Welcome to My Website






நான் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் மதுரையை சொந்த ஊராக நினைக்கிறேன் என்று மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.

மதுரை வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்ட பள்ளி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் அழகிரி பேசுகையில்,

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் (சுப்பிரமணிய சாமி) மதுரையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்றார். மதுரையை சிங்கப்பூராக மாற்ற வேண்டாம். மதுரையாகவே இருக்கட்டும். நான் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் மதுரையை சொந்த ஊராக நினைக்கிறேன்.

மாட்டுத்தாவணியில் வோடபோன் நிறுவனத்தின் சார்பில் விரைவில் பி.பி.ஓ. துவக்க உள்ளோம். இதனால் இங்கு 2,000 பேருக்கு வேலை கிடைக்கும்.

மேலூரில் 11 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் நூற்பாலையை திறக்க ஏற்பாடுகளை செய்து வருகிறோம். மேலும், அந்த இடத்தில் டாமின் நிறுவனம் மூலம் கிரானைட் கற்களை பாலீஷ் செய்யும் தொழிலை துவக்க ஏற்பாடு நடக்கிறது. ஒரு வருடத்திற்குள் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஒத்தக்கடை இடையபட்டியில் நைபெட் சிபெட் பயிற்சி மையங்கள் துவக்க தேவையான பணிகள் நடக்கின்றன. அதே போன்று, தொண்டியில் விரைவில் ரூ. 45,000 கோடியில் மாபெரும் தொழில் திட்டம் வரவுள்ளது.

தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெற தேவையான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

எனவே நீங்கள் கோரிக்கை வைத்துக் கொண்டே இருங்கள். நான் நடவடிக்கை எடுத்துக் கொண்டே இருக்கின்றேன் என்றார்.

0 comments

Post a Comment

விளம்பரங்கள்