தேவையான பொருட்கள்: கோ. மா 250 கிராம்
அரிசி மா 100 கிராம்
கடலை மா 50 கிராம்
நெய் 50 கிராம்
சர்க்கரை 100 கிராம்
அப்பச்சோடா சிறிது
எண்ணெய் 300 கிராம்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரில் அப்பச்சோடா, சர்க்கரை, நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக கையால் கலக்க வேண்டும். சர்க்கரை கரைந்ததும் கோதுமை மா, அரிசி மா, கடலை மா மூன்றையும் ஒன்றாக போட்டு கட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு பூரிக்கட்டையில் சிறிதளவு வைத்து சப்பாத்தி போல் ஆக்கி கத்தியால் சதுரமாக சிறிதாக வெட்டிக் கொள்ளவும். சுத்தமான தாச்சியை அடுப்பில் வைத்து மெல்லிய நெருப்பில் காய விடவும் காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி சிறிது சிறிதாக வெட்டிய சப்பாத்தித் துண்டுகளை போட்டு சிவந்ததும் எடுத்துவிட வேண்டும். இது சாப்பிட மொறுமொறுவென்று சுவையாக இருக்கும். மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது. செய்வதும் எளிது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். |
0 comments