையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்றார். மதுரையை சிங்கப்பூராக மாற்ற வேண்டாம். மதுரையாகவே இருக்கட்டும். நான் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் மதுரையை சொந்த ஊராக நினைக்கிறேன்.

மாட்டுத்தாவணியில் வோடபோன் நிறுவனத்தின் சார்பில் விரைவில் பி.பி.ஓ. துவக்க உள்ளோம். இதனால் இங்கு 2,000 பேருக்கு வேலை கிடைக்கும்.

மேலூரில் 11 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் நூற்பாலையை திறக்க ஏற்பாடுகளை செய்து வருகிறோம். மேலும், அந்த இடத்தில் டாமின் நிறுவனம் மூலம் கிரானைட் கற்களை பாலீஷ் செய்யும் தொழிலை துவக்க ஏற்பாடு நடக்கிறது. ஒரு வருடத்திற்குள் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஒத்தக்கடை இடையபட்டியில் நைபெட் சிபெட் பயிற்சி மையங்கள் துவக்க தேவையான பணிகள் நடக்கின்றன. அதே போன்று, தொண்டியில் விரைவில் ரூ. 45,000 கோடியில் மாபெரும் தொழில் திட்டம் வரவுள்ளது.

தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெற தேவையான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

எனவே நீங்கள் கோரிக்கை வைத்துக் கொண்டே இருங்கள். நான் நடவடிக்கை எடுத்துக் கொண்டே இருக்கின்றேன் என்றார்.

விளம்பரங்கள்