Welcome to My Website






காரட் கேக்

Posted by tamilvili Wednesday, August 26, 2009

தேவையானப் பொருட்கள் காரட் - 380 கிராம் (தோல் சீவிய பின்பு 380 கிராம் இருக்க வேண்டும்)

ப்ரெளன் சுகர் - 300 கிராம்

முட்டை - 4

மைதா - 300 கிராம்

ராப்ஸ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - 200 மி.லி

கறுவாத்தூள் - 2 தேக்கரண்டி

ஆப்ப சோடா - ஒரு தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி

வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி

உப்பு - ஒரு சிட்டிகை

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா சேர்த்து நான்கு முறை சலித்துக் கொள்ளவும். காரட்டை துருவியில் உள்ள சின்ன கண்ணில் வைத்து துருவிக் கொள்ளவும்.

அந்த கலவையில் ராப்ஸ் எண்ணெய், சலித்து வைத்திருக்கும் மைதா கலவை, கறுவாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து அடிக்கவும். அவனை முற்கூட்டியே சூடுப்படுத்தி வைக்கவும். கேக் ட்ரேயில் பட்டர் தடவிக் கொள்ளவும் அல்லது பேக் பேப்பர் விரித்து வைக்கவும். நன்கு ஆறியதும் அளவான துண்டுகளாக நறுக்கி பரிமாறவும். சுவையான காரட் கேக்.

0 comments

Post a Comment

விளம்பரங்கள்