Welcome to My Website






ஈஸி கோபி மஞ்சுரியன்

Posted by tamilvili Monday, August 31, 2009 0 comments

தேவையானப் பொருட்கள்
காலிஃபிளவர் – 1 பெரியது

வெங்காயம் - 1

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி

தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி

கொத்தமல்லி – சிறிதளவு

தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் காலிஃபிளவரை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

2 நிமிடம் வதங்கிய பிறகு அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

அதன் பின் அத்துடன் தக்காளி சாஸை சேர்க்கவும்.

இப்பொழுது வெங்காயத்தை நான்கு பகமாக வெட்டி கொள்ளவும். அதன் பின் வெட்டிய வெங்காயத்தின் இதழ்களைத் தனித்தனியாக பிரித்து கொள்ளவும்.

ஒரு நிமிடம் வதங்கிய பிறகு அதை காளி ஃபிளவர் கலவையுடன் சேர்க்கவும்.

இப்பொழுது சுவையான ஈஸி கோபி மஞ்சுரியன் ரெடி.

தேவையான பொருட்கள்: பனம் பழம் 3 கோதுமை மா 3 சுண்டு சீனி 1/2 சுண்டு உப்பு அளவாக தேங்காய் எண்ணெய் அளவாக செய்முறை: பனம் பழத்தின் தோலை உரித்து எடுத்துவிட்டு கழியாக இருக்கும் பகுதியை நன்றாக பிசைந்து நீரும் சிறிதளவு விட்டு கழியை எடுத்து துணி ஒன்றில் விட்டு வடிக்கவும். பின்னர் சிறிதளவு உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து சூடாக்கவும். பிறகு இறக்கி ஆறவிடவும். நன்றாக ஆறியதும் சீனியையும், 1 1/2 சுண்டு அவித்த மாவையும், 1 1/2 சுண்டு பச்சை மாவையும் போட்டு நன்றாகக் குழைக்கவும்.

பின்னர் எண்ணெயை சூடாக்கி குழைத்த மாவை கைவிரல்களால் பிழிந்து சிறு சிறு உருண்டைகளாகப் போட்டு பொன் நிறமாக வெந்ததும் எடுத்து, ஆறிய பின் பரிமாறலாம். சுலபமான வேலை. பொருட்களும் அதிகம் தேவை இல்லை. எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்: மரவள்ளிக் கிழங்கு 1/2 கிலோ

கோதுமை மா 01 மேசைக்கரண்டி (நிரப்பி)

சிறிதாக வெட்டிய வெங்காயம் 02 மேசைக்கரண்டி

சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 02 மேசைக்கரண்டி

தனி மிளகாய்த் தூள் அளவிற்கு சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை 01 மேசைக்கரண்டி பெரிய சீரகம் சிறிதளவு

தேங்காய் எண்ணெய் 1/4 போத்தல் உப்பு அளவாக செய்முறை:

மரவள்ளிக் கிழங்கை, தோலுரித்துக் கழுவி ஸ்கிரேப்பரில் துருவி எடுத்துக் கொள்க. இத்துருவலைப் பாத்திரத்திலிட்டு அரித்த கோதுமை மா, வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், மிளகாய்த்தூள் உப்புத்தூள் என்பவற்றைப் போட்டு நன்கு பிசைந்து குழைத்துக் கொள்க. கலவையை தேசிப்பழமளவு உருண்டைகளாக பிடித்து உள்ளங்கையில் வைத்து மெதுவாக தட்டிய பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வடையைச் சூடாகப் பரிமாறும்போது மிகவும் சுவையாக இருக்கும். (மரவள்ளிக் கிழங்கை விரும்பினால் அவித்தும் மற்றைய கலவைகளுடன் பிசைந்து பொரிக்கலாம்)

தேவையானப் பொருட்கள் கோதுமை மாவு - 170 கிராம் வெண்ணெய் - 115 கிராம் பொடித்த சர்க்கரை - 115 கிராம் பெரிய முட்டை - 2 பேகிங் பவுடர் - 2 தேக்கரண்டி ஜாம் - 30 கிராம் பால் - ஒரு தேக்கரண்டி காரமல் செய்வதற்கு: தண்ணீர் - 50 மில்லி சர்க்கரை - 50 கிராம்

செய்முறை காரமல் செய்முறை: சர்க்கரை 50 கிராம் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பின் மேல் வைத்து சூடாக்கவும். சர்க்கரை கரைந்து பழுப்பு நிறமாகும். பிறகு தண்ணீரை விட்டு ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும். கொழகொழவென்று வெல்லப் பாகு போல் இருக்கும்.

காரமல் கேக் செய்யும் முறை: பொடித்த சர்க்கரை, வெண்ணையை இலேசாக ஆகும் வரை நன்றாக குழைக்கவும். முட்டையின் வெள்ளையையும், மஞ்சள் கருவையும் தனித்தனியாகப் பிரிக்கவும். இரண்டையும் தனித்தனியாக நன்றாக அடிக்கவும். வெள்ளைக் கருவை நன்றாக அடிக்கவும்.

மாவையும் பேகிங் பவுடரையும் இருமுறை சலிக்கவும். குழைத்த வெண்ணை கலவையில் அடித்த மஞ்சள் கருவை சேர்த்து அடிக்கவும். காரமல் சேர்க்கவும். பிறகு சலித்த மாவை சேர்க்கவும்.

நன்றாக அடித்த முட்டை வெள்ளையைப் போட்டு மிருதுவாகவும் மெதுவாகவும் கலக்கவும். தேவையானால் பால் விடவும். 7 அங்குல கேக் பேக் செய்யும் 2 தட்டுகள் எடுத்து அதில் நெய் தடவி மாவு தூவிக் கொள்ளவும்.

கலவையை அதில் போடவும். 375 டிகிரி F சூட்டில் 30 இருந்து 40 நிமிடம் வரை பேக் செய்யவும். முட்டை வெள்ளையை அடிக்கும் பொழுது பீங்கான் அல்லது எனாமல் பாத்திரம் உபயோகிக்கவும். பாத்திரத்திலோ முட்டை அடிக்கும் கருவியிலோ எண்ணெய் பசை இருக்கக் கூடாது. கேக் பேக் ஆனவுடன் எடுத்து ஆற வைக்கவும். ஒரு கேக்கின் மேல் 30 கிராம் ஜாம் தடவி மற்றொரு கேக்கையும் அதன் மேல் வைக்கவும். தேவையானால் ஐசிங் செய்யலாம்.

தேவையானப் பொருட்கள் ஜவ்வரிசி - 150 கிராம் மோர் - ஒரு கப் மோர் மிளகாய் - 3 கடுகு - ஒரு தேக்கரண்டி கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி பெருங்காயம் - சிறு குண்டுமணி அளவு கல் உப்பு - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து எண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி ஜவ்வரிசியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இதர தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு அதில் மோரை ஊற்றி இரண்டையும் ஒன்றாக கலந்து 3 மணிநேரம் ஊற வைக்கவும்

வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து மோர் மிளகாயை போட்டு வதக்கவும்

வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து மோர் மிளகாயை போட்டு வதக்கவும்

அதன் பிறகு அதனுடன் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்பிறகு மோருடன் ஊற வைத்த ஜவ்வரிசியை தாளித்தவற்றுடன் போட்டு நன்கு எல்லாம் ஒன்றாகும்படி கிளறி விடவும் பின்னர் பொரித்து வைத்திருக்கும் பெருங்காயத்தை பொடி செய்து உப்புமாவில் சேர்த்து கிளறி, மூடி வைத்து 4 நிமிடம் வேக வைக்கவும்.

நிமிடம் கழித்து உப்புமா வெந்ததும் மூடியை திறந்து ஒரு முறை நன்கு கிளறி விட்டு பொலபொலவென்று ஆனதும் இறக்கி வைத்து விடவும். ஜவ்வரிசி ரொம்ப கெட்டியாக இருந்தால் கால் கப் தண்ணீர் சேர்த்து கிளறி 3 நிமிடம் மூடி வைத்து வெந்ததும் இறக்கவும்ஜவ்வரிசி மோர் உப்புமா தயார். நாம் வழக்கமாக செய்யும் உப்புமாவை விட செய்முறையிலும் ருசியிலும் சற்று வித்தியாசமானது. இதனை நைலான் ஜவ்வரிசியை வைத்து செய்யவும்.


தேவையான பொருட்கள்

  • தோல் நீக்கிய பாதம் பருப்பு - 250 கிராம்
  • மைதா மா - 250 கிராம்
  • சீனி - 250 கிராம்
  • மாஜரீன் - 250 கிராம்
  • முட்டை - 4
  • வனிலா - 1 தே. கரண்டி
  • வேக்கிங்பவுடர் - 15 கிராம்

செய்முறை

  • பாதாமை அரைத்து கொள்ளவும். (மிகவும் பொடியாகி விட கூடாது)
  • முதலில் மாஜரின், சீனி இரண்டையும் சேர்த்து சீனி கரையும் வரை அடிக்கவும்.
  • மாஜரீனும், சீனியும் சேர்த்து அடிக்கும் போதே முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து அடிக்கவும்.
  • பின்பு பாதாம் பருப்பு, மா, பேக்கிங்பவுடர் எல்லாவற்றையும் கையால் கலந்து திரும்பவும் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து திரும்பவும் ஒரு சுற்று சுற்றி கலக்கவும்.
  • கடைசியாக வனிலாவையும் சேர்த்து கலக்கவும்.
  • பின்பு பேக்கிங்தட்டில் சிறிதளவு மாஜரீன் பூசி தட்டில் ஊற்றி 325 டிகிரி F 35 அல்லது 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.

குறிப்பு:

சீனீ நன்றாக கரைய வேண்டும். சீனி கரையாவிட்டால் கேக் கருகி விடவும்.


காலணிகள், இப்போதெல்லாம் ஆடம்பரத் திற்கான அவசியமாக மாறிவருகின்றன. காலுக்கு இதமாக இருக்கவேண்டும் என்பதற் காக வாங்கப்பட்ட காலணிகள் காலமாற்றத் தில் அழகுக்கும், ஆடம்பரத்திற்கும் மாறியதில் ஆச்சரியமில்லை என்றாலும், ஆடைக்கும், அணிகலன்களுக்கும் கொடுக்கும் அதே முக் கியத்துவத்தை செருப்புக்கும் கொடுத்து வாங்கி அணிந்து மகிழ்கின்றனர் இன் றைய தலைமுறையினர்.

அதனால்தான் ஆடை, அணிகலன்க ளுக்கு நிகராக காலணிகளின் விலையும் அதிகரித்து வருகின்றது. இப்போதெல் லாம் பல ஆயிரம் ரூபாய் வரை செருப் புகள் விற்கப்படுகின்றன.

கலர்புல் செருப்புகளையும், ஆடைக்கு ஏற்ற மேட்சான செருப்புகளையுமே இன்றைய இளம் பெண்கள் விரும்புகின்ற னர். ஆனால் செருப்பு என்பது நமது உள் ளங்காலோடு நெருங்கிய தொடர்பு உடை யதால் அதை வயசுக்கு தக்க படியும், தேவைக்கு தக்கபடியும் வாங்குவது முக் கியமானது. ஏனென்றால் உள்ளங்காலு டன் நமது உட லில் உள்ள அனைத்து நரம்புகளும் தொடர்புடையது.

இப்போது திருமணம் போன்ற விசே ஷங்களுக்கும், வீடு, சுற்றுலா போன்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான செருப்புகளை பெண்கள் அணிகின்றனர். உடலுக்கு தகுந்தபடி செருப்புகளை வாங் குவது நல்லது. பொருத்தமான செருப்பு களை அணிபவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். பொருத்தமில்லாத செருப்புகளை அணிந்தால் தன்னம்பிக்கை குறையும்.

செருப்புகளை தேர்ந்தெடுத்து வாங்கும் போது மூன்று விஷயங்களை கவனித்து வாங் குவது நல்லது. அவை சௌகரியம், அழகு, நிறம் ஆகியவை. கண்ணைப் பறிக்கும் கலர் களை விட இளநிறமே, மற்றவர்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கும். முன்பகுதி குறுகி, குதிகால் உயர்ந்து இருப் பதையே இன்றைய இளம்பெண்கள் விரும்பு கின்றனர். செருப்புகளின் முன்பகுதி குறுகி உள்ளதால் விரல்கள் அழுத்தத்திற்கு உள்ளா கின்றன. மேலும் வர்மப் புள்ளிகளும் அழுத் தப்படுவதால், உடலில் பலவித பிரச்சினை களை ஏற்படுத்தும். இதனால் தலைவலி, கண் வலி, சோர்வு, கால்வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும்.

மேலும் இறுக்கிப் பிடிக்கும் விரல்களில் கொப்பளங்கள் ஏற்படும். இயல்பாக நடக்க முடியாமல் நெருக்கடி ஏற்படும். இன்றைய பேஷன் விரும்பிகள் அனைவருமே குதிகால் உயர்ந்த செருப்புகளையே அணிகின்றனர். இதன் காரணமாக உடலின் சமன்நிலை பாதிப்பு அடைகிறது. இதனால் முதுகுவலி, குதிகால் வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். கால்கள் மெலிந்து இருப்பவர்கள் பென்ஸி ஹீல்ஸ்' என்ற குதிகால் செருப்புகளை தவிர்க் கவும். குண்டு உடல்வாகு உடையவர்கள் அதிக எடையுள்ள செருப்புகளை அணிய வேண்டாம். இவர்கள் மென்மையான திறந்த வெளி செருப்புகளை அணிவது நல்லது.

பாதம் நீளமாக உள்ளவர்கள், கோடு போட்ட டிசைன்கள் நிறைந்த செருப்புகளை அணிய வேண்டாம். இதனால் பாதம் மேலும் நீளமாக இருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். செருப்புகளை வாங்கும்போது. அதை வலது காலில் போட்டுப் பார்த்து வாங்கவும். உங்களுடைய உடல் அமைப்பு, வேலை, செல் லும் இடத்துக்கு தக்கபடி செருப்புகளை அணி யவும்.

பெண்களை பொறுத்தவரை, பெண்களின் உடல் வடிவமைப்பு, எடைக்கு தக்கபடி செருப் புகளை நிதானமாக தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. ஷூக்கள் வாங்கும்போது முன்பக்கம், பின்பக்கம் அழுத்திப் பார்த்து போதுமான இடைவெளி உள்ளதா? என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

விளம்பரங்கள்