தேவையானப் பொருட்கள்
பச்சரிசி-இரண்டு கோப்பை
உளுத்தம்பருப்பு-அரைக்கோப்பை
சாதம்-அரைக்கோப்பை
வெந்தயம்-அரைதேக்கரண்டி
உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி
ஆப்பச்சோடா-ஒரு சிட்டிகை
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-இரண்டு
கேரட் - 1/4 கப்
பீன்ஸ் - 1/4 கப்
கொத்தமல்லி-1/2கட்டு
கறிவேப்பிலை-ஒரு கொத்து
எண்ணெய்-தேவையான அளவு
வெங்காய இலை-கொஞ்சம்
செய்முறை
அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து களைந்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
அடுத்த நாள்சாதம்போட்டு தோசைக்கு அரைப்பதைப் போன்று மைய்ய அரைக்கவும்.
உப்பைப் போட்டு நன்கு கரைத்து ஒரு நாள் முழுவதும் புளிக்க வைக்கவும்.
நன்கு புளித்தவுடன் ஒரு சிட்டிகை ஆப்பச்சோடாவை சிறிது தண்ணீரில் கரைத்து மாவில் ஊற்றி கலக்கி வைக்கவும்.
கேரட்,பீன்ஸ்,வெங்காயம், பச்சைமிளகாய்,கொத்தமல்லி,கறிவேப்பிலை ஆகியவற்றை மிக மிக சிறியதாக நறுக்கி வைக்கவும்.
பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து ஊற்றி சற்று தடிமனான தோசைப் போல் வார்க்கவும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள காய்கறிகலவையில் ஒரு பிடியளவு எடுத்து ஊத்தாப்பத்தின் மீது பரவலாக போட்டவும். தொடர்ந்து தோசை கரண்டியால் கலவையை சற்று அழுத்தி விடவும்.மூடி போட்டு வேகவிடவும்
பிறகு எண்ணெயை சுற்றிலும் ஊத்தாப்பத்தின் மீதும் ஊற்றி திருப்பி போட்டு காய்கறி கலவை சிவக்க வெந்தவுடன் எடுத்து விடவும்.
சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
0 comments