தேவையான பொருட்கள்: பனம் பழம் 3 கோதுமை மா 3 சுண்டு சீனி 1/2 சுண்டு உப்பு அளவாக தேங்காய் எண்ணெய் அளவாக செய்முறை: பனம் பழத்தின் தோலை உரித்து எடுத்துவிட்டு கழியாக இருக்கும் பகுதியை நன்றாக பிசைந்து நீரும் சிறிதளவு விட்டு கழியை எடுத்து துணி ஒன்றில் விட்டு வடிக்கவும். பின்னர் சிறிதளவு உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து சூடாக்கவும். பிறகு இறக்கி ஆறவிடவும். நன்றாக ஆறியதும் சீனியையும், 1 1/2 சுண்டு அவித்த மாவையும், 1 1/2 சுண்டு பச்சை மாவையும் போட்டு நன்றாகக் குழைக்கவும்.
பின்னர் எண்ணெயை சூடாக்கி குழைத்த மாவை கைவிரல்களால் பிழிந்து சிறு சிறு உருண்டைகளாகப் போட்டு பொன் நிறமாக வெந்ததும் எடுத்து, ஆறிய பின் பரிமாறலாம். சுலபமான வேலை. பொருட்களும் அதிகம் தேவை இல்லை. எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
|
0 comments