தேவையான பொருட்கள்: மரவள்ளிக் கிழங்கு 1/2 கிலோ
கோதுமை மா 01 மேசைக்கரண்டி (நிரப்பி)
சிறிதாக வெட்டிய வெங்காயம் 02 மேசைக்கரண்டி
சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 02 மேசைக்கரண்டி
தனி மிளகாய்த் தூள் அளவிற்கு சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை 01 மேசைக்கரண்டி பெரிய சீரகம் சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1/4 போத்தல் உப்பு அளவாக செய்முறை:
மரவள்ளிக் கிழங்கை, தோலுரித்துக் கழுவி ஸ்கிரேப்பரில் துருவி எடுத்துக் கொள்க. இத்துருவலைப் பாத்திரத்திலிட்டு அரித்த கோதுமை மா, வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், மிளகாய்த்தூள் உப்புத்தூள் என்பவற்றைப் போட்டு நன்கு பிசைந்து குழைத்துக் கொள்க. கலவையை தேசிப்பழமளவு உருண்டைகளாக பிடித்து உள்ளங்கையில் வைத்து மெதுவாக தட்டிய பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வடையைச் சூடாகப் பரிமாறும்போது மிகவும் சுவையாக இருக்கும். (மரவள்ளிக் கிழங்கை விரும்பினால் அவித்தும் மற்றைய கலவைகளுடன் பிசைந்து பொரிக்கலாம்)
0 comments