Welcome to My Website






உருளைகிழங்கு சாதம்

Posted by tamilvili Wednesday, August 26, 2009

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 3

அரிசி (பொன்னி/பாஸ்மதி/ஜஸ்மின்)- 1/2 கப்

வெங்காயம் - 2

உள்ளி - 4 பல்லு

கறித்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - சிறிது

செத்தல் மிளகாய் - 2

கடுகு - சிறிது

பெரிய சீரகம் - சிறிது

உளுத்தம்பருப்பு - சிறிது

கடலைப்பருப்பு - சிறிது

உப்பு

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கஜு(முந்திரி)/கச்சான்(நிலக்கடலை) - சிறிது

ரெய்சின் - சிறிது

கொத்தமல்லி இல

செய்முறை அரிசியை களைந்து சமைத்து வைக்கவும்(சோறு)

உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து அவிக்கவும்.

உள்ளி, வெங்காயத்தை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.

அவித்த உருளைகிழங்கை நன்கு மசித்து அதனுள் கறித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கிளறி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதனுள் வெங்காயம், உள்ளி, செத்தல் மிளகாயை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதனுள் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதனுள் மசித்த கிழங்கை போட்டு கிளறவும்.

பின்னர் சோற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். தேவைப்பட்டால் சிறிது உப்பும் சேர்க்கவும்.

சுவையான உருளை சாதம் தயார்.

இதனை பரிமாறும் தட்டில் போட்டு கொத்தமல்லி இலை, பட்டர் அல்லது நெய்யில் வறுத்த ரெய்சின், கஜு/கச்சானை தூவி பரிமாறவும்.

0 comments

Post a Comment

விளம்பரங்கள்