அரிசி - 250 கிராம்கத்தரிகாய் - 200 கிராம்தக்காளி - 4பூண்டு - 6 பல்பட்டை, கிராம்பு, சோம்பு சிறிதுமிளகாய் தூள், கரம் மசாலா - சிறிதுவெங்காயம், மிளகாய், கருவேப்பிலை-தாளிக்ககொத்துமல்லி இலை, உப்பு
செய்முறை:அரிசியை உதிரியாக வடித்து கொள்ளவும்.
வாணலியை வைத்து 50 மில்லி எண்ணை ஊற்றி, பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தக்காளி , வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
கத்தரிகாயை நீளவாக்கில் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
கத்தரிகாய், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலாவை கலவையுடன் சேர்த்து, சிரிது தண்ணீர் விட்டுவேகவைக்கவும்.
கத்தரிகாய் வெந்தவுடன் கொத்துமல்லி இலை, தூவி இறக்கவும்.
இதனுடன் சாதத்தை சேர்த்து கிளறவும்.
சாதத்துடன் சிறிது நெய் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
ப்ரட்டை எண்ணெய்யில் பொறித்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.தயிர் பச்சடி நல்ல காம்பினேஷன்.
0 comments