Welcome to My Website






மசாலா பிரட் பீட்சா

Posted by tamilvili Wednesday, August 26, 2009

தேவையானப் பொருட்கள்
ப்ரட் ஸ்லைஸ் - பத்து

குடைமிளகய் - இரண்டு

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

தக்காளி சாஸ் - பத்து டீ ஸ்பூன்

துருவிய சீஸ் - பத்து டேபிள் ஸ்பூன்

நெய் - ஐந்து டீ ஸ்பூன்

உப்பு - ஒரு டீ ஸ்பூன்

மல்லி இலை - முன்று டீ ஸ்பூன்

எண்ணை - ஒரு டீ ஸ்பூன்

வறுத்துப் பொடிக்க:

ஓமம் - கால் டீ ஸ்பூன்

சீரகம் - அரை டீ ஸ்பூன்

சோம்பு - அரை டீ ஸ்பூன்

செய்முறை

முதலில் எண்ணை விடாமல் ஓமம், சோம்பு & சீரகத்தை வாசனை வர வறுத்துப் பொடிக்கவும்.

குடை மிளகாய் விதை நீக்கி பொடியாக நறுக்கவும்

வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பொடித்த தூளைப் போட்டு பிறகு வெங்காயம் போட்டு வதக்கி குடைமிளகாய் சேர்க்கவும்.

இரண்டும் பச்சை வாசனை போக வதங்கியதும் உப்பு, தக்காளித் துண்டங்களை சேர்த்து ஒரு நிமிடம் வெதுப்பி இறக்கவும்.

இந்தக் கலவையை பத்து பாகங்களாக பிரிக்கவும்.

பிரட் துண்டங்களைப் ஒரு தட்டில் வைத்து வதக்கிய கலவையை ஒவ்வொரு துண்டிலும் பரவலாக பரப்பவும்.

அதன் மேல் ஒரு டீஸ்பூன் தக்காளி சாஸும், ஒரு டீ ஸ்பூன் சீஸ் துருவலும் பரப்பவும்.

இப்படியே எல்லா துண்டங்களையும் தயார் செய்யவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.

சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து ஒரு டீ ஸ்பூன் நெய் ஊற்றி இரண்டு ப்ரட் துண்டங்களை அடுக்கவும்.

இரண்டு நிமிடம் கழித்து எடுக்கவும்.

இப்போது ப்ரட் துண்டின் அடிப்பாகம் சிவந்தும், மேலே உள்ள சீஸ் உருகியும் இருக்க வேண்டும்.

இப்படியே எல்லாத் துண்டங்களையும் வறுத்து எடுக்கவும்.

ஒவ்வொரு துண்டையும் இறக்கிய உடனேயே மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

0 comments

Post a Comment

விளம்பரங்கள்